ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

ரோந்து பணிகளுக்காக பறக்கும் பைக் மாடலை துபாய் போலீசார் வாங்கி உள்ளனர்.

By Saravana Rajan

ரோந்து மற்றும் அவசர உதவிகளுக்காக ஹோவர் பைக்கை துபாய் போலீசார் வாங்கி இருக்கின்றனர். இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையில் துபாய் முதன்மை வகிக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், ரோந்து பணிகளுக்காகவும் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்களை துபாய் போலீசார் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தவிரவும் புதுமையான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர்.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

லம்போர்கினி, ஃபெராரி... ஏன், புகாட்டி வேரான் கார் கூட துபாய் போலீசாரிடம் உள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு புதுமையான தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்களை வாங்குவதிலும் துபாய் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

இந்த ஹோவர் பைக்கை ரோந்து பணிகளுக்காகவும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதத்திலும் பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

இந்த ஹோவர் பைக்கை ரஷ்யாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. பார்ப்பதற்கு தேள் போன்று இருப்பதாலோ என்னவோ, இதனை ஸ்கார்ப்பியான் என்று குறிப்பிடுகின்றனர்.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

இந்த ஹோவர் பைக் மணிக்கு 64 கிமீ வேகம் வரை வானில் பறக்கும். பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் இந்த ஹோவர் பைக் அதிகபட்சமாக 25 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

ஒற்றை இருக்கை வசதி கொண்ட இந்த ஹோவர் பைக் 272 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டது. ஒருவர் அமர்ந்து இயக்க முடியும். இதனை ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் ஆள் இல்லாமலும் இயக்கலாம்.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

இந்த ஸ்கார்ப்பியான் பறக்கும் பைக் தவிர்த்து, மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த மின்சார பைக் மாடலையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டமும் அந்நகர போலீசாரிடம் உள்ளது.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

இந்த பைக்கை ஜப்பானை சேர்ந்த மிகாசா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் தானியங்கி பறக்கும் டாக்சியை துபாய் போக்குவரத்துத் துறை சோதனை ஓட்டம் நடத்த துவங்கியது.

ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!

மொத்தத்தில் உலகிலேயே முதல் ஸ்மார்ட் நகரமாக துபாயை மாற்றுவதற்கான முழு வீச்சிலான முயற்சிகளையும், பணிகளையும் துபாய் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Dubai Police has taken to a whole new level and have decided to patrol from the sky with what can be described as a flying motorbike.
Story first published: Monday, October 16, 2017, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X