2 இளைஞர்களை பலிவாங்கிய கோர விபத்து... உருக்குலைந்து போன ரேஞ்ச்ரோவர்.. கற்றுத்தரும் பாடம் என்ன?

குஜராத்தில் நேற்று அதிகாலை ரேஞ்ச்ரோவர் கார் விபத்தில் சிக்கி நடந்த கோரமான சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டை சேர்ந்த யுவராஜ்சிங், ஹர்தீப்சிங் மற்றும் அம்ரேலியை சேர்ந்த திவ்யஜித் ஆகிய மூன்று பேரும் நேற்று தங்களது ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவி காரில் ராஜஸ்தான் நோக்கி சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 4.15 மணியளவில் தரத் என்ற இடத்திற்கு அருகே பாரத்மாலா எக்ஸ்பிரஸ் அதிவிரைவு சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

Gujarat RangeRover Accident
Photo Credit:

அந்த மாட்டின் மீது மோதிய வேகத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த ரேஞ்ச்ரோவர் கார் சாலை கான்க்ரீன் தடுப்பில் அதிவேகத்தில் மோதியது. இதனால், அந்த கார் சுக்குநூறாக உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் சிக்கிய மூன்று இளைஞர்களில் யுவராஜ்சிங், திவ்யஜித் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். ஹர்தீப்சிங் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தரத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கார்களில் சன்ரூஃப், ADAS, Flush Door Handles தேவையா? இதபடிச்சுட்டு முடிவு எடுங்க!

சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் இந்த விபத்து குறத்த வீடியோ மற்றும் படங்கள் பார்ப்போரை அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. அந்த அதிவிரைவு சாலையில் காளை மாடு குறுக்கே வந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விபத்து மூலமாக பல்வேறு பாடங்களை கார் ஓட்டுபவர்களும், பயன்படுத்துவர்களும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. தற்போது வரும் கார்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும், மேம்பட்ட கட்டமைப்புத் தரம் கொண்டதாகவும் வடிவமைக்கப்படுகிறது. ஆனால், நடைமுறை பயன்பாட்டில் சில வேளைகளில் இந்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் பயனற்றதாகி விடுகிறது.

இதற்கு முக்கிய காரணம், அதிவேகம். குறிப்பாக, அதிகாலை வேளையில் போக்குவரத்து குறைவாக இருப்பதுடன், எக்ஸ்பிரஸ் சாலையில் போதுமான தடுப்பு வேலிகள் இருப்பதால் அதிக வேகத்தில் காரை இயக்குவது இயல்பானதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் பலரும் அதிவேகத்தில் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

Also Read

சொகுசு கார்களில் ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும், கட்டமைப்பு வசதிகளும் இருப்பதாக கருதி இவ்வாறு அதிவேகத்தில் செல்வதை காண முடிகிறது. ஆனால், எத்தனை பாதுகாப்புத் தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் அதிவேகத்தில் செல்லும்போது இது அனைத்தும் பயனற்றதாகிவிடும். அது எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராக இருந்தாலும் இதுபோன்ற கோர விபத்தில் சிக்கிவிடும் வாய்ப்பை கொடுத்து விடுகிறது.

எனவே, எக்ஸ்பிரஸ் சாலையாக இருந்தாலும் விழிப்புடனும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே இந்திய சாலைகளில் ஓரளவு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடிகிறது. குறிப்பாக, 100 கிமீ வேகத்தை தாண்டி விட்டால் ஓட்டுனர் போதிய விழிப்புடன் இருப்பது அவசியம்.

எனினும், இதுபோன்ற எதிர்பாராத சூழல்களில் கார் விபத்தில் சிக்கும் நிலையில் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் போதிய பயன் அளிக்காது. அவை விபத்துக்களை தவிர்க்கவும், காயங்களின் தீவிரத்தை குறைக்கவும் மட்டுமே பயன்படும். மிதமான வேகத்தில் சென்றிருந்தால் இந்த அளவுக்கு பெரிய விபத்தில் சிக்காமல் ஓரளவு சுதாரித்து காரை கட்டுப்படுத்தும் வாய்ப்பை பெற்றிருக்கலாம்.

எனவே, நீங்கள் எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட விலை உயர்ந்த காரை வைத்திருந்தாலும் மிகவும் விழிப்புடனும், சுயக்கட்டுப்பாட்டுடனும் காரை இயக்குவது அவசியம். அதிலும் அதிகாலை வேளைகளில் பயணிக்கும்போது உடன் பயணிப்பவர்களும் ஓட்டுனருக்கு அயர்ச்சி ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம். ஏற்கனவே பலமுறை அதிகாலை பயணங்கள் செய்வோர் மிதமான வேகத்தில் இயக்குவது அவசியம் என்பதை குறிப்பிட்டு நாம் செய்திகளை வெளியிட்டுள்ளோம்.

இந்த விபத்து மூலமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, எவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும் அதிவேகத்தில் இயக்குவதை தவிர்ப்பது உயிருக்கு உத்தரவாதத்தை உறுதி செய்யும். இல்லையெனில், இதுபோன்ற மிக கோரமான சம்பவங்களில் சிக்கும் அபாயம் உள்ளதை மனதில் வைத்து நடப்பது அவசியம்.

Article Published On: Monday, September 28, 2026, 13:47 [IST]
English summary
Gujarat range rover accident bharatmala expressway stray cattle two killed safety lessons
மேலும்... #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out