தென்னிந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகின் பிதாமகன் கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

Written By:

இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகின் முன்னோடிகளில் ஒருவர் கோவையை சேர்ந்த கரிவர்தன். கார் பந்தய வீரர், பந்தய கார் வடிவமைப்பு நிபுணர், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்ட கோவை கரிவர்தன் இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர்.

இன்று அவரது பிறந்தநாள். அவரது சாதனைகளை போற்றும் விதத்தில், அவரது பிறந்தநாள் சிறப்பு பகிர்வாக இந்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பெருமையுடன் வழங்குகிறது.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

கோவை கரிவர்தன் குறித்து ஏற்கனவே நாம் சிறப்பு செய்தித் தொகுப்பை வழங்கி இருக்கிறோம். எனவே, அவரது சாதனைகள் பற்றி ஏற்கனவே முழுமையாக வழங்கி இருக்கிறோம். அதேநேரத்தில், இந்திய அளவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் தமிழகத்திற்கு முக்கிய இடத்தை ஏற்படுத்தி தந்தவர் கரிவர்தன்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

கடந்த 1995ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் மரணமடைந்துவிட்டார். இருப்பினும், இன்றளவும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மற்றும் பந்தய வீரர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார்.

அதனை பரைசாற்றும் விதமாக, இன்று அவரது பிறந்தநாளையொட்டி, அவர் வரைந்த கார் ஓவியங்களை பெங்களூரை சேர்ந்த பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் பிரதாப் ஜெயராம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து நினைவு கூர்ந்துள்ளார். கரிவர்தனும், பிரதாப் ஜெயராமனும் மிக நெருங்கிய நண்பர்கள். சிறு வயதில் இருந்தே ஒன்றாக நட்புடன் பழகியவர்கள்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

இதன்மூலமாக, கரிவர்தன் மீது அவரது நண்பர்களுக்கும், மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையினருக்கும் இருக்கும் ஆர்வத்தை தெரிந்துகொள்ள முடியும். இந்த படத்தில் மிக நுட்பமான முறையில் கரிவர்தன் வரைந்திருக்கும் ஓவியங்கள் மூலம், அவருக்கு இருந்த ஈடுபாடும், ஆர்வமும் தெரிந்து கொள்ள முடிகிறது.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

மேலும், பிரதாப் ஜெயராம் ட்யூனிங் செய்த அல்லது உருவாக்கிய கார்களையே கரிவர்தன் வரைந்து கொடுத்தார் என்பது கூடுதல் விசேஷ தகவல். பச்சை வண்ண கார் ஸ்டான்டர்டு சூப்பர் 10 என்ற பெயரில் ஏடி. ஜெயராம் உருவாக்கி உள்ளார். நீல வண்ண கார் ஹெரால்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மாடல். இதனை பிரதாப் ஜெயராம் உருவாக்கி உள்ளார்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

ஜெயராம் ஜிடி என்ற மாடல்தான் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பார்க்கிறீர்கள். ஜெயராம் ஸ்பெஷல் அடர் பச்சை வண்ணத்தில் இருக்கிறது. இந்த கார்களை 1979 மற்றும் 1983 காலக்கட்டங்களில் வடிவமைக்கப்பட்டதாகவும் பிரதாப் ஜெயராமன் நினைவுகூர்ந்துள்ளார்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

கரிவர்தன் மீது இந்தளவு மதிப்பு வைத்து நினைவுகூர்ந்துள்ள பிரதாப் ஜெயராம் ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ரேவா எலக்ட்ரிக் கார் உருவாக்கத்தில் முக்கியமானவர்களில் ஒருவர். தற்போது மந்த்ரா ரேஸிங் என்ற பந்தய கார் வடிவமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார். பிரதாப் ஜெயராம் தந்தை ஏ.டி.ஜெயராமும் கார் ட்யூனிங் செய்வதில் பெயர் பெற்றவர்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

டிராக் ரேஸில் பிரதாப் ஜெயராம் நிறுவனம் உருவாக்கிய ரேவாபூசா என்ற மாறுதல் செய்யப்பட்ட கார் பலரையும் வியக்க வைத்தது. அதாவது, ரேவா எலக்ட்ரிக் காரில் சுஸுகி சூப்பர் பைக்கின் 1,000சிசி எஞ்சினை பொருத்தி டிராக் ரேஸில் விட்டனர். 0 -100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 5 வினாடிகளில் எட்டி அசர அடித்தது. பாபி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் ஜெயராம் மகன் சரண் ஜெயராம்தான் இந்த காரை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அதாவது, மூன்றாவது தலைமுறையாக மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகில் ஜெயராம் குடும்பத்தின் பங்களிப்பு தொடர்கிறது.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

இவர் போன்று மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் தீவிர ஈடுபாடுடைய பலரும் கரிவர்தன் மீது அளப்பரிய மதிப்பை வைத்துள்ளனர். இவர் மட்டுமல்ல, இன்றைக்கு உலக அளவில் இந்திய மோட்டார் பந்தய துறைக்கு தூதுவர்களாக விளங்குபவர்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் கரிவர்தன்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

ஆம், இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரர்களான நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் மற்றும் அர்மான் இப்ராஹீம் போன்ற இன்றைய தலைமுறை கார் பந்தய வீரர்களுக்கு மிக குறைவான விலையில் ரேஸ் கார்களை வடிவமைத்து கொடுத்து அவர்களுக்கு ரேஸ் உலகில் முக்கிய இடத்தை பிடிக்க உதவியவர்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

கரி என்று செல்லமாக அழைக்கப்படும் கரிவர்தன் கோவை லெட்சுமி மில்ஸ் அதிபரின் புதல்வர். 1954ம் ஆண்டு கோவையில் பிறந்த கரிவர்தன் பள்ளிப்படிப்பையும், தொழில்நுட்பக் கல்வியையும் பிஎஸ்ஜி கல்லூரியில் முடித்தார். அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் படித்தார்.

கோவை கரிவர்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

கரிவர்தனின் அளப்பரிய பணிகளை உலகுக்கு பரைசாற்றும் விதத்திலேயே, கோவை ரேஸ் டிராக்கிற்கு அவரது பெயரே சூட்டி பெருமைப்படுத்தி உள்ளனர். இந்திய ரேஸ் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் கரிவர்தன் என்றால் மிகையில்லை.

English summary
Covai Karivardhan Birthday Special Article.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark