அவசர சமயத்தில் காரை 'ஜம்ப் ஸ்டார்ட்' செய்வது எப்படி?

அவசரமாக காலையில் கிளம்பி அலுவலகத்துக்கு காரை ஸ்டார்ட் செய்தால் சவுண்டு மட்டும்தான் வரும். ஸ்டார்ட் ஆகாது. அவசர சமயத்தில் இதுபோன்று மக்கர் பண்ணும்போது தவித்து போய்விடுவதுண்டு. பழைய கார் வைத்திருக்கும் பலர் சந்திக்கும் பிரச்னை இது. செல்ஃப் மோட்டார் பிரச்னையாக இதனை பலர் கருதுவதுண்டு.

ஆனால், உண்மையில் பேட்டரியின் செயல்திறன் அற்று போய்விடுவதால் ஏற்படும் பிரச்னைதான் இது. இதற்கு பேட்டரியை மாற்றுவது சிறந்தது. ஆனால், குடும்பத்துடன் அல்லது வெளியில் செல்லும்போது கார் இதுபோன்று ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் பெரும் திண்டாட்டம் ஆகிவிடும்.

அதுபோன்று சமயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமும், வாய்ப்பும் இருந்தால் ஜம்ப் ஸ்டார்ட் செய்து காரை கிளப்ப முடியும். ஆனால், இதற்கு இரண்டு கார்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமானது. மற்றொரு கார் வீட்டில் இருந்தால் இதனை எளிதாக செய்யலாம். பேட்டரி செயல் இழந்ததை எவ்வாறு தெரிந்துகொள்வது மற்றும் ஜம்ப் ஸ்டார்ட் செய்யும் வழிமுறைகள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹெட்லைட் சோதனை

ஹெட்லைட் சோதனை

ஹெட்லைட்டை எரிய விட்டு அதன் பிரகாசத்தை கவனியுங்கள். ஹெட்லைட் வழக்கம்போல் இல்லாமல் பிரகாசம் குறைவாக இருந்தால் பேட்டரியில் பிரச்னை இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், பேட்டரி பிரச்னை இல்லையென்று தெரிந்தால் ஜம்ப் ஸ்டார்ட் யுக்தியும் வேலைக்கு ஆகாது.

 ஆடியோ சிஸ்டம்

ஆடியோ சிஸ்டம்

காரில் சாவியை போட்டு சமிக்ஞை மற்றும் எச்சரிக்கை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று சோதியுங்கள். தவிர, ஸ்டீரியோ சிஸ்டத்தையும் ஆன் செய்து சரியாக வேலை செய்கிறதா என்பதை வைத்து பேட்டரியை தெரிந்து கொள்ளலாம்.

 இன்னொரு வழி

இன்னொரு வழி

சாவியை போட்டவுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் இருக்கும் மீட்டர்களின் முள்கள் அனைத்தும் ஒரு முறை மேலே எழும்பி இயங்குகிறதா என்பதை பாருங்கள். அவ்வாறு எழும்பவில்லை என்றால் அது இக்னிஷன் சுவிட்ச் பிரச்னையாக இருக்கலாம். பேட்டரியில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை.

 பேட்டரி குறியீடுகள்

பேட்டரி குறியீடுகள்

பேனட்டை திறந்தவுடன் பேட்டரியில் இருக்கும் ப்ளஸ் எனப்படும் நேர்மின் முனை மற்றும் மைனஸ் எனப்படும் எதிர்மின்முனையை தெரிந்து கொள்ளவும். குறியீடு அழிந்திருந்தால் எவ்வாறு கண்டறிவது? ஒரு ஈஸியான வழி இருக்கிறது.

எப்படி தெரிந்துகொள்வது?

எப்படி தெரிந்துகொள்வது?

