ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது பஜாஜ் பைக் நிறுவனம்!

Written By:

சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. சர்வதேச அளவில் இந்த நிறுவனங்களும் கூட்டு நிறுவனமாக செயல்பட முடிவு செய்துள்ளன. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது பஜாஜ் பைக் நிறுவனம்!

ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் இணைந்து நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை உருவாக்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, 400சிசி முதல் 800சிசி வரையிலான எஞ்சின் ரகத்தில் இந்த புதிய பைக் மாடல்கள் உருவாக்கப்படும்.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது பஜாஜ் பைக் நிறுவனம்!

அதேபோன்று, இந்தியாவுக்கென நடுத்தர வகை ட்ரையம்ஃப் பைக்குகளை உருவாக்கவும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், டிரையம்ஃப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பஜாஜ் பிராண்டில் சக்திவாய்ந்த புதிய பைக்குகளை அறிமுகம் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது பஜாஜ் பைக் நிறுவனம்!

பஜாஜ் நிறுவனத்தின் குறைந்த செலவீனத்தில் பைக்குகளை உருவாக்கும் நுட்பத்தை ட்ரையம்ஃப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், டிரையம்ஃப் நிறுவனம் பல வெளிநாடுகளில் கால் பதிப்பதற்கும் இந்த கூட்டணி மூலமாக வழி வகை ஏற்பட உள்ளது.

ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது பஜாஜ் பைக் நிறுவனம்!

தற்போது ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவில் 16 பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அதில், 20 சதவீத அளவுக்கு மட்டுமே மானேசரில் உள்ள ட்ரையம்ஃப் ஆலையில் உற்பத்தி செய்யபப்படுகின்றன. மீதமுள்ள அனைத்து மாடல்களும் இறக்குமதி செய்து விற்கப்படுகின்றன.

ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது பஜாஜ் பைக் நிறுவனம்!

ஆனால், பஜாஜ் ஆட்டோ கூட்டணி மூலமாக, அனைத்து ட்ரையம்ஃப் பைக்குகளும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்ப ஏற்பட்டுள்ளது. மேலும், போட்டியாளர்களைவிட மிக குறைவாக விலை நிர்ணயம் செய்வதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது பஜாஜ் பைக் நிறுவனம்!

இந்த புதிய கூட்டணி மூலமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சகன் ஆலையில் கேடிஎம், பஜாஜ், ஹஸ்க்வர்னா, ட்ரையம்ஃப் என நான்கு பிராண்டின் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

English summary
Triumph Motorcycles And Bajaj Auto Announce Partnership.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark