நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

ஆட்டோமொபைல் துறைக்கும் தமிழகத்துக்கும், குறிப்பாக சென்னைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. தமிழக ஆட்டோமொபைல் துறையும், மோட்டார் பந்தய துறையும் மிக நீண்ட காலமாக பல்வேறு உன்னதமான விஷயங்களையும், பெருமைகளையும் தேசத்திற்கு வழங்கி வந்துள்ளன. அந்த வகையில், இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழகத்தின் பெருமைக்குரிய அடையாளங்கள், பிரபலங்கள் குறித்த பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Narain KarthikeyanImage Credit: Wiki Commons/Dan Smith

01. இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 கார் பந்தய வீரர்

இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 கார் பந்தய வீரரை வழங்கிய பெருமை தமிழகத்திற்கு உண்டு. நரேன் கார்த்திகேயன் கோவையை சேர்ந்தவர். நரேன் கார்த்திகேயன் தந்தையும் கார் பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Kumar Narain Karthikeyan Image Courtesy: Wiki Commons

02. 24 ஹவர்ஸ் லீமான்ஸ் ரேஸில் பங்கு கொண்ட முதல் இந்தியர்

ஃபார்முலா-1 கார் பந்தயம் மட்டுமின்றி, 24 ஹவர்ஸ் லீமான்ஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையும் நரேன் கார்த்திகேயனுக்கு உண்டு. உலக அளவில் பல்வேறு முதல் தர கார் பந்தயங்களில் பங்கு கொண்டு பல சாதனைகளையும் புரிந்தவர். கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவின் மதிப்புவாய்ந்த பத்மஸ்ரீ விருதை பெற்றிருக்கிறார்.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

03. சர்வதேச ரோடு ரேஸிங் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் இந்தியர்

சர்வதேச ரோடு ரேஸிங் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் சென்னையை சேர்ந்த பிரபல மோட்டார் பந்தய வீரர் ரஜினி கிருஷ்ணன். 2013ம் ஆண்டு சர்வதேச ரோடு ரேஸிங் போட்டியில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

04. இந்தியாவில் முதல் பிஎம்டபிள்யூ கார் ஆலை

இந்தியாவில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் உற்பத்தி ஆலை சென்னையில் உள்ளது. 2007ம் ஆண்டு பிஎம்டபிள்யூ கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டன. இங்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ், 5 சீரிஸ், 7 சீரிஸ், எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்7, மினி கன்ட்ரிமேன் உள்பட 11 சொகுசு கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் 650 பேர் பணிபுரிகின்றனர்.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

05. இந்தியாவின் முதல் நிரந்தரமான மோட்டார் பந்தய களம்

நிரந்தரமான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் மோட்டார் பந்தய களம் என்ற பெருமையை சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் (MMRT) பெற்றுள்ளது. 1990ம் ஆண்டு திறப்பு விழா கண்டது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Royapuram Railway Station Image Courtesy: Wiki Commons/Darren Burnham

06. இன்று வரை செயல்பாட்டில் இருக்கும் இந்தியாவின் பழமையான ரயில் நிலையம்

சென்னை, ராயபுரம் ரயில் நிலையம்தான் இன்று வரை செயல்பாட்டில் இருக்கும் இந்தியாவின் மிக பழமையான ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் 1853ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. தென் இந்தியாவின் முதல் ரயில் ராயபுரத்திலிருந்து ஆற்காடு நவாப்பின் தலைமையிடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது. சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Electric Tram India Image Courtesy: Dinamalar

07. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டிராம் போக்குவரத்து துவங்கப்பட்ட இடம்

முதல்முதலாக 1,873ம் ஆண்டு கொல்கத்தாவில் டிராம் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆனால், மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் டிராம் ரயில் போக்குவரத்து சென்னையில்தான் முதன்முதலில் துவங்கப்பட்டது. 1,895ம் ஆண்டு இங்கு மின்சாரத்தில் இயங்கும் டிராம் போக்குவரத்து துவங்கப்பட்டது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

08. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள மிகப்பெரிய துறைமுகம்

சென்னை துறைமுகம்தான் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள மிகப்பெரிய துறைமுகம் என்ற பெருமையை பெறுகிறது. 1881ம் ஆண்டு சென்னை துறைமுகம் திறக்கப்பட்டு இன்று இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மிகப்பெரிய துறைமுகமாக மாறி இருக்கிறது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Madras City (First City of India) Image Courtesy: Wiki Commons

09. இந்தியாவின் மிகவும் பழமையான மாநகராட்சி

இந்தியாவின் மிகவும் பழமையான மாநகராட்சி என்ற பெருமை சென்ன மாநகராட்சிக்கு உண்டு. சென்னை மாநகராட்சி 1688ம் ஆண்டு அமைக்கப்பட்டு இன்று பெருநகர அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

World War 1 Image Courtesy: Wiki Commons/Agence Rol

10. முதல் உலகப்போரின்போது தாக்குதலுக்கு உள்ளான இந்திய நகரம்

முதல் உலகப்போரின்போது ஜெர்மனிக்கு சொந்தமான எம்டன் கப்பல் வங்காள விரிகுடாவில் அதிரடியாக நுழைந்து சென்னை நகரின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. 1914ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் சிறிய அளவிலான பாதிப்புகளை சென்னை சந்தித்தது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

11. மிகப்பெரிய நீதிமன்ற வளாகம்

உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகப்பகுதியை கொண்டதாக சென்னை உயர்நீதமன்றம் பெருமை பெற்றுள்ளது. இந்த நீதிமன்ற வளாகம் 107 ஏக்கர் பரப்பளவுடன் 1862ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

12. நவீன இந்தியாவின் முதல் நகரம்

நவீன இந்திய தேசத்தின் முதல் நகரம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னை நகரம் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்திய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Fort St. George Image Courtesy: Wiki Commons/L.vivian.richard

13.இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் ஆங்கிலேயர் கோட்டை

இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் ஆங்கிலேயர் கோட்டை என்ற பெருமை சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளது. 1644ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கோட்டைதான் தற்போது தமிழக அரசின் தலைமை செயலகமாக செயல்பட்டு வருகிறது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

14. குடியரசு இந்தியாவின் முதல் தேசியக் கொடி நெய்து உருவாக்கப்பட்ட இடம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில்தான் குடியரசு இந்தியாவின் முதல் தேசியக் கொடி நெய்து உருவாக்கப்பட்டது. இந்த தேசியக் கொடி சுதந்திர தினத்தன்று இரவு டெல்லி செங்கோட்டையில் இந்த கொடி ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

15. இந்தியாவின் மிக நீளமான கடற்கரை

இந்தியாவின் மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை சென்னை மெரினா கடற்கரைதான் பெறுகிறது. இது 6 கிமீ தூரம் நீண்டுள்ளது. சென்னை நகரின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Vintage Indian National Flag Image Courtesy: Wiki Commons/L.vivian.richard

16. இந்தியாவின் மிக பழமையான தேசியக் கொடி உள்ள இடம்

இந்தியாவின் மிக பழமையான தேசியக் கொடி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்டது. இந்த கொடி 1947ம் ஆண்டு முதல்முறையாக ஏற்றப்பட்டது. தற்போது இந்த தேசியக் கொடி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

17. இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்தியர்

உலக புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு அவர் ஆஸ்கார் விருதுகளை வென்று தமிழகத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

18. இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் செஸ் வீரர்

இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் பலமுறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Madras Central Prison Image Courtesy: Wiki Commons/Simply CVR

19. இந்தியாவின் மிக பழமையான சிறை

இந்தியாவின் மிக பழமையான சிறை என்ற பெருமையை சென்னை மத்திய சிறை பெறுகிறது. கடந்த 1837ம் ஆண்டு இந்த சிறை செயல்பாட்டுக்கு வந்தது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

20. இந்தியாவின் அதிவேக இன்டர்நெட் உள்ள நகரம்

இந்தியாவின் அதிவேக இன்டர்நெட் சேவை உள்ள முதன்மையான நகரம் என்ற பெருமையை சென்னை பெறுகிறது. ஓக்லா தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் 20 பெரு நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுத் தரவுகளின்படி, சென்னையில் ஃபிக்ஸ்டு பிராண்டுபேண்ட் சேவையானது 51.07 எம்பிபிஎஸ் என்ற வேகத்தில் தரவிறக்கம் செய்யும் வேகத்தை பெற்றிருக்கிறது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Madras General Hospital Image Courtesy: Wiki Commons/VtTN

21. இந்தியாவின் முதல் நவீன மருத்துவமனை

நவீன கட்டமைப்புகள் கொண்ட இந்தியாவின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி பொது மருத்துமனை பெறுகிறது. 1664ம் ஆண்டு ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பெனியால் அமைக்கப்பட்டது. தற்போது 3,000 படுக்கை வசதிகளுடன் ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனைகளில் ஒன்றாகவும் பெயர் பெற்றிருக்கிறது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

