அட்டாகாசமான புதிய வண்ணங்களில் அப்பாச்சி, ஃபீனிக்ஸ் பைக்குகள்!!
பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய வண்ணங்களில் அப்பாச்சி, ஃபீனிக்ஸ் பைக்குகளை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இரண்டு பைக்குகள் கிடைக்கும் புதிய வண்ணங்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160
அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் தற்போது 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அப்பாச்சி கிராபிக்ஸ் ஸ்டிக்கருடன் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், டைட்டானியம் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் 159.7சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 15.2 பிஎச்பி பவரையும், 13.1 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

ஃபீனிக்ஸ்
ஃபீனிக்ஸ் பைக் தற்போது அல்பைன் ஒயிட் என்ற வெள்ளை நிறத்தில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர்கள் கொண்ட இரட்டை வண்ண அலங்காரத்துடன் கிடைக்கும்.

எஞ்சின்
இந்த பைக்கில் 125சிசி திறன் கொண்ட ஈக்கோத்ரஸ்ட் என்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் மேப்பிங் இக்னிஷன் சிஸ்டத்தில் இயங்கும் இந்த எஞ்சின் அதிக மைலேஜ் கொடுப்பதுடன் குறைந்த கார்பன் புகையை வெளியிடும். இந்த பைக் லிட்டருக்கு 67 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது.

நவீன தொழில்நுட்பங்களின் சங்கமம்
நவீன தொழில்நுட்பங்களின் சங்கமாக விளங்கும் ஃபீனிக்ஸ் பைக்கின் சிறப்பு பார்வை பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








