அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

By Balasubramanian

கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ்பாஸ்களை டிஜிட்டல் மயமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி தினசரி, மாதாந்திர, மாணவர் பஸ்பாஸ்கள் இனி ஸ்மார்ட் கார்டாக வழங்கப்படவுள்ளது. அவர்கள் பஸ்களின் பயணம் செய்யும் போது பாஸ் வைத்துள்ளவர்கள் கண்டெக்டரிடம் உள்ள மெஷினில் கட்டாயம் ஸ்வைப் செய்ய வேண்டுமாம். இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்கவும் பாஸ் பயன்பாட்டை கண்காணிக்கவும் முடியும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை மக்கள் குறைந்த விலையில் பயன்படுத்த பொதுமக்களுக்கான தினசரி பாஸ், மாத பாஸ், மாணவர்களுக்கான பாஸ், அரசு அதிகாரிகளுக்கான பாஸ், போக்குவரத்து ஊழியர்களுக்கான பாஸ் என 70 விதமான பாஸ்கள் வழங்கப்படுகிறது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

இந்த பாஸ்கள் எல்லாம் தற்போது பேப்பர் வடிவிலேயே வழங்கப்படுகிறது. இதனால் பலர் ஒரு முறை பாஸை வாங்கி விட்டு அதை புதுப்பிக்காமல் காலம் கடந்த பின்பும் அதே பாஸிலேயே பயணிப்பது, பழைய பாஸில் பிரிண்ட் செய்யப்பட்ட கடைசி தேதியை மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக போக்குவரத்து கழகத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. விற்பனை செய்யப்படும் பாஸ்கள் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடுவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லாமல் போனது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

இதையடுத்து கர்நாடகா போக்குவரத்து கழகம் தற்போது ஆக்ஸிஸ் வங்கியை நாடியுள்ளது. தற்போது அவர்கள் வழங்கிய ஐடியாவின் படி கர்நாடகாவில் வழங்கப்படும் பஸ்பாஸ்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தினசரி பாஸ் தவிர மற்ற அனைத்து பாஸ்களை ஸ்மார்ட் கார்டாக வழங்கவுள்ளது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

இந்த ஸ்மார்ட் கார்டில் அவர்கள் செலுத்திய பணத்திற்கான கடைசி தேதி பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம் பஸ்சில் உள்ள கண்டெக்டர்கள் தங்கள் கையில் உள்ள மெஷின்களில் அந்த தேதியை கண்டு முறைகேடை தவிர்க்க முடியும்.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

இது குறித்து போக்குவரத்து கழக இயக்குநர் பொண்ணுராஜ் கூறுகையில் :"தற்போது போக்குவரத்து கழக பாஸ்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அதன் படி முதல்கட்டமாக சுமார் 20,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக தினசரி பாஸ் தவிர மற்ற பாஸ்கள் எல்லாம் ஸ்மார்ட் கார்டாக மாறும்.இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படுவதோடு மிக முக்கியமான பயனும் நமக்கு கிடைக்கிறது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

அரசு மூலம் பாஸ்கள் வழங்கப்பட்டாலும் எந்தெந்த ரூட்களில் எவ்வளவு பேர் பாஸ் வைத்துக்கொண்டு பயணம் செய்கிறார்கள், எந்த இடத்தில் பாஸ் பயன்படுத்தும் பயணாளிகள் அதிகம் எங்கு குறைவு என்பதை துள்ளியமாக கண்டுபிடிக்க நமக்கு எந்த நடை முறையும் இல்லை.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

தற்போது இந்த ஸ்மார்ட் கார்டை கொண்டு வருவது மூலம் கண்டெக்டரில் உள்ள மிஷினில் ஸ்வைப் செய்யப்படுவதால் அதன் மூலம் எந்தெதந்த ரூட்டில் எவ்வளவு பாஸ்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை எங்களால் அறிய முடியும் அதன் மூலம் எந்த ரூட்டிற்கு அதிக பஸ்கள் தேவை என்பதையும் அறிந்து பஸ்களின் ரூட்களை முடிவு செய்யப்படும்.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

தற்போது பசுமை தீர்ப்பாயத்தின் பிடியில் 1000 பஸ்கள் இருக்கிறது. டீசல் இன்ஜின்களுக்கு பதிலாக சி.என்.ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட பஸ்களை கொண்டுவருவது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. அது தவிர வேறு 1500 பஸ்களுக்காக கடந்த 2016-2017 நிதியாண்டில் அப்போதைய முதல்வர் சித்தராமையா நதி ஒதுக்கினார். அதில் 500 மிடி பஸ்கள் வாங்கப்பட்டு விட்டன.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போக்குவரத்து கழகம்150 ஏசி பஸ்கள் உட்பட 1674 பஸ்களை வாங்கியுள்ளது. அதே காலகட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட அல்லது 8.5 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. இந்தாண்டு மேலும் 1300 பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். " என கூறினார்.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

தற்போது பெங்களூருவில் வழங்கப்படும் பஸ்பாஸ்களை பொருத்தவரை, 93 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கான பாஸ்கள், 1.5 லட்சம் பியூசி, மாணவர்களுக்கான பாஸ், 1.25 லட்சம் டிகிரி மாணவர்களுக்கான பாஸ், 57,000 மேற்படிப்பு மாணவர்களக்கான பாஸ், மற்றும் 2.40 லட்சம், தினசரி மாற்றும் மாதாந்திர பாஸ்கள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாஸ்கள் எல்லாம் விரைவில் ஸ்மார்ட் கார்டுகளாக மாறவிருக்கிறது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

இதற்கிடையில் பெங்களுருவில் தற்போது பிஎஸ் 4 ரக எமிஷன் கண்ரோல் பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. இதனால் குறைந்த அளவை தான் பஸ்கள் பெருகிறது. கடந்த 2011-2012ல் சராசரியாக 4.5 கி.மீ மைலஜாக வைத்திருந்த கர்நாடக போக்குவரத்து கழகம், கடந்த 2017-2018ம் ஆண்டில் 3.7 கி.மீ. ஆக குறைந்துள்ளது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

தற்போது பிஎம்டிசியில் 3500 பிஎஸ் 4 ரக எமிஷன் கண்ட்ரோல் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் இன்ஜின் அதிக திறன் உள்ளதாக இருப்பதால் மைலேஜ் குறைவாக தான் கிடைக்கிறது. அதே நேரத்தில் 850 வால்வோ பஸ்கள் இயங்குகிறது. அதில் உள்ள பவர் பிரேக், ஏசி ஆகிய அம்சங்களால்சராசரியாக 2.5-3 கிலோ மீட்டர் தான் கிடைக்கிறது.

அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி

மேலும் பிஎஸ் 3 எமிஷன் கண்ட்ரோலில் விதிகளில் உள்ள 2400 பஸ்கள் இயங்குகிறது. இது 3.9 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. தற்போது பிஎம்டிசி நிர்வாகத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் 21 சதவீத்ததை டீசலுக்காக வழங்குகிறது. இதன் மதிப்பு 42 கோடியாகும். டீசல் விலை உயர்வும் இதற்கு முக்கிய காரணம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் விற்பனைக்கு வந்தது!!
  2. உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்
  3. ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!
  4. இந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..
  5. சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!
Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
BMTC to replace bus passes with smart cards. Read in Tamil
Story first published: Monday, July 16, 2018, 13:58 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more