St. Mary's Church Image Courtesy: Wiki Commons/L.vivian.richard

22. ஆங்கிலேயரால் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் தேவாலயம்

ஆங்கிலேயரால் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் தேவாலயம் என்ற பெருமையை சென்னையிலுள்ள செயிண்ட் மேரிஸ் சர்ச் பெறுகிறது. 1680ம் ஆண்டு இந்த தேவாலயம் அமைக்கப்பட்டது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

St. George's School Image Courtesy: Wiki Commons/Ramkye

23. ஆசியாவின் உள்ள மிக பழமையான மேற்கத்திய பள்ளிக்கூடம்

ஆசியாவில் உள்ள மிக பழமையான மேற்கத்திய பள்ளிக்கூடம் என்ற பெருமையை சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கூடம் பெறுகிறது. 1715ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Oldest British Building Fort St. George Image Courtesy: Wiki Commons

24. இந்தியாவில் உள்ள மிக பழமையான ஆங்கிலேயர் கட்டடம்

இந்தியாவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிக பழமையான கட்டடம் என்ற பெருமையையும் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைதான் பெறுகிறது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

25. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள மிக பழமையான முதல் பொறியியல் கல்லூரி

ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட மிக பழமையான பொறியியல் கல்லூரி என்ற பெருமையை கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரி பெறுகிறது. 1794ம் ஆண்டு இந்த கல்லூரி, அளவையியயல் தொடர்பான பாடத்திட்டத்துடன் ஒரே ஒரு மாணவருடன் துவங்கப்பட்டது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Chepauk Palace Image Courtesy: Wiki Commons/Williamsatish25

26. இந்தோ-சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் இந்தியாவின் முதல் கட்டடம்

இந்தோ-சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் கட்டடம் என்ற பெருமையை சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹால் பெறுகிறது. 1768ம் ஆண்டு இந்த கலச மஹால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Spencer Plaza Image Courtesy: Wiki Commons/Ashwin Kumar

27. இந்தியாவின் முதல் பேரங்காடி வளாகம்

இந்தியாவின் முதல் பேரங்காடி வளாகம் என்ற பெருமையை சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாஸா பெறுகிறது. 1985ம் ஆண்டு ஸ்பென்சர் பிளாஸா துவங்கப்பட்டது. சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

28. மோட்டோ ஜீபி பந்தயத்தில் பங்கு கொண்ட முதல் இந்தியர்

மோட்டோஜீபி பைக் பந்தயத்தில் பங்குகொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த ஷரத்குமார் பெற்றுள்ளார்.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Karun Chandhok Image Courtesy: Wikimedia

29. ஃபார்முலா இ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர்

பேட்டரியில் இயங்கும் ஃபார்முலா -1 மின்சார கார்களுக்கான பந்தயத்தில் பங்கு கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த கருண் சந்தோக் பெற்றிருக்கிறார்.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

Dr Arvind Thiruvengadam Image Courtesy: SBS

30. ஃபோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடியை வெளிக்கொண்டு வந்தவர் யார் தெரியுமா?

ஆட்டோமொபைல் உலகையே கலங்க வைத்த ஃபோக்ஸ்வேகன் கார்களின் மாசு உமிழ்வு மோசடியை முதல்முதலில் கண்டறிந்து கூறியவர் அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான டாக்டர் அரவிந்த் திருவேங்கடம். இதன் பின்னரே இந்த மாபெரும் மோசடி உலக அளவில் பெரும் புயலை கிளப்பியது.

நாகரீக இந்திய தேசத்தின் 'தலைமகன்' சென்னை... எவ்வளவு பெருமைகள் தெரியுமா?

பட்டியல் நீள்கிறது....

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, எச்.சி.எல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் அதிபர் ஷிவ் நாடார் என்று இந்த பட்டியல் நீள்கிறது. அதேபோன்று, தென் இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையின் பிதாமகனாக போற்றப்படும் கோவை கரிவர்தன், விஞ்ஞானி ஜிடி நாயுடு என்ற பல ஆளுமைகள் நினைவுகூறத்தக்கவர்களாக இருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here we compiled some interesting historical facts of Tamilnadu motorsports and automobile industry.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X