2 புதிய லிமிடேட் எடிசன் புல்லட் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

Desert storm
பாலைவனப்புயல்:

பாலைவனப்புயல் என்ற நாமதேயத்துடன் வந்துள்ள டெசர்ட் ஸ்ட்ரோம் லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள் மணல் கலரிலேயே வந்துள்ளது. க்ரோம் பூச்சு இல்லாவிட்டாலும் லிமிடேட் எடிசன் என்பதை காட்டிக்கொள்ள இதுவரை வந்திராத புதிய கலரில் வந்துள்ளது ஸ்ட்ரோம்.

இதன் டூல்ஸ் பாக்ஸ் வட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. க்ரோம் மற்றும் ஸ்ட்ரோமில் சைலென்சர்கள் பழைய பிளாட்பார்ம் புல்லட் மோட்டார்சைக்கிள்களில் உள்ளதுபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்கிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய சின்னம் கம்பீரமாக காட்சி கொடுக்கிறது.

இரண்டிற்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள்:

கிளாசிக் க்ரோம் மோட்டார்சைக்கிளை பார்த்தவுடனே அதன் க்ரோம் பூச்சுகள் நம்மை பரவசப்படுத்துகின்றன. ஆனால், டெசர்ட் ஸ்ட்ரோம் க்ரோம் பூச்சு இல்லாமல் சாதாரண பெயிண்டிங் கைவண்ணத்தில் வந்துள்ளது. இரண்டிலும் வீல் பேஸ் 1370மிமீ. ஆனால், நீளத்தில் டெசர்ட் ஸ்ட்ரோம் சற்று கூடுதலாக இருக்கிறது.

க்ரோம் 2160 மிமீ நீளத்தையும், டெசர்ட் 2180மிமீ நீளத்தையும் கொண்டிருக்கிறது. இரண்டு மோட்டார்சைக்கிள்களும் 500 மிமீ அகலத்தை கொண்டு சமமாக இருந்தாலும், மீண்டும் உயரத்தில் டெசர்ட் ஸ்ட்ரோம் அதிமாகி இருக்கிறது. க்ரோம் 1050மிமீ உயரத்தையும், ஸ்ட்ரோம் 1080 மிமீ உயரத்தையும் கொண்டிருக்கின்றன.

நீண்ட தூரம் பயணம் செய்தாலும் சோர்வு தட்டாத வகையில் இரண்டிலும் சிங்கிள் ஸ்பிரிங் சப்போர்ட் கொண்ட ஒற்றை இருக்கையை கொண்டுள்ளன. இரண்டிலும் முன்பக்கம் 288மிமி டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் 153 மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் வாடிக்கையாளர் மத்தியில் பிராண்டு மேலும் உயர்த்தும் என்று ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் சாஜி கோஷி கூறினார்.

விலை:

லிமிடேட் எடிசன் கிளாசிக் க்ரோம் மோட்டார்சைக்கிள் ரூ.1,65,400 விலையிலும், டெசர்ட் ஸ்ட்ரோம் மோட்டார்சைக்கிள் ரூ.1,58,200 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 30, 2011, 11:10 [IST]
English summary
The Desert Storm limited edition draws inspiration from the World War era, with its bold, macho sand colour scheme. The matt finish paint job, with the Royal Enfield monogram on the tank and the thigh pads, portray the same strength and grit that of a true veteran.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+