எதிர்முனை எப்போதும் காரின் எஞ்சின் அல்லது பாடியுடன் தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் இருக்கும். நேர்மின் முனையிலிருந்து செல்லும் ஒயர் செல்ஃப் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனை வைத்து உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும், நேர்மின் முனைக்கும் பெரும்பாலும் சிவப்பு நிற கேபிளும், எதிர்மின் முனைக்கு கருப்பு நிற கேபிளும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இரண்டு கார்களின் முகப்பையும் நேருக்கு நேர் கொஞ்சம் நெருக்கமாக நிறுத்திக் கொள்ளவும். இரண்டு கார்களிலும் ஏசி, எஞ்சின், விளக்குகள் உள்ளிட்ட அணைத்தையும் அணைத்து விடவும். இரு கார்களும் ஒன்றையொன்று தொட்டுவிடாத படி நிறுத்தவதும் அவசியம்.

ஆசிட் கசிவு

ஆசிட் கசிவு

கைகளில் கையுறைகள் மற்றும் கண்களுக்கு பாதுகாப்பாக கண்ணாடியை அணிந்து கொள்வது அவசியம். செயலிழந்த பேட்டரியில் ஆசிட் கசிவு, துருப் பிடித்திருப்பது போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிட் கசிவு இருந்தால் ஜம்ப் ஸ்டார்ட் செய்ய வேண்டாம்.

ஜம்பர் கேபிள்கள்

ஜம்பர் கேபிள்கள்

நேர்மின் மற்றும் எதிர்மின் தன்மையுடன் கிளிப்புகள் பொருத்தப்பட்ட இரண்டு ஜம்பர் கேபிள்களை எடுத்துக் கொள்ளவும். காரில் இணைக்கும்போது இரண்டு கேபிள்களும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத வகையில் இணைக்கவும். இல்லையென்றால் நல்ல காரின் பேட்டரியையும் சேர்த்து பாதிப்பு ஏற்படும்.

இணைப்பது எப்படி?

இணைப்பது எப்படி?

முதலில் திறன் இழந்த பேட்டரியின் நேர்மின் முனையுடன் சிவப்பு நிற ஜம்பர் கேபிளை இணைக்கவும். பின்னர் இதன் மறுமுனையை நல்ல பேட்டரியின் நேர்மின் முனையுடன் இணைக்கவும்.

அடுத்து ஜம்பர் கேபிள்

அடுத்து ஜம்பர் கேபிள்

அடுத்து, நல்ல பேட்டரியின் எதிர்மின் முனையுடன் கருப்பு நிற கேபிளின் கிளிப்பை முதலில் இணைக்கவும். பின்னர் மறுமுனையை செயலிழந்த காரின் சேஸி அல்லது உலோக பாகங்களில் இருக்கும் நட்டுடன் இணைத்துவிடுங்கள். இவ்வாறு இணைக்கும்போது சிறிய தீப்பொறி வரும். அவ்வாறு வந்தால் சரியான எர்த் உள்ளது என்று அர்த்தம். செயலிழந்த பேட்டரியுடன் இணைக்க வேண்டாம். அவ்வாறு இணைக்கும்போது ஹைட்ரஜன் வாயு கசிய வாய்ப்பிருக்கிறது.

பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

இப்போது நல்ல பேட்டரி கொண்ட காரின் எஞ்சினை ஸ்டார்ட் செய்யவும். ஆக்சிலேட்டர் கொடுக்க வேண்டாம். 30 வினாடிகள் முதல் 60 விநாடிகள் வரை ஐட்லிங்கில் எஞ்சினை விடவும். இதன்மூலம், செயலிழந்த பேட்டரியில் மின்சாரம் சார்ஜ் ஆகும். எனவே, பேட்டரியில் இணைப்புகள் மற்றும் ஜம்பர்கள் கேபிள்கள் இணைப்பு மிக சரியாக இருப்பது அவசியம்.

இப்போ ஸ்டார்ட் செய்யுங்க

இப்போ ஸ்டார்ட் செய்யுங்க

நல்ல பேட்டரி கொண்ட கார் எஞ்சினை அணைத்துவிட்டு, சில நிமிடங்கள் கழித்து செயலிழந்த பேட்டரி கொண்ட காரை ஸ்டார்ட் செய்யுங்கள். பெரும்பாலும் ஸ்டார்ட் ஆகிவிடும். இல்லையெனில், பேட்டரி கேபிள்களின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். இல்லையெனில், நல்ல பேட்டரி கொண்ட காரை மீண்டும் ஸ்டார்ட் செய்து அதிக ஐட்லிங்கில் 5 நிமிடங்கள் எஞ்சினை ஓட விடவும். பின்னர், நல்ல பேட்டரி கொண்ட கார் எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு, மீண்டும் உங்களது காரை ஸ்டார்ட் செய்யவும்.

