டாடாவுக்கு சிம்ம சொப்பனம்! பழம் தின்னு கொட்டை போட்ட மாருதி கார்! 26 கிமீ மைலேஜ் குடுத்தாலும் விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் 100 கார்கள் விற்பனையாகிறது என்றால், அதில் 31 கார்கள், காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவையாக உள்ளன. இந்த செக்மெண்ட் கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு உள்ளது? என்பதற்கு இந்த புள்ளி விபரம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
எனவே காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய பல்வேறு நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டு கொண்டுள்ளன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இந்த செக்மெண்ட்டில் ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து, அதில் பிரம்மாண்டமான வெற்றியையும் பெற்று விட்டது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், தற்போது 10 வயதை எட்டியுள்ளது. இடைப்பட்ட இந்த 10 வருடங்களில், 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகியுள்ளதாக காடிவாடி தளம் தெரிவித்துள்ளது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திலேயே 28 முக்கியமான விருதுகளை வென்று குவித்தது. இதில், இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2017 விருது மிக முக்கியமானது ஆகும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் கே15சி ட்யூயல் ஜெட் ட்யூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனையும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கொண்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.
இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 25.51 மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். அத்துடன் ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கொண்டுள்ளது.
இதில், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர்கள், ஃபாஸ்ட் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் உடன் பின் பகுதியில் ஏசி வெண்ட்கள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வேரியண்ட்களை பொறுத்து 17.78 செமீ மற்றும் 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, கீலெஸ் எண்ட்ரி சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் கீ உடன் இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகளும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், 360 டிகிரி வியூ கேமரா, ரியர் வியூ கேமரா மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் வழங்கப்படுகின்றன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 8.26 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.01 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில் மாருதி சுஸுகி நிறுவனம் பிரெஸ்ஸா காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








