சோதனையிலும் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

இந்திய வாகனச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் பெரும் சோதனைக் காலத்தில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக் சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

உலக நாடுகளிலேயே மிகப் பெரிய வாகனச் சந்தையாக இந்தியா விளங்குகின்றது. வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு எதிர்பார்ப்பும், வரவேற்பும் வாகனங்களுக்கு இந்தியாவில் நிலவுகின்றது. ஆனால், இது அண்மைக் காலங்களாக மிகப் பெரிய மந்த நிலையைச் சந்தித்து வருகின்றது.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

குறிப்பாக கூற வேண்டுமானால், நடப்பு 2019ம் ஆண்டு தொடங்கியது முதல் மிகப் பெரிய பின்னடைவில் இந்திய வாகனத்துறை சிக்கி தவித்து வருகின்றது.

இதிலிருந்து மீள்வதற்காக, பல்வேறு திட்டங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், வாகன உற்பத்தியை குறைத்தல், பணியாட்களை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகின்றது.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

இந்த வீழ்ச்சியில் நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களான டாடா, மஹிந்திரா, ஹீரோ போன்ற நிறுவனங்களும் தப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

ஆனால், இதில் விதி விலக்காக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக் மாறியுள்ளது. இது கடந்த கால விற்பனையைக் காட்டிலும் 100 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

அதேசமயம், இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றான கிளாசிக் 350 கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றது. அந்தவகையில், அது கடந்த ஆண்டு ஜுலை மாதத்தைக் காட்டிலும், நடப்பாண்டின் ஜுலை மாதத்தில் 33 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

ஆனால், ஹிமாலயன் பைக்கோ கடந்த ஆண்டு ஜுலை மாதத்தைக் காட்டிலும், நடப்பாண்டில் 100 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்று சாதித்துக் காட்டியுள்ளது.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

அந்தவகையில், கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஹிமலாயன் 400 மாடல், 811 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டிருந்தது. ஆனால், நடப்பாண்டின் ஜுலை மாதத்திலோ அது, 1,619 யூனிட்டாக உயர்ந்துள்ளது.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

இது ஆச்சரியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த பைக் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலான ஹிமாலயன் யூனிட்டுகள் மலைச் சார்ந்த பகுதிகளிலேயே விற்பனைச் செய்யப்பட்டுள்ளன.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

அதேசமயம், இந்த பைக்கிற்கு கடும் போட்டியளிக்கும் வகையில் ஹீரோ நிறுவனம் மலிவு விலையில் எக்ஸ்பல்ஸ் என்ற ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏதுவான பைக்கை அறிமுகம் செய்திருந்தது. இருப்பினும் தன்னுடைய கெத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல் ஆச்சரியமளிக்கும் விதத்தில் தற்போதைய விற்பனையை அது பெற்றிருக்கின்றது.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகமான ட்வின் பைக்குகளும் (கான்டினென்டல் ஜிடி மற்றும் இன்டர்செப்டர்) கணிசமான புக்கிங்குகளை குவித்துள்ளது. இவை, ஹிமலாயனின் தற்போதைய சாதனையை வீழ்த்தும் வகையில், 2,225 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது. இதுவும் கடந்த மாத விற்பனை அளவீடாகும்.

சோதனை காலத்தில் சாதித்து காட்டிய ஹிமாலயன்... இன்ப அதிர்ச்சியில் ராயல் என்பீல்டு!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் 411 சிசி திறனை வெளிப்படுத்துகின்ற வகையிலான லாங் ஸ்ட்ரோக், 4-ஸ்ட்ரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த ப்யூவல் இன்ஜெக்ட் தரத்திலான எஞ்ஜினில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2019, 14:39 [IST]
English summary
Royal Enfield Himalayan Gets 100 Percent Sales Growth In July. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+