2012 ல் கலக்கப்போகும் 8 புதிய ஸ்கூட்டர்கள்-பகுதி 2

Vespa scooter

ஹீரோ மேஸ்ட்ரோ:

ஹோண்டா நிறுவனம் பிரிந்த பிறகு ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்கூட்டர் மாடல்தான் மேஸ்ட்ரோ. ஹோண்டாவின் ஏவியேட்டர் ஸ்கூட்டரின் ஸ்டிக்கரை மட்டும் மாற்றிவிட்டு ஹீரோ தனது சொந்த பிராண்டில் களமிறக்கும் மாடல்தான் மேஸ்ட்ரோ. ரைடிங், சொகுசு என அனைத்திலும் நல்ல பெயர் வாங்கியுள்ளதால் மேஸ்ட்ரோவிலும் அதையே கண்டிப்பாக எதிர்பார்க்க முடியும்.

யமஹா ரே:

ஜப்பானிய நிறுவனங்கள் இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வருவதை கண்டு, யமஹாவும் தற்போது ஸ்கூட்டர் விற்பனையில் களமிறங்க உள்ளது. இதற்காக, டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது ரே கான்செப்ட் மாடல் ஸ்கூட்டரை காட்சிக்கு வைத்திருந்தது. கண்களை வெகுவாக கவரும் அம்சங்களுடன் இருந்த இந்த கான்செப்ட் ஸ்கூட்டர் உற்பத்தி நிலைக்கு வரும்போது பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், ரே என்ற பெயரையும் மாற்றி மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

வெஸ்பா 125 எல்எக்ஸ்:

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மீண்டும் தடம் பதிக்க இருக்கும் வெஸ்பா ஸ்கூட்டர் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என்று நம்பலாம். தனது ஸ்கூட்டரை பிரிமியம் ரகத்தில் நிலை நிறுத்த வெஸ்பாவின் தாய் நிறுவனமான பியாஜியோ திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஸ்கூட்டர்கள் ரூ.60,000 முதல் ரூ.70,000 விலையில் விற்பனைக்கு கொண்டு வர பியாஜியோ முடிவு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்:

இதுதவிர, டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு மத்தியில் க்யூப் ஹைபிரிட் ஸ்கூட்டரையும், இந்த ஆண்டு இறுதியில் புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 19, 2012, 12:03 [IST]
English summary
The Indian two wheeler segment is all set to get a boost from new arrivals especially in the automatic scooter segment. Several new scooters have already been displayed at the recently concluded Delhi Auto Expo. The scooter segment has become immensely attractive to manufacturers and they are keen to cash in on the increasing consumer interest by launching several new models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+