போலீஸ் உடுப்பில் பிஎம்டபிள்யூவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
கடந்த செப்டம்பரில் நடந்த பிராங்க்ஃபர்ட் ஆட்டோமொபைல் கண்காட்சியில் பிஎம்டபிள்யூ சி எவொலியூஷன் ஸ்கூட்டரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் பாதுகாப்பு துறை கண்காட்சியில் பிஎம்டபிள்யூ சி எவொலியூஷன் ஸ்கூட்டரின் போலீஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பவர்ஃபுல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கூறலாம். இந்த ஸ்கூட்டரின் எலக்ட்ரிக் மோட்டார் 600சிசி மோட்டார்சைக்கிள்களின் எஞ்சின்களுக்கு இணையான பவரையும், பெர்ஃபார்மென்சையும் வழங்கும்.

போலீஸ் உடுப்பு
இந்த ஸ்கூட்டர் காவல்துறையினர் பயன்படுத்துவதற்கான பிரத்யேக வண்ண ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை கொண்டிருக்கிறது.

கஸ்டமைஸ்
இந்த ஸ்கூட்டரை கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். தவிர, பிரத்யேக ஒலிப்பான் மற்றும் சுழல் விளக்குகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

பவர்
எலக்ட்ரிக் ஸ்கூட்டரான இதில் 15 எச்பி முதல் 47 எச்பி வரை ஆற்றலை தரும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு
அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேட்டரி
டை காஸ்ட் அலுமினிய கேஸிங்கிற்குள் 8 kWh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்
ஒருமுறை பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் 100 கிமீ தூரம் வரை செல்லலாம்.

போலீஸ் மாடல்கள்
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தவிர பிஎம்டபிள்யூ ஆர் 1200ஆர்டி, எஃப் 800ஜிடி, எஃப்700 ஜிஎஸ் ஆகிய போலீஸ் மாடலாக மாற்றப்பட்ட மோட்டார்சைக்கிள்களையும் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








