2 லிமிடேட் எடிசன் புல்லட் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

கிளாசிக் குரோம் மற்றும் டெசர்ட் ஸ்ட்ரோம் என்ற பெயர்களில் இந்த மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புல்லட் கிளாசிக் மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக இவை இரண்டும் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.
இரண்டிலும் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27.7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட கிளாசிக் மோட்டார்சைக்கிளின் எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள்களில் எலக்ட்ரிக் ப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட பிஸ்டன் ரிங்குகள், ஆற்றல்வாய்ந்த சார்ஜிங் சர்க்யூட்டுடன் வந்துள்ளதால் ரைடிங்கில் புதிய அனுபவத்தை தரும்.
இந்த புதிய புல்லட் கிளாசிக் மோட்டார்சைக்கிள்களின் எஞ்சின் ஒன்றாக இருந்தாலும் வடிவத்திலும், வண்ணத்திலும் பல்வேறு மாறுதல்களுடன் வந்துள்ளன.
கிளாசிக் க்ரோம்:
கிளாசிக் க்ரோம் மோட்டார்சைக்கிள் தனது பெயருக்கு ஏற்றாற்போல், அதன் பெட்ரோல் டேங்க் பிரத்யேக க்ரோம் பூச்சுடன் பளபளக்கிறது. அகலமான மட்கார்டுகளை கொண்டுள்ள க்ரோமின் முன்பக்க மட்கார்டில் அணில் முதுகில் உள்ள கோடுகள் போன்ற டிசைன், தான் ஒரு லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள் என்பதை உணர்த்துகிறது.
இதன் டூல்ஸ் பாக்ஸ் ஓவல் வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும், தனது பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் பெட்ரோல் டேங்கில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
டேஞ்சர் விளக்குகளும் மிகப்பழமை வாயந்த டிசைனை கொண்டிருக்கிறது. மேலும், ராயல் என்பீல்டு வல்லுனர்களின் கைவண்ணத்தில் கிளாசிக் க்ரோம் மோட்டார்சைக்கிளின் க்ரோம் பூச்சு மற்றும் பெயிண்டிங் வேலைகள் மெச்சும்படியாக இருக்கிறது.
டெசர்ட் ஸ்ட்ரோம் மோட்டார்சைக்கிள் விபரங்களை தெரிந்துகொள்ள NEXT பட்டனை சொடுக்கவும்.


Click it and Unblock the Notifications








