எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

By Arun

இந்திய கப்பற்படையில் உள்ள பி8ஐ போர் விமானங்கள், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றன. எனினும் கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குவதில், இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்டைலர்களில் காணலாம்.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு, இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இதனால் அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த சில மாதங்களுக்கு முன், அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 30 பொருட்களுக்கான வரியை சில நாட்களுக்கு முன் இந்தியா உயர்த்தியது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

இதில், அமெரிக்காவின் 800 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட பைக்குகள், ஆப்பிள், பாதம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். அமெரிக்காவை பழிவாங்கும் விதமாகதான் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை முதல் முறையாக இந்தியா மேற்கொண்டது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டி வருவதால், இரு நாடுகளின் வியாபாரிகளுமே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே பிரச்னையை சுமூகமாக களைய, இரு நாடுகளின் உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

இதனிடையே வர்த்தக போருக்கு மத்தியிலும், அமெரிக்காவிடம் இருந்து அடுத்த 7-8 ஆண்டுகளில், 1,000 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவிடம் இருந்து, ஆயில் மற்றும் எரிவாயு (Gas) கொள்முதலை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

இதுதவிர அமெரிக்கா மூலமாக ராணுவ பலத்தை அதிகரித்து கொள்ளவும் இந்தியா விரும்புகிறது. இதற்காக போயிங் பி8ஐ (P8i) எனப்படும் அதிசக்தி வாய்ந்த 12 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டிருந்தது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

அந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர இந்தியா தற்போது முயற்சி செய்கிறது. P8i விமானங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே உள்ளன. இந்திய கப்பற்படையில் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவை தவிர்த்து விட்டு பார்த்தால், P8i விமானங்களை அதிகம் வைத்திருக்கும் நாடு இந்தியாதான்.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

எனினும் கூடுதலாக 12 P8i விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்க கப்பற்படையால் இயக்கப்படும் P8a விமானத்தின் ஒரு வேரியண்ட்தான் P8i.இந்தியாவின் பரந்த கடற்பரப்பை பாதுகாக்கும் பணியில், P8i ஈடுபட்டுள்ளது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

இந்திய நாடானது 7,500 கிலோ மீட்டர் கடற்கரைகளை கொண்டது. ஏராளமான தீவுகளும் உள்ளன. எதிரி நாடுகளின் போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களால் அவை பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே இந்திய கடற்பரப்பையும், தீவுகளையும் பாதுகாக்கும் பணியில் P8i ஈடுபட்டு வருகிறது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும், ஹார்பான் பிளாக்-II ஏவுகணைகள், MK-54 லைட்வெயிட் நீர்மூழ்கி குண்டுகள் என மிரட்டலான ஆயுதங்கள் P8i விமானத்தில் உள்ளன. எனவே P8i துணை போர் விமானமாகவும் கருதப்படுகிறது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

P8i விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 907 கிலோ மீட்டர்கள். இதன் நீளம் 39.47 மீட்டர்கள். உயரம் 12.83 மீட்டர்கள். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 4,500 நாட்டிகல் மைல் வரை பறக்கும் திறன் P8i விமானத்திற்கு உள்ளது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. கூடுதலாக 12 பி8ஐ போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வெளியான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

Image Source: Indian Navy

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Amid trade war, India offers to buy 1,000 planes, more oil from US. Read in tamil.
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more