நவீன வசதிகளின் சங்கமம்... புதிய டிவிஎஸ் ஃபீனிக்ஸ்- சிறப்பு பார்வை
மாஸ் மார்க்கெட்டில் 125 சிசி பைக்குகளுக்கான வரவேற்பை மனதில் கொண்டு டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய 125சிசி பைக் மாடல்தான் ஃபீனிக்ஸ். 125 சிசி செக்மென்ட்டில் எந்தவொரு பைக் மாடலிலும் இல்லாத புதிய வசதிகளுடன் ஃபீனிக்ஸ் வந்துள்ளது.
மேலும், குறைந்த கார்பன் புகை மற்றும் அதிக மைலேஜ் தரும் புதிய தலைமுறை ஈக்கோத்ரஸ்ட் எஞ்சின் ஃபீனிக்சில் பொருத்தப்பட்டுள்ளது. கவர்ச்சியான புதிய அம்சங்களை கொண்ட டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக்கில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாற்றான்..!!
டிவிஎஸ் விற்பனை செய்து வந்த ஃப்ளேம் 125சிசி பைக்குக்கு மாற்று மாடலாகத்தான் ஃபீனிக்ஸ் வந்துள்ளது.

டூயல் டோன் கிராபிக்ஸ்
இரட்டை வண்ண கலவையுடன் கூடிய கிராபிக்ஸ் டிசைனர் ஸ்டிக்கர் டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக்குக்கு கூடுதல் கவர்ச்சியை வழங்குகிறது.

எல்இடி பைலட் லேம்ப்
ஹெட்லைட்டின் இருபுறத்திலும் எல்இடி பைலட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

புதிய ஈக்கோத்ரஸ்ட் எஞ்சின்
புதிய 125 சிசி திறன் கொண்ட ஈக்கோத்ரஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் மேப்பிங் இக்னிஷன் சிஸ்டம் கொண்டிருப்பதால் அதிக மைலேஜ் கொடுப்பதுடன் குறைந்த கார்பன் புகையை வெளியிடும். இந்த பைக் லிட்டருக்கு 67 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது.

ஹசார்டு இன்டிகேட்டர் லைட்
காரில் பொருத்தப்படும் ஹசார்டு இன்டிகேட்டர் வசதி இருக்கிறது. வலது கைப்பிடியில் இருக்கும் பட்டனை தட்டினால் இரண்டு இன்டிகேட்டர் விளக்குகளும் ஒரே சமயத்தில் ஒளிரும்.

டிஜிட்டல் மயம்!
ஃபீனிக்ஸ் பைக்கில் முழுவதும் டிஜிட்டல் முறையில் இயங்கும் இன்ஸ்ட்ரூமெனட் கன்சோலை பொருத்தப்பட்டுள்ளது. லோ பேட்டரி இன்டிகேட்டர், டிரிப் மீட்டர், சர்வீஸ் நினைவூட்டும் வசதிகளை கொண்டிருக்கிறது.

ரோட்டோ பெட்டல் டிஸ்க் பிரேக்
முன்சக்கரத்தில் அதிக பாதுகாப்பை தரும் ரோட்டோ பெட்டல் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை விலை விபரம்
சென்னையில் டிரம் பிரேக் மாடல் ரூ.51,000 விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.53,000 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
வண்ணங்கள்
மொராக்கன் ரெட், அலாஸ்கன் கிரீன், பெல்ஜியன் பிளாக் ரெட், ஹெல்சின்கி பிளாக் சில்வர் மற்றும் ஆக்ஸ்போர்டு கிரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








