இந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில், முழுக்க முழுக்க பாகிஸ்தான் மாணவிகள் உருவாக்கிய ரேஸ் கார், இந்திய அணியுடன் போட்டியிட்டது.

By Arun

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில், முழுக்க முழுக்க பாகிஸ்தான் மாணவிகள் உருவாக்கிய ரேஸ் கார், இந்திய அணியுடன் போட்டியிட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

இங்கிலாந்து நாட்டில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில், பார்முலா ஸ்டூடண்ட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக, பார்முலா ஸ்டண்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

சிங்கிள் சீட்டர் ரேஸ் கார்களை மாணவ, மாணவிகள் சுயமாக உருவாக்கி, போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். ஆட்டோமொபைல் துறை சார்ந்த மாணவ, மாணவிகளின் திறன்களை வளர்ப்பதற்காகவே, பார்முலா ஸ்டூடண்ட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

இந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பார்முலா ஸ்டூடண்ட் போட்டி, கடந்த ஜூலை 13ம் தேதி தொடங்கி நேற்று வரை (15ம் தேதி) நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (NUST) மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

பார்முலா ஸ்டூடண்ட் போட்டிக்காக, சிங்கிள் சீட்டர் ரேஸ் கார் ஒன்றை பாகிஸ்தான் மாணவிகள் தயார் செய்திருந்தனர். முழுக்க முழுக்க மாணவிகளால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டின் முதல் ரேஸ் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

அதுமட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலான ஒரு போட்டியில் பாகிஸ்தான் மாணவிகள் பங்கேற்றதும் இதுதான் முதல் முறை. பாகிஸ்தானில் இருந்து முழுக்க முழுக்க மாணவிகளே அடங்கிய குழு ஒன்று, பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில் பங்கேற்றதும் இதுதான் முதல் முறை.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குழுவில் 15 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவிற்கு Auj என பெயரிடப்பட்டிருந்தது. இந்த குழுவில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் கூட இடம்பெறவில்லை என்பதும் கவனிக்கதக்க விஷயமாகும்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள், இன்டஸ்ட்ரியர் டிசைனர்ஸ், பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் துறையை சார்ந்த பெண்கள் மட்டுமே குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்களுக்கு அதிக அளவிலான ஸ்பான்சர்கள் கிடைத்தபோதும், நிதி பற்றாக்குறை ஏற்படவே செய்தது.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

அப்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் தலையிட்டு, அவர்களுக்கு வேண்டிய நிதி உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. எனினும் பாகிஸ்தான் பெண்கள் தயாரித்த சிங்கிள் சீட்டர் ரேஸ் காரின், டெக்னிக்கல் விபரங்கள் வெளியாகவில்லை.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில், பாகிஸ்தான் நாட்டின் Auj குழுவிற்கு 'Spirit of FS' என்ற விருது வழங்கப்பட்டது. சிறப்புமிகுந்த பங்களிப்பிற்காக கிடைத்த விருதை பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

மோட்டார் ஸ்போர்ட்களில் பெண்கள் பங்கேற்பது என்பதே பாராட்டுக்குரிய மற்றும் வரவேற்க கூடிய விஷயம்தான். அதுவும் பாகிஸ்தான் போன்ற மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் இருந்து புறப்பட்ட ஒரு குழு பார்முலா ஸ்டூண்ட் போட்டியில் பங்கேற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

பாகிஸ்தான் பெண்களுக்கு மட்டும் அவர்கள் உத்வேகம் அளிக்கவில்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸ்களில் பங்கேற்க வேண்டும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமாக தங்கள் கேரியரை வடிவமைத்து கொள்ள வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் உத்வேகம் அளித்துள்ளனர்.

இந்திய பசங்களுக்கு போட்டியாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த பாகிஸ்தான் மாணவிகள்.. பிரதமரும் உதவினார்..

இதே போட்டியில், இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை (ஐஐடி) சேர்ந்த ஐஐடி பாம்பே ரேசிங் டீமும் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும். ஆனால் அவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
All-girls team from Pakistan participate Formula Student Competition. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X