பலரின் மனதை கவர்ந்த ஆட்டோ டிரைவர்... மேற்கூரையில் செடிகளை வளர்க்க இதுதான் காரணமா... சூப்பரா இருக்கு!
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவரின் ஆட்டோவின் மேற்கூரையில் செடிகளை வளர்த்து வருகின்றார். இதற்கு அவர் கூறும் சுவாரஷ்ய காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது. அதேநேரத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. உச்சபட்ச வெயில் காரணமாக நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தீ விபத்து நிகழ்வுகள்கூற அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்த தீ விபத்து நிகழ்வுகள் நாட்டில் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த தீ விபத்தின் காரணத்தினால் சில அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இதற்கு தீ விபத்து முக்கிய காரணமாக இருந்தாலும், கொளுத்தும் வெயில் தாக்கத்தினாலேயே மின்சார இருசக்கர வாகனங்கள் தீ பிடிக்கின்றன என பலரால் கூறப்படுகின்றது.

அந்தளவிற்கு மிக மோசமாக வெயில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அடிக்கும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு ஆட்டோ டிரைவர் ஒருவர் விநோத யுக்தியைக் கையாண்டிருக்கின்றார். அவர், ஆட்டோ மேற்கூரையின்மீது சில செடிகளை வளர்க்க செய்திருக்கின்றார்.

கொளுத்தும் வெயில் இருந்து இந்த செடி தன்னையும், தன் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளையும் காக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இதனை செய்திருக்கின்றார். கடந்த காலங்களில் வட மாநில மக்கள் ஒரு சிலர், அவர்களின் கார்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக சாணியால் பூசி அவற்றை பாதுகாத்தனர். இவ்வாறு செய்வதன் வாயிலாக கார் குளிர்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாதிரியான நிலையில் ஓர் ஆட்டோ டிரைவர் ஆட்டோவின் மேற்கூரையின் மீது மினி தோட்டத்தை உருவாக்கியிருக்கின்றார். ஓட்டுநரின் இந்த யுக்தியைக் கண்டு பலர் அவரை பாராட்டத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக இதற்காகவே ஒரு சிலர் குறிப்பிட்ட அந்த ஆட்டோவில் பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சிலர் செல்ஃபியும் எடுத்து வருகின்றனர்.

சில இன்ஸ்டா பயனர்கள் ஆட்டோவை ரீல்ஸில் பதிவிட முயற்சி செய்ததாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக நெட்டிசன்கள் மத்தியில் ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. டெல்லியைச் சேர்ந்த மஹேந்திரா குமார் (48) எனும் ஆட்டோ ஓட்டுநரே அவரது ஆட்டோவின் மேற்கூரையில் மினி தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார்.

20 வெவ்வேறு விதமான செடிகளை ஆட்டோ மீது அவர் நட்டுள்ளார். மூளிகை, காய்கறி போன்றவற்றை அவர் நட்டிருக்கின்றார். எனவேதான் பலரின் கவனத்தை ஆட்டோ ஓட்டிநரின் செயல் ஈர்த்திருக்கின்றது. இதனை இயற்கை குளிர்சாதனம் என சில பயணிகள் புகழாரம் சூட்டுவதாக மஹேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

புற்கள், கீரை, தக்காளி மற்றும் சிறு தானியம் உள்ளிட்ட பல்வேறு செடிகளை மஹேந்திரா குமார் வைத்திருக்கின்றார். இந்த செடிகளுக்கு நாளுக்கு இரு முறை தண்ணீர் தெளிப்பதாக அவர் கூறுகின்றார். ஆகையால், செடிகள் அனைத்தும் கொளுத்தும் வெயில் வாட்டி வதைக்கின்ற போதிலும் பசுமையாக காட்சியளிக்கின்றன.

இந்த செடிகள் அடிக்கும் வெயில் இருந்து காப்பது மட்டுமின்றி அத்தியாவசிய காய்-கறிகளையும் வழங்க தொடங்கியிருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்த திட்டத்தை வகுத்து வந்தநிலையில், இந்த ஆண்டு செடிகள் வளர்க்கும் திட்டத்தை அவர் செயல்படுத்தியிருக்கின்றார்.
Source: AFP, india today
இந்த செயல் சாத்தியமா?
செடிகளை வளர்க்கும் எண்ணம் இருந்தால் இது சாத்தியம்தான். மஹேந்திர குமார், செடிகளை வளர்ப்பதற்காக ஆட்டோவின் மேற்கூரை மீது முதலில், மேட் ஒன்றை போட்டிருக்கின்றார். அதைத்தொடர்ந்து, சாக்கு மூட்டை ஒன்றையும் விரித்து வைத்துள்ளார். இதற்கே மேல், மூன்றாவது அடுக்காகவே மண் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும்தான் செடிகள் ஆரோக்கியமாகவும், பசுமையாகவும் வளர உறுதுணையாக இருக்கின்றன. அதேவேலையில், மேட் காற்றில் பறந்திடாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக அதனை முன் மற்றும் பின் பக்கத்தில் கயிறு போட்டு கட்டியிருக்கின்றார்.
வாகனங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இது மட்டும்தான் வழியா?, இல்லை இன்னும் பல இருக்கின்றன. அவைகுறித்த தகவலைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications