கோவாவுக்கு போயிருந்தா இந்த பைக்கை நேருல பாத்தது மட்டுமில்லாம கொத்திட்டே வந்திருக்கலாம்.. ஷாட்கன் 650 வெளியீடு!

கோவாவில் மோட்டோவெர்ஸ் 2023 (Motoverse 2023) மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கண்காட்சியைப் பயன்படுத்தி உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக் மடாலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அறிமுகத்தைத் தொடர்ந்து அதன் விலைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. ரூ.2.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பேஸ், பாஸ் மற்றும் சம்மிட் என ஒட்டுமொத்தமாக 3 விதமான வேரியண்ட்களில் புதிய ஹிமாலயன் 450 பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

Royal enfield shotgun 650

மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பைக்கை மட்டுமில்லைங்க, மேலும் சர்ப்ரைஸ் அறிமுகத்தையும் மோட்டோவெர்ஸ் 2023இல் செய்திருக்கின்றது. அது ஷாட்கன் 650 எனும் கஸ்டம் பைக் மாடலையே வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் பாபர் வகை மோட்டார்சைக்கில் மாடல் ஆகும். இப்போது ஒட்டுமொத்தமாகவே 25 யூனிட்டுகள் மட்டுமே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த அனைத்தும் மோட்டோவெர்ஸில் கலந்துக் கொண்ட நபர்களுக்கு லக்கி டிராவ் வாயிலாக விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. அதாவது, கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் 2023இல் பங்குபெற்ற பார்வையாளர்களால் இந்த பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். அதேவேளையில், குலுக்கல் முறையிலேயே அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றார்.

Royal enfield shotgun 650 headlight

இந்த 25 யூனிட்டைத் தொடர்ந்து இன்னும் ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்படுமா என நீங்கள் கேட்பதை எங்களால் உணர முடிகின்றது. ஆனால், இப்போதைக்கு ராயல் என்ஃபீல்டு இந்த பைக்கை உற்பத்தி செய்யப்போவதில்லை என கூறப்பட்டு இருக்கின்றது. அடுத்த ஆண்டு அல்லது அதற்கு பின்னரே இந்த பைக் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றது.

ஆகையால், முன் கூட்டியே இந்த பைக்கைப் பெற இருக்கும் அந்த 25 பேரும் அதிர்ஷ்டசாலிகளாக பார்க்கப்படுகின்றனர். இந்த பைக்கில் பூசப்பட்டு இருக்கும் பெயிண்ட் முழுக்க முழுக்க கைகளால் தீட்டப்பட்டவை ஆகும். இப்போது தயார் செய்யப்பட்டு இருக்கும் ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிசனின் ஒரு யூனிட்டே ரூ. 4.25 லட்சத்திற்கு விற்கப்பட இருக்கின்றது.

Royal enfield shotgun 650 fuel tank

Popular Articles: நீங்க கொடுத்த புக்கிங்கை நீங்களே கேன்சல் பண்ணுங்க.. மாச கணக்கா காத்திருந்தவங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்!

இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இவற்றின் டெலிவரி பணிகள் வரும் 2024 ஜனவரியில் தொடங்கப்பட இருக்கின்றன. ராயல் என்ஃபீல்டு இந்த பைக்கை அதன் ட்வின் பைக்குகளை தயாரிக்கப் பயன்படுத்தும் அந்த பிளாட்பாரத்தில் வைத்தே இந்த பைக்கை தயார் செய்திருக்கின்றது. ஆகையால், 650 ட்வின் பைக்குகளில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை இதிலும் நாம் காணலாம்.

அதேவேளையில், இந்த பைக்கை சிங்கிள் சீட் அல்லது இருவர் பயணிக்கும் வாகனம் எப்படி வண்டுமானாலும் டிரான்ஸ்ஃபார்ம் செய்துக் கொள்ளலாம் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்து இருக்கின்றது. மேலும், மிகக் குறைவான யூனிட்டுகள் இப்போதைக்கு தயார் செய்யப்பட்டாலும், விற்பனைக்கு பிந்தைய சர்வீஸில் எந்த பிரச்னையும் இருக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Royal enfield shotgun 650 engine

ராயல் என்ஃபீல்டின் புகழ்பெற்ற கான்செப்ட் மாடலான எஸ்ஜி650 கான்செப்ட்-ஐ தழுவியே இந்த பைக் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பத்து ஸ்போக்குகள் கொண்ட வீல் ரிம்மே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

சஸ்பென்ஷனைப் பொருத்த வரை முன் பக்கத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சஸ்பென்ஷன் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. அலுமினியத்தாலான கூறு இதன் மேல் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், கைகளால் தைக்கப்பட்ட லெதர் இருக்கை, எல்இடி மின் விளக்குகள், கவர்ச்சியான ரியர் வியூ மிர்ரர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Royal enfield shotgun 650 seat

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக சிறந்த படைப்பாக ஷாட்கன் 650 காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த பைக்கை இப்போது வெறும் 25 பேர் மட்டுமே ஓட்ட இருக்கின்றனர். இந்த தகவல் மற்ற இருசக்கர வாகன காதலர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இதன் விலை மிக மிக உயரியதாக இருப்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 24, 2023, 23:22 [IST]
English summary
Royal enfield unveiled shotgun 650 motorcycle at motoverse 2023 in goa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X