சென்னை போலீஸை போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்!

ஓலாவைத் தொடர்ந்து ரேபிடோ நிறுவனத்தின்மீது நடவடிக்கை மேற்கொண்டுவரும் கர்நாடகா ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

நாடு முழுவதும் கால் டாக்ஸி சேவையில் உள்நாட்டு நிறுவனங்கள் உட்பட சில வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய பயணிகளிடையே பிரபலமானவைதான் ஓலா, ஊபர் மற்றும் ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்தில் இருந்து பிக் அப் செய்து, அவர்களை டிராப் செய்யும் சேவையினை செய்து வருகின்றனர்.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

ஸ்மார்ட்போன் ஆப்பினை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த வர்த்தகத்தில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் புரல்வதாக கூறப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஓலா நிறுவனம் தான் கால் டாக்ஸி சேவையில் இந்தியாவில் முதன்மையான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

இந்த நிறுவனத்தின்மீது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ஓலா நிறுவனத்துடன் டை-அப் செய்து கார்களை இயக்கி வரும் கார் ஓட்டுநர்களின் இன்சென்டிவ் பணத்தை சரிவரக் கொடுப்பதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இந்த நிறுவனத்தின்மீது கூறப்படுகின்றன.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

இந்நிலையில், ஓலா நிறுவனம் விதியை மீறி பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக அரசு அந்த நிறுவனத்தின்மீது அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, ஓலா நிறுவனம் மாநிலம் முழுவதிலும் ஆறு மாதங்களுக்கு கால் டாக்ஸி சேவையில் ஈடுபடக் கூடாது என்ற தடை விதித்தது. மேலும், ரூ.15 லட்சம் அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்த தடையினால் ஓலா நிறுவனம் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்தது.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டாக்ஸியாக இயக்குவது குற்றமாகும். இருசக்கர வாகனங்களைப் பொது சேவையில் இயக்க வேண்டுமானால், சில குறிப்பிட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அதன்படி, பொதுசேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

அதேபோன்று, பின் இருக்கையில் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு, தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்பீடு உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. இதில், எந்த விதிமுறையையும் அந்த நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஓலா நிறுவனத்தின்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

இந்நிலையில், இதேபோன்று பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டதாகக் கூறி ரேபிடோ என்ற பைக் டேக்ஸி நிறுவனத்தின்மீது கர்நாடக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 170 மோட்டார்சைக்கிள்களை பெங்களூரு நகரப் போலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக ஈடி ஆட்டோ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், மற்ற கால் டாக்ஸி சேவை நிறுவனங்களைப் போன்றே ஸ்மார்ட்போன் ஆப்பினை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனமும் ஓலாவைப் போன்று, உரிய ஆவணங்கள் இன்றி தனியார் பைக்குகளை பொது பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தியது கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே, பெங்களூரு ஆர்டிஓ அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும், ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ. 10.2 லட்சம் அபராதத்தையும் விதித்துள்ளனர்.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

பைக் டாக்ஸிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் நரேந்திர ஹோல்கர் கூறியதாவது, "நாங்கள் இதுகுறித்து ஏற்கனவே ரேபிடோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளோம். ஆனால், அதை மீறி, வெள்ளை நிற நம்பர் பிளேட்டைக் கொண்ட பைக்குகளை டாக்ஸியாக பயன்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

ரேபிடோ நிறுவனம் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களைக் காட்டிலும் மலிவான விலையில் பைக் டாக்ஸி சேவையை பெங்களூருவில் இயக்கி வந்தது. இந்த நிறுவனம் முக்கியமாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து அலுவலகத்திற்குச் செல்லும் பயணிகளையே மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. இதன்காரணமாகவே, இந்த நிறுவனத்தின் பைக் டேக்ஸி கர்நாடகாவில் மிகவும் பிரபலமாகியது.

சென்னை போலீஸைப் போல் அதிரடிகாட்டும் கர்நாடகா போலீஸ்: ஓலாவை அடுத்து இவர்களின் இலக்கு இந்த நிறுவனம்தான்...!

ஆனால், தற்போது பைக் டாக்ஸி சேவைக்கு எதிராக கிளம்பி இருக்கும் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதேபோன்று, சென்னையிலும் உரிய ஆவணங்களின்றி இயங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பைக் டாக்ஸிகளை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த செய்தியைப் படிக்க இங்கே சொடக்கவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka Cracks Down On Rapido — Illegal Bike Taxis. Read In Tmail.
Story first published: Monday, April 8, 2019, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X