பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இந்தியாவில் பைக்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் இனி நீங்கள் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் மொத்தம் 2,44,241 யூனிட் ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பதும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக்தான். ஹீரோ எச்எப் டீலக்ஸ்தான் (Hero HF Deluxe) அது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,84,396 யூனிட் ஹீரோ எச்எப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூனிட்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

மூன்றாவது இடத்தை ஹோண்டா சிபி ஷைன் (Honda CB Shine) தட்டி சென்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 86,355 யூனிட் சிபி ஷைன் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. நான்காவது இடம் பஜாஜ் பல்சருக்கு (Bajaj Pulsar) கிடைத்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 84,151 பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

84,151 என்பது ஒட்டுமொத்த பல்சர் சீரீஸின் விற்பனை நிலவரம் ஆகும். இதில், பல்சர் 150 சிசி (Pulsar 150) மாடலின் எண்ணிக்கை மட்டும் 63,673. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்டிருந்த பல்சர் 150 வெர்ஷனின் எண்ணிக்கை வெறும் 35,509 மட்டுமே. இதன் மூலம் பஜாஜ் பல்சர் 150 மாடல் 79 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

MOST READ: தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

பஜாஜ் பல்சரை தொடர்ந்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கும் பைக் ஹீரோ பேஷன் (Hero Passion). 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 67,374 பேஷன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஹீரோ பேஷன் பைக்கின் விற்பனை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

கடந்த 2018 பிப்ரவரியில் விற்பனையாகியிருந்த ஹீரோ பேஷன் பைக்குகளின் எண்ணிக்கை 61,895 மட்டுமே. இதனிடையே இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) பைக்கிற்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 53,044 யூனிட் பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகம் ஆகும்.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளின் பட்டியலில் ஹீரோ கிளாமர் (Hero Glamour) 7வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 46,083 யூனிட் ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

ஹீரோ கிளாமரை போல் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கின் விற்பனையும் சரிவடைந்துள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையான பைக்குகளின் பட்டியலில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு 8வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 37,862 யூனிட் கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2018 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 22 சதவீத வீழ்ச்சியாகும்.

MOST READ: விபத்தின்போது விரிவடையாத ஏர் பேக்... 8 ஆண்டுக்கு பின் கார் நிறுவனத்திற்கு கிடைத்த தண்டனை இதுதான்...

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதே ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை சரிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி நேற்று முதல் (மார்ச் 30) தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வெளியான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இதனிடையே பட்டியலில் 9வது இடம் பிடித்திருக்கும் பைக் பஜாஜ் சிடி (Bajaj CT). கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 37,346 யூனிட் பஜாஜ் சிடி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் 23,487 பஜாஜ் சிடி பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache) பெற்றுள்ளது. மொத்தம் 35,358 யூனிட் அப்பாச்சி பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலான பைக்குகளின் விற்பனை அதிகரித்திருப்பது இந்த பட்டியலின் மூலம் தெரியவருகிறது.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் (CBS- Combi Braking System), 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டமும் (ABS- Anti-lock Braking System) கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு நாளை முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருகிறது.

MOST READ: வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் இந்த காரை டாடா எப்போது அறிமுகம் செய்யும்? தகவல்கள் கசிந்தன...

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

இதனால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் ஸ்டாக் கிளியரன்ஸில் (Stock Clearance) கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும், இதன் காரணமாக விற்பனை அதிகரித்திருக்க கூடும் எனவும் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே ஏற்கனவே குறிப்பிட்டபடி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பைக்குகளின் விற்பனை அதிகரித்த மர்மம் இதுதான்... என்னவென்று தெரிந்தால் இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

எனவே சிபிஎஸ், ஏபிஎஸ் இல்லாத டூவீலர்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் வாங்க வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles

English summary
Sales Report: List Of Top 10 Best-Selling Bikes In India In February 2019. Read in Tamil
Story first published: Sunday, March 31, 2019, 18:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more