விதவிதமாக செருப்பு வாங்குற மாதிரி கார்களை வாங்கி குவிக்கும் பிரபல நடிகர்! பணத்த தண்ணி மாதிரி செலவழிக்கிறாங்க!

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஃபஹத் ஃபாஸில் இருக்கின்றது. இவர் தமிழில் விக்ரம் மற்றும் மாமன்னன் போன்ற முன்னணி திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்திருக்கின்றார். இத்தகைய புகழ்பெற்ற நடிகரே சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வீட்டு அலங்காரப் பொருட்களைப் போல் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்.

சமீபத்தில், இந்தியாவில் மிக மிக உயர்ந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சொகுசு கார் மாடல்களில் ஒன்றான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 கார் மாடலை அவர் வாங்கி இருந்தார். இந்த காரை கொள்முதல் செய்ததன் வாயிலாக இந்திய மோட்டார் வாகன உலகின் ஹாட் டாபிக்கா ஃபஹத் ஃபாஸில் மாறினார்.

Fahadh faasil mercedes benz gls 450

இந்த நிலையிலேயே அவர் மீண்டும் மோட்டார் வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறி இருக்கின்றார். பிராண்ட் நியூ விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியதன் காரணத்தினாலேயே அவர் வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாற்றுமொரு மாறி இருக்கின்றார். இம்முறை அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450 சொகுசு எஸ்யூவி (Mercedes Benz GLS 450 Luxury SUV) ரக காராகும்.

இந்த கார் இந்தியாவில் ரூ. 1.23 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கேரளாவில் ஆன்-ரோடில் இந்த காரின் விலை ரூ. 1.60 கோடியைத் தாண்டலாம் என யூகிக்கப்படுகின்றது. இத்தகைய மாபெரும் விலைக் கொண்ட சொகுசு காரையே ஃபஸத் ஃபாசில் வாங்கி இருக்கின்றார்.

Benz gls 450

Popular Articles: இது கண்களில்பட ஒரு வருஷமாயிருச்சா திரு துணை முதல்வர் அவர்களே! விவசாயி மகன் உருவாக்கிய அதிகம் மைலேஜ் தரும் கார்

இந்த கொச்சியில் உள்ள அவரது தந்தை இல்லத்திலேயே கார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஃபஸத் ஃபாஸிலின் தந்தையும், புகழ்பெற்ற மலையாள திரைப்பட இயக்குநருமான ஃபாஸில் இடத்திலேயே இந்த கார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் டெலிவரியின் போது ஃபஹத் ஃபாஸிலே நேரில் சென்று அந்த காரை டெலிவரி பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரின் மதிப்பு ரூ. 2.2 கோடிக்கும் அதிகம் ஆகும். இதன் டெலிவரி நிகழ்வு கடந்த ஆகஸ்டு மாத இறுதியிலேயே அறங்கேறியது. இந்த சம்பவம் அரங்கேறி முழுமையாக இரண்டு மாதங்கள் கூட முடிவுறாத நிலையில் தற்போது மற்றுமொரு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை ஃபஹத் ஃபாசில் வாங்கி இருக்கின்றார்.

இதனால்தான் அவர் தற்போது மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கின்றார். இந்தியாவின் மாபெரும் செல்வந்தர்களை போல இவர் சொகுசு கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது சொகுசு கார் பிரியர்கள் மற்றும் ஃபஹத்தின் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது.

இந்த காரை இந்தியாவில் இன்னும் சில பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், வன்ஜரமூடு, வருண் தவான், ராஜ்குமார் ராவ், ரவீனா டன்டோன், ஹூமா குரேஷி, ஃபர்ஹான் அக்தர் மற்றும் முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே, சூர்யகுமார் யாதவ் என ஏகப்பட்டபேர் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோல், ஃபஹத் ஃபாஸில் இடமும் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. முன்னதாக கூறிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 வி8 (Land Rover Defender 90 V8), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), போர்ஷே 992 கர்ரேரா எஸ் (Porsche 992 Carrera S), லேண்ட் ரோவர் ரஞ்ஜ் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) ஆகிய கார் மாடல்களே அவரிடத்தில் உள்ளன.

இதுதவிர, பிஎம்டபிள்யூ 740 ஐ எம் ஸ்போர்ட் (BMW 740i M Sport), டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire Executive Lounge) மினி கன்ட்ரீமேன் 5 டோர் வெர்ஷன் (MINI Countryman 5-Door), ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ (Volkswagen Polo GTI) மற்றும் ஹூண்டாய் கோனா (Hyundai Kona) உள்ளிட்ட கார் மாடல்களயும் ஃபஹத் ஃபாசில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக பணத்தை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, சொகுசு கார்களுக்காக அவர்கள் பணத்தை தண்ணீர் போல் செலவழிப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ஃபஸத் ஃபாசிலின் தொடர் சொகுசு கார் கொள்முதல் மிகப் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 15:33 [IST]
English summary
Fahadh faasil buys brand new mercedes benz gls 450 luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+