சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே வித்தியாசம்!! பழைய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனை வாங்குறதா? (அ) புதுச வாங்குறதா?

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹிமாலயன் 450 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், பழைய ஹிமாலயன் பைக்கும் தொடர்ந்து விற்பனையில் உள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான, விலை குறைவான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்று ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஆகும். 2016இல் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹிமாலயன் பைக் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு முதல் ஜென்ரேஷன் அப்டேட்டை பெற்றுள்ளது. அத்துடன், இந்த அப்டேட்டின் மூலம், ஹிமாலயன் பைக் முன்பை விட ஆற்றல்மிக்கதாக மாறியுள்ளது.

himalayan 450 vs himalayan 411

ஏனெனில், புதிய ஹிமாலயன் 450 பைக்கில் புத்தம் புதிய 450சிசி, லிக்யுடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக 40 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. மறுப்பக்கம், வழக்கமான ஹிமாலயன் 411 பைக்கில் 411சிசி, ஏர்-கூல்டு SOHC, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் பைக்கிற்கு வழங்கும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் 24.3 எச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறன் ஆகும். இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு புதிய ஹிமாலயன் 450 பைக்கில் 200மிமீ டிராவல் உடன் முன் பக்கத்தில் 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

himalayan 450 vs himalayan 411

பழைய ஹிமாலயன் 411 பைக்கில் முன் பக்கத்தில் 200மிமீ டிராவல் உடன் 41மிமீ டெலெஸ்கோப் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் 180மிமீ டிராவல் உடன் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. பிரேக் பணியை கவனித்துக் கொள்ள புதிய ஹிமாலயன் 450 பைக்கில் முன் சக்கரத்தில் ஏபிஎஸ் உடன் 320மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் உடன் 270மிமீ டிஸ்க்கும் வழங்கப்படுகின்றன.

பழைய ஹிமாலயன் 411 பைக்கில் முன் சக்கரத்தில் ஏபிஎஸ் உடன் 300மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ஸ்விட்ச் செய்யக்கூடிய 240மிமீ டிஸ்க்கும் பொருத்தப்படுகின்றன. பழைய ஹிமாலயன் 411 மற்றும் புதிய ஹிமாலயன் 450 என இரு பைக்குகளிலும் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன. அதேபோல், இரு பைக்கிலும் முன் சக்கரத்தில் ஒரே அளவுள்ள டயர் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், பின் டயரின் அளவு வித்தியாசப்படுகிறது.

himalayan 450 vs himalayan 411

ஆற்றல்மிக்கதாக இருப்பினும், பழைய ஹிமாலயனை விட புதிய ஹிமாலயன் 3 கிலோ எடை குறைவானது ஆகும். அதேபோல், தரையில் இருந்து ரைடர் அமரும் இருக்கையின் உயரம் 4.5 செமீ வரையில் புதிய ஹிமாலயனில் அதிகமாக உள்ளது. புதிய ஹிமாலயன் 450 பைக்கில் ரைடர் அமரும் இருக்கையை 805மிமீ - 845மிமீ வரையில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம். பழைய ஹிமாலயனின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 14.5 - 15.5 லிட்டர்கள் ஆகும்.

ஆனால், புதிய ஹிமாலயனில் 17 லிட்டர்கள் கொள்ளவில் பெட்ரோல் டேங்கை ராயல் என்ஃபீல்டு வழங்கியுள்ளது. புதிய ஹிமாலயன் 450 பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.69 லட்சத்தில் இருந்து ரூ.2.84 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலைகள் 2024இல் இருந்து உயர்த்தப்பட உள்ளன. மறுப்பக்கம், பழைய ஹிமாலயன் 411 பைக்கின் விலை ரூ.2.16 லட்சத்தில் இருந்து ரூ.2.28 லட்சம் வரையில் உள்ளது.

himalayan 450 vs himalayan 411

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பைக்கின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடல் கொண்டுவரப்படுகிறது எனில், நிச்சயமாக அது மேம்படுத்தப்பட்டதாகவே இருக்கும். அவ்வாறு, புதிய ஹிமாலயன் 450 பைக்கையும் தோற்றத்திலும் சரி, செயல்படுதிறனிலும் சரி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நன்கு மேம்படுத்தி உள்ளது. இருப்பினும், பழைய ஹிமாலயன், புதிய ஹிமாலயன் இவை இரண்டில் எதை வாங்குவது என்கிற குழப்பம் வரக்கூடாது என்பதற்காக பழைய ஹிமாலயன் பைக்கின் விற்பனையை ராயல் என்பீல்டு நிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 11:25 [IST]
English summary
Royal enfield himalayan 450 vs himalayan 411 comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X