ரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி!
2017ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரெனோ கேப்ச்சர் கார்கள் சில டீலர்களில் இருப்பில் உள்ளது. இந்த ஓல்டு ஸ்டாக் மாடலை தீர்த்து கட்டும் விதமாக, 2017ம் ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட ரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.2 லட
புதிய ரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ கேப்ச்சர் கார் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேர் போட்டியாக நிலைநிறுத்தப்பட்டது. க்ராஸ்ஓவர் ஸ்டைலில், அதிக தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட இந்த மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சராசரியாக மாதத்திற்குக 2,000 கார்கள் விற்பனையாகும் என்று ரெனோ இலக்கு வைத்து களமிறக்கியது. ஆனால், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க அம்சங்களை கொண்டிருந்தாலும், ஹூண்டாய் க்ரெட்டாவுடன் போட்டி போட முடியவில்லை. விற்பனையும் மிக மோசமான அளவிலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில், 2017ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரெனோ கேப்ச்சர் கார்கள் சில டீலர்களில் இருப்பில் உள்ளது. இந்த ஓல்டு ஸ்டாக் மாடலை தீர்த்து கட்டும் விதமாக, இருப்பில் தேங்கி இருக்கும் ரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தற்போது ரெனோ கேப்ச்சரின் பேஸ் மாடல் ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

க்ராஸ்ஓவர் டிசைனிலான ரெனோ கேப்ச்சர் கார் இரட்டை வண்ணக் கலவை கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டைனமிக் இண்டிகேட்டர்கள், 17 அங்குல க்ரிஸ்ட்டல் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் 210மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

இரட்டை வண்ண இன்டீரியர் இந்த காரின் பிரிமியம் அம்சமாக இருக்கிறு. தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிறப்பான டிரைவிங் பொசிஷன், வசதியான இருக்கைகள் இந்த காரின் உட்புறத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள். இதுதவிர, ஏராளமான வசதிகளை அளிக்கிறது.

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் அக்செஸ் கார்டு, ரியர் வியூ பார்க்கிங் கேமரா, ஹில் அசிஸ்ட், ஸ்பீடு லிமிட்டருடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் கேப்ச்சர் காரிலும் இடம்பெற்றுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 106 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

2017ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரெனோ கேப்ச்சர் இருப்பு இருக்கும் விபரத்தை அருகிலுள்ள ரெனோ ஷோருமை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும். மேலும், இந்த ஆஃபர் குறித்தும் ஒரு விசாரணையை போட்டுவிட்டு ஷோரூமுக்கு செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








