புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.81 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக் பிஎஸ்6 அப்டேட்டால் புதிய தொழிற்நுட்பங்களையும் நிற தேர்வுகளையும் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, ஹிமாலயன் பிஎஸ்6 க்ராவெல் க்ரே, ஏரியின் நீலம் மற்றும் ராக் ரெட் உள்ளிட்ட மூன்று புதிய நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

இவற்றுடன் தற்போதைய ஹிமாலயன் மாடலின் நிற தேர்வுகளான க்ரானைட் ப்ளாக், ஸ்லீட் க்ரே மற்றும் பனியின் வெள்ளை நிறம் போன்ற நிறங்களிலும் இந்த பைக் சந்தையில் கிடைக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு நிறத்தேர்விலான ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கும் ஒவ்வொரு விதமான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. அவற்றை கீழேயுள்ள அட்டவனையில் காணலாம்.

BS6 Himalayan Price
Granite Black Rs 1,86,811
Sleet Grey Rs 1,89,565
Snow White Rs 1,86,811
Gravel Grey Rs 1,89,565
Lake Blue Rs 1,91,401
Rock Red Rs 1,91,401
புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

புதிய நிற தேர்வுகள் மட்டுமின்றி, தேவைக்கு ஏற்ப ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பை பயன்படுத்தும் விதமாக ஏபிஎஸ் ஆன்/ஆஃப் செய்யக்கூடிய வசதியை கன்சோலில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் இந்த ஸ்விட்ச் கிடைமட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் பிஎஸ்4 மாடலில் வழங்கி வந்த 411சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினை தான் பிஎஸ்6 தரத்தில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பொருத்தியுள்ளது. ஆனால் இந்த புதிய பிஎஸ்6 என்ஜின் பைக்கிற்கு வழங்கக்கூடிய ஆற்றல் குறித்து எந்த தகவலையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

பிஎஸ்4 தரத்தில் இந்த என்ஜின் 24 பிஎச்பி பவரையும் 32 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட இதே அளவிலான ஆற்றலை தான் பிஎஸ்6 என்ஜினும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

கூடுதல் நிறத்தேர்வு, பிஎஸ்6 அப்டேட் மற்றும் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களை தவிர இந்த பிஎஸ்6 பைக்கில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. முன்புற மற்றும் பின்புற சக்கரங்களின் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே 21 மற்றும் 17 இன்ச்களில் தான் தொடர்கின்றன.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

இந்த பைக்கின் சமீபத்திய சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் ஸ்போக் சக்கரங்கள், எம்ஆர்எஃப் ட்யூல்-பர்பஸ் டயர்கள் மற்றும் அப்டேட்டான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்திருந்தது.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

இவற்றுடன் இரு சக்கரங்களிலும் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் மற்றும் 220 மிமீ-ல் அதிகளவிலான க்ரவுண்ட் க்ளியரென்ஸ் உள்ளிட்டவற்றை ஹிமாலயன் பிஎஸ்6 பைக் பெற்றுள்ளது. இந்த பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே அனைத்து ராயல் எண்ட்பீல்டு டீலர்ஷிப்களிலும் ஆரம்பமாகிவிட்டன. இதனால் ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் டெலிவிரிகளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் பைக்கை மிகவும் ரகசியமாக பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த பைக்கின் அறிமுகம் 2020 ஏப்ரல் மாதத்தில் தான் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் முதல் அட்வென்ஜெர் வகை பைக்காக விளங்கும் ஹிமாலயன் பைக்கிற்கு போட்டியாக சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ், கவாஸாகி வெர்ஸஸ் எக்ஸ்-300 மற்றும் கேடிஎம் 390 அட்வென்ஜெர் போன்ற பைக்குகள் உள்ளன.

Source:Zigwheels

More from DriveSpark

Article Published On: Monday, January 20, 2020, 16:21 [IST]
English summary
Royal Enfield Himalayan BS6 Launched In India: Prices Start At Rs 1.81 Lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+