கேபிள்கள் நீக்கும் முறை

கேபிள்கள் நீக்கும் முறை

பெரும்பாலும் உங்களது ஸ்டார்ட் ஆகிவிடும். பின்னர், கேபிள்களின் இணைப்பை முதலில் இணைத்தது போன்று இல்லாமல் தலைகீழ் முறையில் நீக்க வேண்டும். ஒவ்வொரு படியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செயலிழந்த காரில் இணைக்கப்பட்டிருக்கும் எதிர்மின் முனை கிளிப்பை முதலில் நீக்க வேண்டும்.

இதேபோன்று, எதிர்மின் முனையை நல்ல பேட்டரியிலிருந்து நீக்கவும்.

அடுத்து, நல்ல பேட்டரியிலிருந்து முதலில் ஜம்பர் கேபிளை நீக்கவும்.

பின்னரே, செயலிழந்த பேட்டரியிலிருந்து நேர்மின் முனை ஜம்பர் கேபிளை நீக்க வேண்டும்.

பேட்டரியின் மின் முனைகளில் ஏதெனும் பிளாஸ்டிக் கவர்கள் போடப்பட்டிருந்தால் அதனை மீண்டும் பொருத்திவிடவும். இது மின்கசிவால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கும்.

எஞ்சினை ஓடவிடவும்

எஞ்சினை ஓடவிடவும்

செயலிழந்த பேட்டரி கொண்ட காரின் எஞ்சினை ஸ்டார்ட் செய்தவுடன் காரை உடனடியாக கிளப்பவில்லையெனில், உடனே அணைத்துவிடக்கூடாது. குறைந்தது 20 நிமிடங்களுக்கு எஞ்சினை அணைக்காமல் ஓட விட வேண்டும். இதன்மூலம், பேட்டரியில் காரை ஸ்டார்ட் செய்ய தேவையான அளவு சார்ஜ் ஏற்றப்படும்.

 கவனத்தில் கொள்க

கவனத்தில் கொள்க

முதலில் கருப்பு நிள கேபிளையும், பிறகு சிவப்பு நிற நேர்மின் கேபிளையும் இணைப்பதை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும்போது தவறி சிவப்பு நிற கேபிள் காரின் உலோக பாகங்கள் மீது பட்டுவிட்டால் மின்சார கசிவால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இது அவசரகால ஆக்சஸெரீ. எனவே, தரமான, அதிக நீளம் கொண்ட ஜம்பர் கேபிள்களை தேர்வு செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நல்ல பேட்டரி கொண்ட காரை அதிக நேரம் ஓடவிட வேண்டாம். இது செயலிழந்த பேட்டரியை முழுவதுமாக செயலிழக்க செய்யும் வாய்ப்புண்டு. சிறிது நேரம் மட்டும் சார்ஜ் செய்யவும். பேட்டரியிலிருந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுவது வழக்கம். இதனால், பாதிப்பு இல்லையெனினும், இது வெடிக்கும் தன்மை கொண்டதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. 12 வோல்ட் மின்சாரத்தால் அதிக பாதிப்பு ஏற்படாது. அதேவேளை, பேட்டரியையும், கேபிளையும் இணைக்கும்போது வெளிப்படும் தீப்பொறியால் தீப்பற்றும் ஆபத்து இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இந்த நடைமுறையை கையாள வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு முறைகளுடன், கார் பற்றி தெரிந்த, அனுபவம் மிக்க நண்பர்கள் மற்றும் மெக்கானிக்குகள் துணையுடன் இந்த முறையில் ஜம்ப் ஸ்டார்ட் செய்வது சிறந்தது.

Images Courtesy: Wiki How

Most Read Articles
English summary
Car Jump Start Procedure Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X