போலீஸ்காரங்களுக்கு பிடித்த ராசி எதுன்னு தெரியுமா? அடிக்கடி மாட்டிக்குவாங்க... இந்த பரிகாரத்தை உடனே பண்ணீருங்க!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படி வாகனம் ஓட்டுவார்கள்? என்ற செய்தியின் முதல் பகுதியை நேற்று வெளியிட்டிருந்தோம். முதல் பகுதியில் 6 ராசிகளின் டிரைவிங் பண்புகளை கூறியிருந்தோம். இது இரண்டாவது பகுதி. இதில், எஞ்சிய 6 ராசிக்காரர்கள் எப்படி வாகனம் ஓட்டுவார்கள்? என்பதை பார்க்கலாம்.

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்கள், மிகவும் கருணையுள்ள டிரைவர்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். பைக், சைக்கிள் ஓட்டிகளுடன் எந்தவிதமான பிரச்னைகளும் இன்றி அவர்கள் சாலையை பகிர்ந்து கொள்வார்களாம். எனவே அவர்கள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் துலாம் ராசிக்காரர்கள், டிரைவர் இருக்கையில் இருக்கும்போது முடிவுகளை எடுக்க சற்று நேரம் எடுப்பார்கள் என கூறப்படுகிறது. துலாம் ராசிக்காரர்களின் தயக்க சுபாவம்தான் இதற்கு காரணம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

போலீஸ்காரங்களுக்கு பிடித்த ராசி எதுன்னு தெரியுமா? அடிக்கடி மாட்டிக்குவாங்க... இந்த பரிகாரத்தை உடனே பண்ணீருங்க!

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்கள், டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால் மிகவும் சமயோசிதமாக செயல்படுவார்கள் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். சவாலான சாலைகளிலும் அவர்கள் லாவகமாக வாகனங்களை ஓட்டி விடுவார்களாம். எனவே விருச்சிக ராசிக்கார்களை சிறந்த டிரைவர்கள் என கூறலாம். ஆனால் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தால், அவர்கள் ஆக்ரோஷமாகி விடுவார்கள். எனவே மற்ற வாகன ஓட்டிகளுடன் விருச்சிக ராசிக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்கள் டிரைவர் இருக்கையில் சுறுசுறுப்பாகவும், நம்பிக்கையாகவும் செயல்படுவார்கள். அத்துடன் அவர்கள் மற்றவர்களுக்கு உதவிகரமாகவும் செயல்படக்கூடியவர்கள். எனவே சாலையில் மற்றவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருப்பதை பார்த்து விட்டால், உடனடியாக வாகனத்தை நிறுத்தி உதவி செய்து விட்டு செல்லக்கூடியவர்களாக தனுசு ராசிக்காரர்கள் உள்ளனர். அதேபோல் சாலையில் வழி தெரியாமல் தடுமாறி கொண்டிருப்பவர்களுக்கு தனுசு ராசிக்காரர்கள் சரியான திசையையும் காட்டுவார்கள் என ஜோதிடம் கூறுகிறது.

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்கள் தாமதம் செய்வது மிகவும் அரிதான ஒரு விஷயம் ஆகும். அதாவது எங்கு செல்வதாக இருந்தாலும், சரியான நேரத்திற்கு கிளம்பி விடுவார்களாம். எனவே வாகனத்தில் அவசரம் இல்லாமல் அவர்கள் பயணம் செய்வார்களாம். அதேபோல் வாகனத்தில் பயணிக்கும்போது மகர ராசிக்காரர்கள் ரிஸ்க் எதையும் எடுக்க மாட்டார்களாம். எனவே மகர ராசிக்காரர்கள் டிரைவர் இருக்கையில் இருந்தால் பாதுகாப்பான பயணத்தை எதிர்பார்க்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்கள், மிகவும் புத்திசாலித்தனமானவர்களாம். எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, குறுக்கு வழிகளை கண்டுபிடித்து பயணம் செய்வார்களாம். இதன் மூலம் அவர்களால் நேரத்தை மிச்சம் பிடிக்க முடியுமாம். ஆனால் நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக போக்குவரத்து விதிகளையும் கும்ப ராசிக்காரர்கள் அடிக்கடி மீறுவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். எனவே காவல் துறையினரிடம் மாட்டி கொண்டு, அடிக்கடி அபராதம் செலுத்துவார்களாம். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதுதான், இந்த பிரச்னையை சரி செய்வதற்கான பரிகாரம். அதேபோல் சாகச பயணம் செய்வதிலும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் என்பது ஜோதிடர்களின் கருத்து.

மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்களுக்கு, பொறுமையும், சகிப்பு தன்மையும் அதிகம் என்கிறார்கள். அத்துடன் மீன ராசிக்காரர்கள் மிகவும் மென்மையானவர்களாம். எனவே சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுடன் மீன ராசிக்காரர்கள் தன்மையாக நடந்து கொள்வார்களாம். மற்ற வாகன ஓட்டிகளுடன், அவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது ஜோதிடர்களின் கருத்து. ஆனால் மீன ராசிக்காரர்கள், வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை வேகமாக எடுக்க மாட்டார்களாம்.

இதன் மூலம் அவர்கள் சாலையில் மற்ற வாகன ஓட்டிகளை குழப்பம் அடைய செய்து விடுவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். மற்ற வாகன ஓட்டிகளை குழப்பம் அடைய செய்வது என்பது சாலை விபத்துக்களுக்கு வழிவகுத்து விடும் என்பதை மீன ராசிக்காரர்கள் உணர வேண்டும். சரி, உங்கள் ராசி இங்கே இல்லையா? அப்படியானால் இந்த செய்தியின் முதல் பகுதியில் உங்கள் ராசி இடம்பெற்றிருக்கும். அதனை படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

Article Published On: Monday, December 12, 2022, 6:50 [IST]
English summary
Zodiac signs driving habits part 2
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+