ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள், எஞ்சின், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு போட்டியாக புதிய மஹிந்திரா மராஸ்ஸோ களமிறக்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் ரூ.1,400 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கட்டுமானத் தரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு போன்ற அம்சங்களில் உலகத் தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய கார் மோனோகாக் சேஸீயில் இந்த கார் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீனை மனதில் கொண்டு சிறப்பான ஏரோடைனமிக் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் வசதிகள் மற்றும் சிற்ப்பம்சங்களை பொறுத்து M2, M4, M6 மற்றும் M8 ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த புதிய எம்பிவி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும்.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். இன்ஸ்டரூமென்ட் க்ளஸ்ட்டரில் இரண்டு டயல்களுக்கு நடுவில் 4.2 அங்குல மின்னணு திரையில் கார் இயக்கம் குறித்த முக்கியத் தகவல்களை பெறும் வசதி இருக்கிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் இன்டீரியர் இரட்டை வண்ணக் கலவை பாகங்களால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வாய்ஸ் கமாண்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, கூல்டு க்ளவ் பாக்ஸ், சர்ரவுண்ட் ரூஃப் ஏசி, ஃபாலோ மீ ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா போன்ற பல முக்கிய வசதிகள் உள்ளன.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 17.6 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாரஸ் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதி நடைமுறைக்கு வரும்போது, பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் டியூவல் ஏர்பேக், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தமாக இடம்பெற்றிருக்கும்.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் அக்வா மரைன், ஐஸ்பெர்க் ஒயிட், போசிடன் பர்ப்புள், மரைனர் மரூன், ஓசியன் பிளாக் மற்றும் ஷிம்மரிங் சில்வர் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 7 சீட்டர் மாடலைவிட 8 சீட்டர் மாடல்கள் ரூ.5,000 கூடுதல் விலையில் கிடைக்கும். மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலைவிட கூடுதல் விலை கொண்ட மாடலாக வந்துள்ளது.

Recommended Video

ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! — Tamil DriveSpark
ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.11,000 முன்பணத்துடன் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் இந்த புதிய கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கிறது.

ரூ.10 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!
Variant Price
M2 Rs 9,99,000
M4 Rs 10,95,000
M6 Rs 12,40,000
M8 Rs 13,90,000

More from DriveSpark

Article Published On: Monday, September 3, 2018, 13:21 [IST]
English summary
All new Mahindra Marazzo MPV car has been launched in India today at a starting price of ₹ 9.9 lakh (ex-showroom, India).
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+