உங்களது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் பொருத்தியிருப்பவர்கள் உடனடியாக அதனை மாற்றுவது நல்லது. இல்லையெனில், முதலுக்கே மோசமாகிவிடும்.

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் என்றாலே, அதன் அலாதி தட தட சப்தம்தான் உரிமையாளர்களை கவர்ந்த விஷயம். அதனை கெத்தாகவும் கருதுகின்றனர். சிலர் தங்களது கெத்தை காட்டும் விதத்தில், தங்களது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் சைலென்சரில் மாறுதல் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

இதுபோன்று, மாறுதல் செய்து பயன்படுத்துவோருக்கு இப்போது போலீசார் ஆப்பு வைக்க துவங்கி இருக்கின்றனர். ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் அதிக சப்தத்தை எழுப்பும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை பொருத்தியிருக்கும் உரிமையாளர்களை போலீசார் குறிவைத்து வேட்டையாடி வருகின்றனர்.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

புனே, மும்பை, பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களை சேர்ந்த போலீசார் இதுபோன்று அதிக சப்தத்தை எழுப்பும் சைலென்சர் பொருத்திய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை பிடிப்பதற்கு வாகன தணிக்கையை நடத்தி வருகின்றனர். கேரள போலீசாரும் இதுபோன்ற மோட்டார்சைக்கிள்களை பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

இதுதொடர்பான படங்களையும் பெங்களூர் போலீசார் வெளியிட்டு இருக்கின்றனர். மாறுதல்கள் செய்யப்பட்ட அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

மேலும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் மாறுதல் செய்யப்பட்ட சைலென்சரை உடனடியாக கழற்றி, அடித்து உடைத்து விடுகின்றனர்.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

எனவே, இதுபோன்று மாறுதல் செய்யப்பட்ட சைலென்சர் பொருத்தியிருக்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வைத்திருப்பவர்கள் உடனடியாக சாதாரண சைலென்சரை பொருத்திக் கொள்வது நல்லது.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

இல்லையென்றால், முதலுக்கு மோசம் என்ற அளவில் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சைலென்சர்களை பொருத்தியிருக்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 190(2)ன் படி, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிகக்கப்பட்டு இருக்கின்றது.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

இதுவரை 11 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளதுடன், படங்களையும் வெளியிட்டுள்ளனர். அந்த மோட்டார்சைக்கிள்களில் உள்ள சைலென்சரையும் சுத்தியல் வைத்து அடித்து உடைப்பதையும் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

இந்த குற்றத்திற்கு ரூ.1,000 வரை அபாராதம் விதிக்கப்படுவதாகவும் அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, புனே போலீசாரும் மாறுதல் செய்யப்பட்ட சைலென்சர் பொருத்திய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

Via- Rushlane

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

அண்மையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை சில நிமிடங்களில் பூட்டை உடைத்து திருடுவதை போலீசார் முன்னிலையில் திருடன் செய்து காட்டிய வீடியோ, உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

உங்களது புல்லட்டில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் உள்ளதா?

இரண்டு லட்சம் மதிப்புடைய மோட்டார்சைக்கிளை இரண்டே நிமிடங்களில் திருடு போகும் வாய்ப்பு இருப்பதை அந்த வீடியோ காட்டியது.

இதனையடுத்து, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், தற்போது போலீசாரின் பிடி இறுகி இருப்பது பல ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
English summary
Royal Enfield owners with loud exhausts beware. Because Cops will seize your bike and break your customise silencer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X