ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!
ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் சூப்பர் பைக்கின் குறைவான விலை மாடல் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் என்ற பெயரில் இந்த மாடல் அழைக்கப்படும் இந்த மாடல் ரூ.8.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது.

இதனைத்தொடர்ந்து, தற்போது ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் என்ற விலை உயர்ந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ரூ.10.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது.

இந்த சூப்பர் பைக்கில் 121 பிஎச்பி பவரையும், 77 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல, 765சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சூப்பர் பைக்கில் புதிய க்ராங்க், பிஸ்டன்கள் பொருத்தப்பட்டு இருப்பதுடன், போர் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூப்பர் பைக்கில் பல உயர்வகை சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. பிரெம்போ எம்50 பிரேக்குகள், ஷோவா பிக் பிஸ்டன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன், பின்புறத்தில் ஓலின்ஸ் மோனோஷாக் அப்சார்பர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இந்த திரையின் பிரகாசத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

இந்த சூப்பர் பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ரைடு பை ஒயர் த்ராட்டில் சிஸ்டம் போன்றவை முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள். இதுதவிர்த்து, ரோடு, ரெயின், ஸ்போர்ட், டிராக் மற்றும் இன்டிவிஜூவல் என 5 விதமான டிரைவிங் மோடுகளும் உள்ளன.

இந்த புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக்கானது மேட் சில்வர் ஐஸ் மற்றும் ஃபான்டம் பிளாக் என்ற இரண்டு விதமான வண்ணக் கலவையில் கிடைக்கும்.

இந்த புதிய பைக்கிற்கு 60 விதமான கஸ்டமைஸ் ஆக்சஸெரீகளை ட்ரையம்ஃப் நிறுவனம் வழங்குகிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் மாடல் கவாஸாகி இசட்900 மற்றும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 சூப்பர் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications