முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கான காரணங்கள்!

Written By:

ஆசியாவின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் டிரைவருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளம் என்பதை கேட்டதுமே, பல ஆண்டுகள் விழுந்து விழுந்து படித்து எஞ்சினியர், டாக்டர் பட்டம் பெற்றவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

பேசாம, முகேஷ் அம்பானிக்கு டிரைவராக கூட போய்விடலாம் என்று பலர் காது பட சொன்னார்கள். ஆனால், முகேஷ் அம்பானியிடம் டிரைவராக வேலைக்கு சேர்வது, லேசுபட்ட காரியம் அல்ல. அதற்கு பல்வேறு கடினமான முறைகள் கையாளப்படுகின்றன.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

முகேஷ் அம்பானியிடம் பல நூறு கார்கள் இருக்கின்றன. அதனை இயக்குவதற்கு தேவைப்படும் ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தனியார் நிறுவனம்தான் முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுனர்களை தேர்வு செய்வதையும், கட்டுப்படுத்துவதுமான பொறுப்பை ஏற்றிருக்கிறது.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

கார் ஓட்டுனரின் பின்புலம், கார் ஓட்டுவதில் அனுபவம், விலை உயர்ந்த கார்களை இயக்குவதில் அனுபவம் உள்ளிட்டவற்றில் சிறந்த ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன் பிறகு நேர்முக தேர்வில் மொழிப்புலமை, கார் ஓட்டும் அனுபவம், கார் பழுது நீக்கும் அறிவு குறித்து ஆய்வு செய்யப்படும்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

அதில், தேர்வு செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கார்களை இயக்கும் முறை குறித்து ஆய்வு செய்யப்படுவர். பின்னர், அதில் சிறந்தவர்கள் அடையாளம் காணப்படும், அந்த ஓட்டுனருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

அதன் பின்னரே, ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டு, அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்யப்படும். இந்த தேர்வுகளை தாண்டி, பணியிலும் சிறப்பாக இருப்பவர்கள் அடையாளம் காணப்படும், முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் பெறுவர். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

அதற்கு முன்பாக, முகேஷ் அம்பானி பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்களில் விசேஷ தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அந்த கார் நிறுவனம் அளிக்கும் பயிற்சிகளில் தேர்வு பெற வேண்டும்.

இதர சுவாரஸ்ய செய்திகள் தொகுப்பு:

முகேஷ் அம்பானியின் அன்டிலியா சொகுசு வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்!

கார் கலெக்ஷனிலும் அக்ஷய் குமார் கில்லாடிதான்... !!

பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

அவசர சமயத்தில் காரை கையாள்வது, அதிவேகத்தில் பின்புறமாக காரை செலுத்தும் திறன், மனோதிடம் , உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். அதுவும், வெளிநாட்டில் உள்ள கார் நிறுவனத்தின் விசேஷ பயிற்சி மையங்களில் செயல்முறை மற்றும் விளக்க முறை பயிற்சிகளில் வெற்றி பெற வேண்டும்.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

அதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.

அதாவது, மிக கடினமான பயிற்சி முறைகளையும், மொழிப்புலமையையும் அவர்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும், ரூ.2.57 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய முகேஷ் அம்பானிக்கு ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றன.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

அந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை அந்த ஓட்டுனர்களுக்கு இருத்தல் அவசியம். அம்பானிக்கு பணம் முக்கியமல்ல. நம்பகமான, திறமையான ஓட்டுனரே தேவை. எனவே, அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கு அவர் கொடுக்கும் சம்பளம் ஒரு பெரும் பொருட்டாக இருக்காது.

முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்?

ஒவ்வொரு நொடியும் அச்சுறுத்தலான பணி என்பதை இங்கே வசதியாக நாம் மறந்துவிடக்கூடாது. உளவுத்துறை, அம்பானி வீட்டில் இயங்கும் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவர்களின் கண்காணிப்பில் எந்நேரமும் வாழ வேண்டிய சூழலையும் மனதில் வைத்தால், இந்த சம்பளம் ஒரு பொருட்டாக இருக்காது.

முகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ குண்டு துளைக்காத சிறப்பு கொண்ட 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இது போன்ற கார்களை இயக்குவதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓட்டுனர்களுக்கு அளிக்கும் சிறப்பு பயிற்சி குறித்த சாம்பிள் வீடியோவை இங்கே காணலாம்.

இதர சுவாரஸ்ய செய்திகள் தொகுப்பு:

முகேஷ் அம்பானியின் அன்டிலியா சொகுசு வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்!

கார் கலெக்ஷனிலும் அக்ஷய் குமார் கில்லாடிதான்... !!

பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Why Mukesh Ambani Gives Huge Salary To His Driver?

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark