2014ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய கார்களுக்கு டிஸ்கவுண்ட்: கவனம் தேவை
2014ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு டீலர்களில் இருப்பு தேங்கிய கார்களுக்கு கணிசமான டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது பல முன்னணி கார் நிறுவனங்களின் டீலர்களில் தள்ளுபடி மற்றும் இதர சலுகைகளுடன் புதிய கார்களை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
அப்படி, கடந்த ஆண்டு தயாரிப்பு மாடலை வாங்கும்போது சில இழப்புகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே, கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய காரை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

சேமிப்புச் சலுகைகள்
இலவச இன்ஸ்யூரன்ஸ், விலையில் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பணத் தள்ளுபடியை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், ஆக்சஸெரீகள் மீதும் டிஸ்கவுண்ட் மற்றும் இலவச ஆக்சஸெரீகளையும் பெற முடியும்.

டாப் வேரியண்ட் சான்ஸ்
பெரும்பாலும் பட்ஜெட்டை கருதி மிட் வேரியண்ட் கார்களையே அதிகம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டு தயாரிப்பு கார்களை வாங்கும்போது, அதிகபட்சம் ரூ.50,000 வரை சேமிப்பு கிடைக்கும் என்பதை கணக்கில்கொண்டு, டாப் வேரியண்ட்டை தேர்வு செய்ய முடியும்.

தயாரிப்பு தேதி
இருப்பு உள்ள கார் கடந்த ஆண்டு டிசம்பரில் தயாரிக்கப்பட்டிருந்தால் உத்தமம். சில பிராண்டு கார்கள் பல மாதங்கள் டீலர்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கலாம். எனவே, தயாரிப்பு தேதியை வாங்கி பார்த்த பின்னர் பேரத்தை துவக்கலாம்.

விழிப்பாக இருங்கள்
கடந்த ஜனவரி முதல் கார்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஆண்டு விலைப்பட்டியலில் வைத்து சலுகைகளையும், தள்ளுபடியையும் ஒப்பிட்டு பார்த்து வாங்குவது அவசியம். ஆனால், டீலர்களில் புதிய விலைப்பட்டியலை வைத்துக் கொண்டு சலுகைகள் வழங்குவதாக கூறுவர். எனவே, விழிப்பாக கடந்த ஆண்டு விலையில் எவ்வளவு சலுகைகள் மற்றும் சேமிப்பு கிடைக்கும் என்பதை கணக்கிட்டு வாங்குங்கள்.

கலர் பிரச்னை
இருப்பு இருக்கும் கார்களில் குறிப்பிட்ட வண்ணத்திலான கார்கள் மட்டுமே கிடைக்கும். எனவே, எல்லா டீலர்களுக்கும் சென்று, அந்த கார் இருப்பு இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு, உங்கள் அருகாமையிலுள்ள டீலரில் எடுப்பதா அல்லது இந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட காரை வாங்குவதா என்பதை முடிவு செய்யவும்.

முன்பதிவு
டீலர்களில் காரை முன்பதிவு செய்ய சொல்லி அவசரப்படுத்துவர். இது உடனடியாக விற்றுவிடும் என்று அச்சமூட்டுவர். ஆனால், நிதானமாக முடிவு செய்த பின்னர் காருக்கு முன்பதிவு செய்வது புத்திசாலித்தனம். இல்லையெனில், முன்பதிவு செய்து ரத்து செய்யும்போது பல கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆண்டு வித்தியாசம்
கடந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட காரை வாங்கும்போது, அது மறு விற்பனை செய்யும்போது சிறிது பாதிப்பை தரலாம். எனவே, அதனையும் மனதில்கொண்டு கடந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட காரை தேர்வு செய்வது அவசியம்.

ஓல்டு ஸ்டாக் காரை கண்டுபிடிப்பது எப்படி?
ஓல்டு ஸ்டாக், யூஸ்டு கார் தயாரிக்கப்பட்ட ஆண்டை எப்படி கண்டுபிடிப்பது?- பகுதி -1

ஆன்ரோடு விலையை சரிபார்க்க..
நீங்கள் தெரிவு செய்துள்ள காரின் ஆன்ரோடு விலையை இங்கே சரிபார்த்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








