மானமே போச்சு! ஊரே சேந்து தள்ளி விட்ட கார் இந்த கம்பெனியோடதா! கத்த கத்தயா காச வாங்கீட்டு முக்காடு போட்டுட்டாங்க
இந்திய சாலைகளில் நிறைய பேர் சேர்ந்து, காரை தள்ளும் காட்சிகளை நாம் சர்வ சாதாரணமாக காண முடியும். அவை பெரும்பாலும் விலை குறைவான கார்களாக இருக்கும். ஆனால் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் காரை, தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்ததை எங்கேயாவது பார்த்துள்ளீர்களா?
இந்த கேள்விக்கு பெரும்பாலானோரின் பதில் 'இல்லை' என்பதாகதான் இருக்கும். ஆனால் புது டெல்லியில் இப்படி ஒரு வினோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆம், பேட்டரியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் காரை, சுமார் 10 பேர் சேர்ந்து தள்ளி, ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இந்த வீடியோ (Video) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் நாம் பார்ப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes-Benz G-Class) கார் ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. பொதுவாக சாலைகளில் தள்ளப்படும் கார்கள் விலை குறைவாக இருக்கும் என்பதுடன், ஹேட்ச்பேக் (Hatchback) அல்லது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தவையாக இருக்கும்.
அவற்றின் எடை ஓரளவிற்கு குறைவு. ஆனால் எஸ்யூவி ரக கார்கள் அதிக எடை கொண்டவை. அதிலும் குறிப்பாக இந்த வீடியோவில் நாம் காணும், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் எஸ்யூவி ரக கார், உலகிலேயே அதிக எடை கொண்ட கார்களில் ஒன்றாகும். எனவே அது ஸ்டார்ட் ஆகாத சூழலில், சுமார் 10 பேர் சேர்ந்து தள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் காரின் எடை சுமார் 2.50 டன்கள் ஆகும். 1 டன் என்பது 1,000 கிலோ. அப்படியானால் இந்த காரின் எடை சுமார் 2,500 கிலோ வரும். இவ்வளவு அதிக எடை கொண்ட ஒரு காரை தள்ளுவது என்பது உண்மையிலேயே மிகவும் சவாலான ஒரு விஷயம்தான்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் 3.30 கோடி ரூபாய் என்ற விலையில் (Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் இந்த வீடியோவில் நாம் காண்பது முந்தைய தலைமுறை மாடலை போல் தெரிகிறது.
எனவே தற்போதைய விலையை காட்டிலும், பழைய தலைமுறை மாடல் ஓரளவிற்கு குறைவான விலையில் வாங்கப்பட்டிருக்கும். ஆனால் எப்படி பார்த்தாலும், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் விலை உயர்ந்த கார்தான் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட ஒரு காருக்கு இவ்வாறான சூழல் ஏற்படுவது தர்ம சங்கடம்தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேட்டரி பிரச்னை காரணமாக காரை ஸ்டார்ட் செய்ய முடியாத போது, தள்ளுவதைதான் பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதுபோன்ற சூழல்களில், ஜம்ப்-ஸ்டார்ட் (Jump-start) செய்வது நல்ல முடிவாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து. காரை எப்படி ஜம்ப்-ஸ்டார்ட் செய்வது? என்பதை இந்த லிங்க்கில் நீங்கள் விரிவாக படிக்கலாம்.


Click it and Unblock the Notifications








