விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

கடந்த மாதம் 62446 அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது சுஸுகி. சுசூகி நிறுவனம் 41 சதவிகித வளர்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் முறையே பதித்து வருகிறது மிக்க சிறப்ப

பிரபல இருசக்கர வாகன தயாரிப்பாளரான சுசூகி நிறுவனம் ஜப்பானை தலையகமாக கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனம் அண்மையில் சுசூகி பர்க்மன் ஸ்ட்ரீட் எனப்படும் வாகனத்தை வெளியிட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் இதன் விலை Rs. 68000/-* ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வாகனம் தற்பொழுது அதன் அதிகபட்ச வாடிக்கையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

இந்தியாவின் 125CC ரக ஸ்கூட்டர் மார்க்கெட் தற்போது வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த மார்க்கெட்டில் சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. அண்மையில் இந்த மார்க்கெட்டில் சுஸுகி நிறுவனம் பர்க்மேன் ஸ்கூட்டரையும் களமிறக்கியது.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

இந்த நிலையில், கடந்த மாதம் 62446 அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது சுஸுகி. சுசூகி நிறுவனம் 41 சதவிகித வளர்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் முறையே பதித்து வருகிறது மிக்க சிறப்பு.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

இந்த புதிய பர்க்மான் ஸ்ட்ரீட் வாகனம் வெற்றியில் முக்கால்வாசி அளவை பெற்றிருக்கிறது. ஆம் 55,000 வடியாளர்களை தன்வசப்படுத்தி இது முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஜூலை 2018 இல் அறிமுகமாகி இந்த குறுகிய காலத்தில் நிறைந்த மதிப்பையும் விற்பனை சாதனையையும் நிறுவனத்திற்கு இந்த வாகனம் பெற்று தந்துள்ளது. இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இது தனது அழகுற அமையப்பெற்ற வித்யாசமான தோற்றதால் இன்னும் வடியாளர்களை இழுத்துக்கொண்டு தான் இருக்கிறது.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

இந்த சுசூகி பர்க்மன் ஸ்ட்ரீட் 125CC வாகனம் தனது செயல்திறனுக்காக 124CC ஏர் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இது சிங்கள் சிலிண்டர் என்ஜின் என்ற போதிலும் இதன் செயல் திறன் முற்றிலும் திருப்திகரமாய் உள்ளது. ஆம் அவை 8.05BHP & 10.2NM டார்க் திறனை வழங்கும். இந்த என்ஜின் CVT தொழில்நுட்பத்தில் இயங்கும் கியர் பாக்சுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேல்கூறப்பட்ட அத்துணை சிறப்பம்சங்கள் மற்றும் கோட்பாடுகள் அப்படியே அக்சஸ் 125 CC வாகனத்திலும் அமைந்துள்ளது.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

மேற்கத்திய ஐரோப்பியன் நாடுகளில் உள்ள வாகனங்களை ஒத்த இதன் உடலமைப்பு மட்டும் கட்டுமான பொருட்கள் இதன் வெளித்தோற்றத்திலேயே நம்மை பாதி முழுகவைத்துவிடுகிறது. இதன் வலுவான முன்பக்க பாதுகாப்புகள், தனிப்பட்ட வடிவிலான ஹாண்டில் பார், மற்றும் இதறபிர இன்ன சிறப்பம்சங்கள் இந்த வாகனத்தை 125CC ரக வாகனங்களில் தன்னை தனிமை படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்கிறது. பண்டிகை காலம் தற்பொழுது நெருங்கி கொண்டிருப்பதால் இதன் விற்பனை சாதனை இன்னும் உயர உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

இந்த சந்தர்ப்ப வெற்றியை பயன்படுத்தி, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை இழக்க மனமில்லாததால் சுசூகி மேலும் பல புதிய செயல் திறன் கொண்ட வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. தற்பொழுது சுசூகி நிறுவனம் தனது அடுத்த 250CC ரக வாகனத்தை தயாரித்துக்கொண்டிருப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் உலவுகின்றன.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

இது வேறெதுமல்ல FZ250 ஆகும். இந்த வாகனம் GIXXER 250 வாகனத்தை நலம் விசாரிக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் GIXXER 150 வாகனம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது மறுக்கப்பட முடியாத உண்மை.

விற்பனையில் கலக்கும் புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்!

சுசூகி பர்க்மன் 125 தனது முழு செயல் திறன் மற்றும் தோற்றத்தை கொண்டு தனது அதிகபட்ச விற்பனை நிலையை அடைந்துள்ளது. இதற்கு உறுதுணையாய் அக்சஸ் வாகனமும் உடன்நின்று ஆகஸ்ட் மாத விற்பனையில் அணைத்து நிறுவனத்திற்கு ஆப்பு வைத்துவிட்டது. போகும் போக்கை பார்த்தால் வரும் தீபாவளி நேரத்தில் இவ்விரு வாகனமும் இன்னும் என்னென்ன ஆட்டங்கள் போடா காத்திருக்கின்றவோ.

Most Read Articles

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக லான்ச் செய்யப்பட்டுள்ள புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

English summary
Japanese two-wheeler maker Suzuki recently launched the new Burgman Street in the Indian market with a price tag of Rs 68,000 ex-showroom (Delhi). Now, riding on the sales of the Suzuki Burgman Street, the company has recorded its highest sales in the domestic market in August 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X