2012 ல் கலக்கப்போகும் 8 புதிய ஸ்கூட்டர்கள்-பகுதி 1

இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட் படுவேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, பவர் ஸ்கூட்டர் மார்க்கெட் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. மாநகர போக்குவரத்து நெரிசல்களில் பவர் ஸ்கூட்டர்கள் அருமையான கையாளுமையை மற்றும் சிரமமில்லா டிரைவிங்கை கொடுப்பதும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள் மீதான மோகத்தை அதிகரிக்க காரணங்கள்.

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட் அசுர வளர்ச்சியை கண்டு யமஹா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பார்வை ஸ்கூட்டர் மார்க்கெட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளன.

மேலும், இந்த ஆண்டில் களமிறங்க உள்ள பெரும்பாலான புதிய ஸ்கூட்டர் மாடல்கள் ஏற்கனவே டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில், இந்த ஆண்டு மார்க்கெட்டை கலக்க இருக்கும் ஸ்கூட்டர்களின் மாடல்களை பற்றிய தகவல்களை காணலாம்.

மஹிந்திரா டூயூரோ டீ இசட்:

மஹிந்திராவின் டூயூரோ ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலான டூயூரோ டீ இசட் ஸ்கூட்டர் சமீபத்தில் தென் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இந்திய சாலைநிலைகளுக்கு உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. 125 சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வந்துள்ள இந்த ஸ்கூட்டர் பிக்கப்பில் பின்னி எடுக்கும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது. தவிர பிற ஸ்கூட்டர்களை விட அதிக மைலேஜ் கொடுக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.45,235 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹோண்டா டியோ 110:

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டியோவின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹோண்டா டியோ வந்துள்ளது. ஆனால், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த மாடலில் 102 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டியோ 110 சிசி எஞ்சினுடன் வருகிறது. இதனால், அதிக பெர்ஃபார்மென்சிற்கு உத்தரவாதம். தவிர, வடிவமைப்பிலும் பல புதிய மாற்றங்களை கண்டுள்ளது புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

சுஸூகி ஸ்விஷ்:

அக்ஸெஸ் 125 ஸ்கூட்டர் மூலம் நல்ல பெயர் வாங்கியுள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கும் வகையில் களமிறக்கியுள்ள ஸ்கூட்டர்தான் ஸ்விஷ். 125 சிசி எஞ்சினுடன் வரும் சுஸுகி ஸ்விஷ் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும் என்று சுஸுகி கூறியுள்ளது. வரும் மார்ச்சில் வரும் இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.45,431 விலையில் விற்பனைக்கு வருகிறது.

(அடுத்த பக்கத்தில் வெஸ்பா, யமஹா, ஹீரோ மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விபரம்)

Most Read Articles
English summary
The Indian two wheeler segment is all set to get a boost from new arrivals especially in the automatic scooter segment. Several new scooters have already been displayed at the recently concluded Delhi Auto Expo. The scooter segment has become immensely attractive to manufacturers and they are keen to cash in on the increasing consumer interest by launching several new models.
Story first published: Thursday, January 19, 2012, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X