கோர விபத்தில் சிக்கியும் சின்ன கீறல் கூட இல்லாம தப்பிய தம்பதி! இந்த அளவுக்கு பாதுகாப்பான காரின் விலை இவ்ளோதானா

இந்தியாவில் சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெறுவது என்பது அரிதான ஒரு விஷயம் அல்ல. இங்கு அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெற்று கொண்டேதான் உள்ளன. ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கிய போதும் கூட, சிறிய கீறல் கூட இல்லாமல் தப்பிப்பது என்பது உண்மையிலேயே அரிதான ஒரு விஷயம்தான்.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களில் பயணம் செய்பவர்களின் வாழ்க்கையில் இந்த மேஜிக் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பான கார்கள் (Safest Cars), கடந்த காலங்களில் பலமுறை சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை சிறிய கீறல் கூட இல்லாமல் காப்பாற்றியுள்ளன.

Tata Tiago Accident

Popular Articles: டாடாவின் புது எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! ஒரு முறை சார்ஜ் போட்டுட்டா போதும்! 500 கிமீ தாராளமா ஓடும்!

இந்த வரிசையில் தற்போது நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் நொய்டா (Noida) பகுதியை சேர்ந்த ஒரு முதிய தம்பதி, சமீபத்தில் தங்களது டாடா டியாகோ (Tata Tiago) காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் அந்த கார் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், டாடா டியாகோ கார் தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இருப்பினும் முதிய தம்பதிக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர். கார் தலைகீழாக கவிழ்ந்த போதிலும் கூட, சிறிய கீறல் கூட இல்லாமல் அவர்கள் உயிர் தப்பியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tata Tiago Saves Old Couple Without A Scratch In A Massive Accident

இந்த சம்பவங்களை விளக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் என்ன? என்பது இன்னும் தெளிவாக நமக்கு தெரியவரவில்லை. டாடா டியாகோ இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும்.

குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Test) டாடா டியாகோ கார், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (4 Star Safety Rating) பெற்றுள்ளது. ஆனால் ஓரளவிற்கு குறைவான விலையிலேயே டாடா டியாகோ காரை வாங்க முடியும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.60 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் வெறும் 8.20 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும் (Ex-showroom Price). பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷனிலும் டாடா டியாகோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் இந்த செய்தியின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டபடி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விபத்தில் சிக்கும்போது, பயணிகள் சிறிய கீறல் கூட இல்லாமல் தப்பிக்கும் அதிசயங்களை அடிக்கடி காண முடியும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதுதான் இதற்கு காரணம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா பன்ச் (Tata Punch), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்கள் எல்லாம் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) வாங்கி அசத்தியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 5, 2023, 13:33 [IST]
English summary
Tata tiago saves old couple without a scratch in a massive accident viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+