ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

இட நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், ஒரு காரை பார்க்கிங் செய்வதற்காக மட்டும் ரூ.5.3 கோடியை ஒருவர் செலவிட்டுள்ளார்.

By Arun

இட நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், ஒரு காரை பார்க்கிங் செய்வதற்காக மட்டும் ரூ.5.3 கோடியை ஒருவர் செலவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால், இனி கார், பைக் வாங்குவதில், மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

உலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹாங்காங் உள்பட உலகின் ஒரு சில இடங்களில், கார்களை பார்க்கிங் செய்வதற்கு கூட போதிய இட வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

ஹாங்காங்கில் இட நெருக்கடி பிரச்னை மிக மிக கடுமையாக தீவிரமடைந்து வருவதால், அங்கு வசிக்கும் மக்களால், கார்களை பார்க்கிங் கூட செய்ய முடிவதில்லை. எனவே ஹாங்காங்கில் கார்களை வாங்குவதற்கு முன்பாக, அதை பார்க்கிங் செய்வதற்கான இடத்தைதான் மக்கள் முதலில் வாங்க வேண்டியுள்ளது.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

இதனால் கார்களை பார்க்கிங் செய்வதற்கான இட விற்பனை, ஹாங்காங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பார்க்கிங் ஸ்பேஸ்' என்ற பெயரில் இந்த மார்க்கெட் அங்கு சூடுபிடித்துள்ளது. ஹாங்காங்கில் வசிக்கும் பலர் மிக அதிக விலை கொடுத்து 'பார்க்கிங் ஸ்பேஸ்களை' வாங்கி வருகின்றனர்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

இந்த சூழலில், ஹாங்காங்கின் ஹோ மான் டின் பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரே ஒரு காரை நிறுத்துவதற்கான சிறிய பார்க்கிங் ஸ்பேஸை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.3 கோடிக்கு வாங்கியுள்ளார். ஒரே ஒரு பார்க்கிங் ஸ்பேஸிற்காக முன்னெப்போதும் யாரும் இவ்வளவு அதிகமான தொகையை செலவிட்டது இல்லை.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

ஹாங்காங்கில் பார்க்கிங் ஸ்பேஸின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருவதால், அங்கு கார் வாங்குவதை பலர் நிறுத்தி விட்டனர். ஹாங்காங்கை சேர்ந்த டேரியன் வூ என்பவரின் கதை சற்று வித்தியாசமானது. கிளாசிக் கார்களை வாங்கி சேகரிப்பதில் டேரியன் வூ மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

1957 ஃபியட் அபோர்த், 1968 மெர்சிடிஸ் பென்ஸ் 600 புல்மேன் லிமோசைன் உள்ளிட்ட கார்கள் அவரிடம் இருந்தன. ஆனால் அந்த கார்களை நிறுத்துவதற்கான இட வசதி ஹாங்காங்கில் இல்லை. கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஸ்பேஸை வாங்க வேண்டுமானால், மிக அதிகமாக செலவாகும்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

எனவே தனக்கு விருப்பமான கார்களை எல்லாம், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு டேரியன் வூ அனுப்பி விட்டார். ஹாங்காங்கில் ஒரு 'பார்க்கிங் ஸ்பேஸை' வாங்க செலவழிக்கும் தொகையில், 5 கார்களை தன்னால் வாங்கி விட முடியும் என்று டேரியன் வூ வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

ஹாங்காங்கில் 'பார்க்கிங் ஸ்பேஸ்களை' வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் கூட களைகட்டியுள்ளது. அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர், இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கு 'சிங்கிள் பார்க்கிங் ஸ்பேஸை' வாங்கினர். வெறும் 9 மாதங்களுக்கு பின் அதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

ஹாங்காங் மட்டுமல்ல. இங்கிலாந்து தலைநகர் லண்டன், அமெரிக்காவின் வர்த்தக தலைநகர் நியூயார்க் என உலகின் பல்வேறு நகர வாசிகளும் இந்த பிரச்னையால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வளவு ஏன், இந்தியாவிலும் கூட 'பார்க்கிங் ஸ்பேஸ்' பிரச்னை பூதாகரமாகி வருகிறது.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

இந்தியாவின் மக்கள் தொகை 1.3 பில்லியன் (சுமார் 130 கோடி). இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது சொந்தமாக உள்ளது. எனவே நிலப்பரப்பு அடிப்படையில், உலகின் 7வது மிகப்பெரிய நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவிலும் இட நெருக்கடி அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி அனைவரும் அறிந்ததுதான். அங்கு வசிக்கும் மக்கள் பலர், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

எனவே சாலை ஓரங்களிலேயே கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் எல்லாம் மிக மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, கடுமையான சட்டத்தை கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களால் இனி வாகனங்களை வாங்க முடியும். புதிய கார் அல்லது எந்த ஒரு வாகனமாக இருந்தாலும், அதனை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

போதிய இட வசதி இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பின்பே, உங்களால் அந்த வாகனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய முடியும். இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசு சிந்தித்து வரும் நேரத்தில், கர்நாடக அரசோ அதிரடியான நடவடிக்கையை எடுத்தே விட்டது.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

பெங்களூரு பெரு நகர எல்லையில், வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இனி அங்கு வாகனங்களை பதிவு செய்ய முடியும். இந்த கடுமையான சட்டம், 2019ம் ஆண்டு முதல் அங்கு அமலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..

எனவே கார், பைக் வாங்குவதை குறைத்து கொண்டு, பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை மக்கள் தேர்வு செய்வார்கள் என அரசு எதிர்பார்க்கிறது. இதன்மூலமாக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு சாலைகளில் குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் எனவும் அரசு கருதுகிறது.

Source: Bloomberg

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. இந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..
  2. சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!
  3. உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most Expensive Parking Spot in the World Sold for Rs 5.3 Crore. Read in tamil
Story first published: Monday, July 16, 2018, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X