50,034 யூனிட் டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!!!

ஹோண்டா நிறுவனம், அதன் 50,034 இருசக்கர வாகனங்களை கோளாறின் காரணமாக திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அதிர்ச்சி காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்தியர்கள் பெரும்பாலானோர் உள்நாட்டு தயாரிப்பைக் காட்டிலும் வெளிநாட்டு உற்பத்தி பொருட்களின்மீதே அதிகம் மோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதனை, நம் வீட்டில் இருக்கும் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் இவற்றைப் பார்த்தாலே தெரிந்துவிடும். குறைந்தது 100-க்கு 90 சதவீதம் வெளிநாட்டு பொருட்களாகதான் இருக்கும்.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

அதேவகையில்தான், வாகன பயன்பாடும் நமது நாட்டில் இருக்கின்றது. உள்நாட்டு தயாரிப்புகளான ஹீரோ, பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும், வெளிநாட்டு வாகனங்களுக்கே இந்தியர்கள் மத்தியில் அதிக மவுசு நிலவி வருகின்றது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இது, இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி நான்கு மற்றும் கன ரக வாகனங்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் மறுக்க முடியாத ஒன்று.

அந்தவகையில், நாட்டில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களாக ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. அதிலும், அந்நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்குதான் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இதற்கு அந்த ஸ்கூட்டர், மலிவு விலையைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேசமயம், அது விலைக்கேற்ப பல அம்சங்களையும், அதிக மைலேஜையும் வழங்கும் ஸ்கூட்டராக இருக்கின்றது. இதன்காரணமாகவே, இந்திய இளசுகள் மத்தியில் அதிக வரவேற்பைப் இந்த ஸ்கூட்டர் பெற்று வருகின்றது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

மேலும், இதனை தக்க வைத்துக் கொள்ளும்வகையில், அந்நிறுவனம் அவ்வப்போது இந்த ஸ்கூட்டரில் அப்டேட்டுகளை வழங்கி, அதன் சந்தையை எப்போதும் அதன் பக்கமே வைத்து கொள்கின்றது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இந்நிலையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், நேற்றைய (வெள்ளிக்கிழமை) தினத்தில் ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரான நான்கு மாடல் இருசக்கர வாகனங்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

அவ்வாறு, 50,034 வாகனங்களுக்கு அந்நிறுவனம் அழைப்பு விடுக்க உள்ளது. இதில், அவியேட்டர் (டிஸ்க்), ஆக்டிவா 125 (டிஸ்க்), கிரேசியா(டிஸ்க்), சிபி ஷைன் (செல்ஃப் டிஸ்க்) சிபிஎஸ் ஆகிய நான்கு மாடல்கள் அடங்கும்.

இந்த மாடல்களின் முன்பக்க பிரேக்கில் ஏற்பட்ட கோளாறே, இந்த அழைப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

ஹோண்டா நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட பரிசோதனையில், முன்பக்க பிரேக் மாஸ்டர் சிலிண்டரில் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தது. வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக கொடுத்துவந்த புகாரின் காரணமாக அந்நிறுவனம் இந்த நடவடிக்கையில் இறங்கியது. அப்போதுதான், இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

அதிலும், நடப்பாண்டின் பிப்ரவரி 4ம் தேதி முதல் ஜூலை மாதம் 3ம் தேதி வரை தயாரான வாகனங்களில் மட்டும் இந்த கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால், இந்த கோளாறின் காரணமாக பெரும் ஆபத்து எதும் நேர்வதற்கு முன்னரே ஹோண்டா நிறுவனம், குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாராகிய 50,034 யூனிட் வாகனங்களை திரும்பி கொண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும், பாதிக்கப்பட்டுள்ள பாகம் மாற்றிக் கொடுக்கப்பட உள்ளது. இதற்கான அழைப்பை அந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்ப இருப்பதாக கூறப்படுகின்றது. இத்துடன், பிரத்யேகமாக சர்வீஸ் மையங்கள் மூலமாகவும் அந்தந்த வாகனங்களின் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியமே எங்களுக்கு முக்கியமானது. இதனால், நாங்களாகவே முன் வந்து செய்யப்பட்ட சோதனையில் இந்த கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், இந்த வாகனங்களை உடனடி சர்வீஸ் மையங்களுக்கு திரும்பி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட பாகத்தை வாரண்டி மூலம் இலவசமாக மாற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

ஹோண்டா நிறுவனம், அதன் பிரபல ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா 125 மாடலை எஃப்ஐ பிஎஸ்-6 தரத்தில் களமிறக்க உள்ளது. இந்த தரத்தில் இந்தியாவில் களமிறங்கும் முதல் ஸ்கூட்டராக இது இருக்கின்றது. ஆகையால், அதன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்த ஸ்கூட்டர் ஏற்படுத்தியுள்ளது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

புதிய ஆக்டிவா 125 எஃப்ஐ மாடலை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருந்தது. இதனை பாலிவுட் திரைப்பட நடிகர் அக்ஷய் குமார் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

இதைத்தொடர்ந்து, இந்த ஸ்கூட்டர் குறித்து தயாராகி வரும் விளம்பரத்திலும் அக்ஷய்குமார்தான் நடிக்க இருக்கின்றார். இதுகுறித்த தகவலை அவரே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இதுகுறித்த தகவலை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

ஆக்டிவா 125 மாடலின் எஞ்ஜினை எஃப்ஐ எனப்படும் ப்யூவல் இன்ஜெக்சன் தரத்திற்கேற்பா ஹோண்டா நிறுவனம் தயார் செய்துள்ளது. இது, எஞ்ஜினை சிறப்பான இயங்கவும், அதிக மைலேஜை வழங்குவதற்கும் உதவும்.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

ஹோண்டா நிறுவனம், இந்த ஆக்டிவா 125 எஃப்ஐ மாடல் ஸ்கூட்டரில் 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பொருத்த இருக்கின்றது. இது, 8.4 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இத்துடன் இந்த எஞ்ஜினில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது.

கோளாறு காரணமாக 50,034 டூ வீலர்களை திரும்பி அழைக்கும் ஹோண்டா... எதற்கு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

அவ்வாறு, அது களமிறங்கும்போது, ரூ. 70 ஆயிரம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. இந்த விலை தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா ஸ்டாண்டர்டு மாடல் ஸ்கூட்டரைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாகும். இந்த விலையுயர்வு புதிய அப்கிரேட் மற்றும் உற்பத்தி விலை அதிகரிப்பே காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Honda Recalls Aviator, Activa 125, Grazia, CB Shine Due To Front Brake Malfunction. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X