2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.65 லட்சம் மதிப்புடைய தங்கள் பைக்குகளை, குப்பை மேட்டில் வீசி வருகின்றனர்.

By Arun

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.65 லட்சம் மதிப்புடைய தங்கள் பைக்குகளை, குப்பை மேட்டில் வீசி வருகின்றனர். இந்த வரிசையில் இரண்டாவதாக ஒரு ராயல் என்பீல்டு பைக், தற்போது குப்பை மேட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்துடனான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உறவு, முப்படையினரின் சேவையை கௌரவிக்கும் விதத்தில், இந்த மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

இதுதவிர இந்தியாவில், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் என்ற பெருமையையும், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பெறுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.62 லட்சம் மட்டுமே.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்திருப்பது, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்டுதான் பெகாசஸ் 500 எடிசன் மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியது. WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை, இங்கிலாந்து நாட்டு வீரர்கள், போர் முனையில் பயன்படுத்தினர்.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

உலகம் முழுவதும் 1,000 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது. இதில், இந்தியாவிற்கு 250 மோட்டார் சைக்கிள்கள் ஒதுக்கப்பட்டன. எனவே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை சொந்தமாக்க கடும் போட்டி நிலவியது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவிற்கு என ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும், வெறும் 178 வினாடிகளில் விற்று தீர்ந்தன. இது ஒரு புதிய சாதனையாக கருதப்பட்டது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

பெகாசஸ் 500 எடிசனின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம் (ஆன்ரோடு ரூ.2.65 லட்சம்). இது லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. வேறு எந்த மோட்டார் சைக்கிள்களிலும் இல்லாத பிரத்யேகமான அம்சங்கள், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் கூறியது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்த அடுத்த சில வாரங்களிலேயே கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்துவிட்டது. இங்கேதான் பிரச்னை தொடங்கியது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளானது கிட்டத்தட்ட அப்படியே பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிளை போன்றே உள்ளது. இதனால் 'தனித்துவம்', 'பிரத்யேகம்' என்ற வார்த்தைகளை கூறி ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக பெகாசஸ் 500 உரிமையாளர்கள் தெரிவிக்க தொடங்கினர்.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

இத்தனைக்கும் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளுடன் ஒப்பிடுகையில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ரூ.80 ஆயிரம் அதிகம். அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி கிடையாது. அதுவும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 250 பைக்குகளில் மட்டும்தான் ஏபிஎஸ் கிடையாது. வெளிநாடுகளில் விற்பனையான எஞ்சிய 750 மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

இதனால் பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர். தங்களை ஏமாற்றிய ராயல் என்பீல்டு நிறுவனத்தை அவமதிக்கும் விதமாக, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை, உள்ளூர் நகராட்சி அமைப்புகளின் குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

இந்த சூழலில், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை, அதன் உரிமையாளர் ஒருவர் குப்பையில் வீசினார். இந்த புகைப்படங்கள் நேற்று முன் தினம், சமூக வலை தளங்களில் வைரலானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெகாசஸ் 500 எடிசன் தற்போது குப்பையில் வீசப்பட்டுள்ளது.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

நொய்டாவை சேர்ந்த உரிமையாளர்கள் ஒருவர்தான், இதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 2 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களும் உண்மையிலேயே குப்பையில் வீசப்பட்டதா? அல்லது வெறுமனே புகைப்படம் எடுப்பதற்காக மட்டும் இப்படி செய்தனரா? என்பது உறுதியாகவில்லை.

2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன்,க்ளவ்லேண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல் என்பீல்டுக்கு கடும் போட்டியை வழங்க முடிவு செய்திருக்கும் சூழலில் நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Most Read Articles

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக லான்ச் செய்யப்பட்டுள்ள புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

English summary
Royal Enfield Pegasus 500 Owners Protest Continues. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X