எலெக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்.. உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு!

எலெக்ட்ரிக் வாகனங்களில் செயற்கையான எஞ்ஜின் மற்றும் சைலன்சர் சப்தத்தை எழுப்பும் கருவியைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இவை சுற்றுப்புறச்சூழலுக்கு நண்பன் என்பதாலும், குறைந்த பராமரிப்பில் அதிக பலன்களை வழங்குவதாலும் இதனை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.

அதுமட்டுமின்றி, எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளை தவிர்க்க, உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

அந்தவகையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மானியம் வழங்குதல் போன்ற சிறப்பு சலுகைகளை அரசு அறிவித்து வருகின்றன.

இருப்பினும், இந்தியாவில் சில காரணங்களால் மின் வாகன பயன்பாடு இன்னும் ஆரம்ப புள்ளியிலேயே இருக்கின்றது.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

அதேசமயம், எலக்ட்ரிக் வாகனங்களில் எஞ்ஜின் சப்தம் இல்லாதது பெரும் குறையாக இருக்கின்றது. வாகனங்களின் எஞ்ஜின் சப்தத்தை, வாகன பிரியர்கள் சிலர் இசையைப் போல் ரசித்து வருகின்றனர்.

ஆகையால், பலர் கம்பெனி தயாரிப்பு சைலென்சர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பிடித்தமான அதிக சப்தத்தை ஏற்படுத்தும் எக்சாஸ்ட் சிஸ்டம்களைப் பொருத்தி கொள்கின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

இவ்வாறு, வாகன உலகின் சூழல் இருக்க மின் வாகனங்களில் இந்த பற்றாக்குறை, வாகன பிரியர்கள் பெரும் இழப்பாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், இந்த குறையை தீர்க்கும் விதமாக ஐரோப்பா அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்தவகையில், இனி ஐரோப்பாவில் விற்பனையாகும் அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களிலும் செயற்கை சப்தத்தை வழங்கும் வசதியை மேற்கொள்ள வேண்டும் என அது அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

இந்த புதிய விதி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகையால், அந்நாட்டில் விற்பனையாகும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்கள் அனைத்திலும் செயற்கையான எஞ்ஜின் அல்லது எக்சாஸ்ட் சிஸ்டத்தின் சத்தம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

அதேபோன்று, ஏற்கனவே விற்பனைச் செய்யப்பட்ட மின்வாகனங்களிலும் இந்த வசதியை, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹைபிரிட் கார்கள் மிகவும் குறைவான சப்தத்தை எழுப்பும் தன்மைக் கொண்டவையாகும். இதுவே, இந்த கார்கள் எளிதில் விபத்தில் காரணாக இருப்பதாக கூறப்படகின்றது. அந்தவகையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், எலக்ட்ரிக் கார்களால் நிகழ்ந்த 40 சதவிகித விபத்துகள், எஞ்ஜின் சப்தம் இல்லாததாலே நிகழ்ந்திருப்பதாக நிறுபிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

இதன்காரணமாக, ஐரோப்ப அரசு அந்நாட்டில் விற்பனையாகும் அனைத்து மின் வாகனங்களில் கட்டாயம் செயற்கையாக எஞ்ஜின் சப்தம் மற்றும் சைலென்சர் சப்தத்தை எழுப்பும் கருவியைப் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

முக்கியமாக இந்த சிஸ்டமானது, எலக்ட்ரிக் கார் 20கிமீ வேகத்தில் உள்ளாக செல்லும்போது, ஆட்டோமேட்டிக்காக சப்தத்தை வழங்கும் வடிவமைக்கப்பட உள்ளது. அதேபோன்று, மின்வாகனம் ரிவர்ஸ் செய்யப்படும்போது எச்சரிக்கை ஒலியுடன் கூடிய எஞ்ஜின் சப்தத்தை வெளியேற்றவும் இது உதவும்.

எலக்ட்ரிக் வாகனங்களில் செயற்கை ஒலிப்பான் கட்டாயம்... உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய அரசு உத்தரவு...!

நமது பார்வைக்கு, எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களில் செயற்கை ஒலியை நடைமுறைக்கு கொண்டு வருவது ஐரோப்பிய ஒன்றியம் முதல் நாடாக தெரியலாம். ஆனால், அது உண்மையல்ல. ஏனென்றால், இந்த நடவடிக்கையை ஏற்கனவே, அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்புத்துறை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது.

இதேபோன்ற, பிரத்யேக வசதியை அண்மையில் இந்தியாவில் அறிமுகமாகிய ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த எக்சாஸ்ட் சிஸ்டத்தின் ஒலியை, ஸ்மார்ட்போன் மூலம் நமது தேவைக்கேற்ப மாற்றி ஒலிக்க செய்துகொள்ளும் வசதியும் அதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் குறித்த தகவலை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
No More Silence — Electric Cars In Europe To Produce Sound According To New Mandate.Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X