புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... இல்லேன்னா....?!

Posted By:

கடந்த டிசம்பரில் கார் நிறுவனங்கள் வழங்கிய சலுகைகள், தள்ளுபடிகளை புறக்கணித்து 2015ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்தான் வேண்டும் காத்திருந்தவர்கள் தற்போது தங்களது கார் வாங்கும் படலத்தை முழு வீச்சில் துவங்கியுள்ளனர்.

ஆனால், அவர்கள் காலம் தாழ்த்தினால், விலை உயர்வு அபாயத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. விலை உயர்விலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

சலுகைகள் 'கட்'!

சலுகைகள் 'கட்'!

கடந்த மாத கார் விற்பனை இதற்கு சாட்சியாக இருக்கிறது. உற்பத்தி வரி குறைக்கப்பட்டபோதிலும், கார் விற்பனை சற்று ஏற்றம் கண்டிருப்பதால், மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தற்போது சலுகைகளை குறைத்துக்கொண்டுள்ளன. குறிப்பாக, பெட்ரோல் விலை கணிசமாக குறைந்ததையடுத்து, பெட்ரோல் கார்களுக்கு டிமான்ட் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, பெட்ரோல் கார்களுக்கு ஒரு ரூபாய் கூட சலுகையில்லாத நிலை தற்போது இருக்கிறது.

 காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

பெட்ரோல் கார்களின் உற்பத்தி மிக குறைவான எண்ணிக்கையிலையே கார் நிறுவனங்கள் வைத்திருந்தன. இந்த நிலையில், பெட்ரோல் விலை குறைவால் பெட்ரோல் கார்களுக்கு ஏற்பட்டிருக்கும் டிமான்ட்டை சமாளிக்க சற்று திணறி வருகின்றன சில கார் நிறுவனங்கள். 15 நாட்களில் டெலிவிரி கொடுக்கப்பட்ட, குறிப்பிட்ட கார்களின் பெட்ரோல் மாடல்களுக்கு தற்போது 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

மவுசு குறைந்த டீசல் கார்கள்

மவுசு குறைந்த டீசல் கார்கள்

கடந்த ஆண்டு போல டீசல் கார்களுக்கு தற்போது டிமான்ட் இல்லை. டிமான்ட் குறைந்ததையடுத்து, இருப்பு அதிகரித்து வருவதால், டீசல் கார்களுக்கு தற்போது சிறப்பு சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

விலை உயர்வு அச்சம்

விலை உயர்வு அச்சம்

இந்த மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், கார்களுக்கான வரி உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அவசரமாக காரை டெலிவிரி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை, மத்திய பட்ஜெட்டில் கார்களுக்கான வரி உயர்த்தப்பட்டால், அதன் பிறகு காரை டெலிவிரி பெறுபவர்கள் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

சரியான தருணம்

சரியான தருணம்

எனவே, டீலர்களில் முன்பதிவு செய்யும்போது, விலை உயர்வு பற்றி அவசியம் கேட்டு உறுதி செய்து கொள்வது அவசியம். சில கார் டீலர்களில் முன்பதிவு தொகையை தவிர்த்து, முழுமையான முன்பணத்தை செலுத்தி உறுதி செய்துவிட்டால், விலை உயர்வு பற்றி அச்சம் தேவையில்லாததாக இருக்கும். முன்பதிவு செய்யும்போது எந்த விலை இருந்தததோ, அதே விலையில் டெலிவிரி செய்வதற்கு சில டீலர்கள் உத்தரவாதம் கொடுக்கின்றனர்.

இரு வார அவகாசம்

இரு வார அவகாசம்

காலம் தாழ்த்தாமல் உடனடியாக காரை முன்பதிவு செய்து அதற்குரிய நடைமுறைகளை இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் முடித்துக் கொள்வது பலன் தரும். இல்லையெனில், விலை உயர்வால் நீங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை மனதில் வையுங்கள்.

தயாரிப்பு தேதி

தயாரிப்பு தேதி

காரை டெலிவிரி எடுக்கும்போது இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்தானா என்பதை உறுதிசெய்து வாங்குங்கள். வாடிக்கையாளர் அவசரப்படுத்தும்போது, சில டீலர்களில் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பு இருக்கும் காரை டெலிவிரி கொடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி, கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல் என்றால் விலையில் தள்ளுபடி கேட்டு பேரம் பேசி வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய கார்களின் ஆன்ரோடு விலை

புதிய கார்களின் ஆன்ரோடு விலை

புதிய கார்களின் ஆன்ரோடு விலைக்கு க்ளிக் செய்க.

 
English summary
If you are in the market for a new vehicle, now is a good time to start looking.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark