இறுதியா ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்ல ட்யூப்லெஸ் ஸ்போக் வீலை அறிமுகம் பண்ணிட்டாங்க! ரொம்ப நாள் எதிர்பார்ப்பு!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றாக ஹிமாலயன் 450 (Himalayan 450) உள்ளது. இதற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அட்வென்சர் ரைடை விரும்புவர்களின் பிரியமான பைக் மாடலாக இது காட்சியளிக்கின்றது. ஏனெனில், அட்வென்சர் ரைடுகளுக்கு ஏற்ற ஓர் டூ-வீலராகவே ஹிமாலயன் 450 உள்ளது. இத்தகைய பைக்கிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இறுதியாக ட்யூப்லெஸ் (Tubeless) டயர் கொண்ட ஸ்போக் வீல் (Spoke Wheels)-ஐ அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அலாய் வீல்களில் ட்யூப் லெஸ் டயரை வழங்குவது சாத்தியமான ஒன்று. ஆனால், ஸ்போக் வீல்களில் அது சாத்தியமற்றதாக இருந்து வந்தது. இதனையே தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் உடைத்தெறிந்திருக்கின்றது. ஸ்போக் வீல்களில், ஸ்போக்குகள் பொருத்தப்படும் இடங்களில் சிறிய சிறிய துளைகள் இருக்கும் என்கிற காரணத்தினால் ட்யூப்கள் இல்லாமல் அதில் காற்றை தங்க செய்வது இயலாத ஒன்றாக இருந்தது.

Himalayan gets tubeless spoke wheels

ஆனால், ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்போக்குகள் பொருத்தியிருக்கின்ற வேளையிலும் அதில் காற்றைத் தங்க செய்கின்ற வகையில் தன்னுடைய ஸ்போக் வீலில் மாற்றத்தை செய்திருக்கின்றது. இந்த வீலையே தற்போது அது ஹிமாலயன் 450 பைக்கில் அறிமுகமும் செய்திருக்கின்றது. இந்த வீலை ஆக்ஸசெரீஸ் வாயிலாகவே அது தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஒரு செட்டின் விலை ரூ. 11 ஆயிரம் என கூறப்படுகின்றது. அதேவேளையில், இதை ஏற்கனவே ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களாலும் வாங்கிக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அவர்களுக்கு ரூ. 12,424-க்கு அது விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.

ஹிமாலயன்450 பைக்கானது காசா பிரவுன், ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், ஸ்லேட் ஹிமாலயன் பாப்பி ப்ளூ, காமெட் ஒயிட் மற்றும் ஹேண்லே பிளாக் ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த அனைத்து நிற தேர்வுகளிலும் இந்த வீல் ஆப்ஷனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், அக்டோபர் 3 ஆம் தேதியில் இருந்தே இது விற்பனைக்குக் கிடைக்கும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனையகங்கள் வாயிலாக இதை வாங்கிக் கொள்ள முடியும். ட்யூப் உள்ள டயர்களைக் காட்டிலும், ட்யூப் இல்லாத டயர்கள் அதிக பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. ட்யூப் உள்ள டயர்கள் சிறிதாக பஞ்சராகினாலும் உடனடியாக காற்று வெளியேறி, பைக்கை இயக்கவே முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.

ஆனால், ட்யூப் லெஸ் டயர்கள் அப்படியல்ல. பஞ்சரே ஆகினாலும் குறிப்பிட்ட கிமீ தூரம் வரை செல்ல அனுமதிக்கும். அதேவேளையில், தொடர்ச்சியாக காற்றை நிரப்பியும் பஞ்சரை சரி செய்யாமலேயே சில நாட்களை ஓட்டிவிட முடியும். இதுமட்டுமில்லைங்க, பஞ்சரை சரி செய்யவும் வெகு நேரம் தேவைப்படாது.

பஞ்சரான இடம் தெரிந்துவிட்டால் ஒரு சில நிமிடங்களிலேயே பஞ்சரை சரி செய்துவிட முடியும். ஏன், மெக்கானிக்கின் உதவியே இல்லாமல், பஞ்சர் கிட்டை மட்டுமே வைத்து நம்மாலேயே அதை சரி செய்துவிட முடியும். ஆனால், ட்யூப் உள்ள டயர் பஞ்சரானால் வேலை மிகப் பெரியதாக இருக்கும்.

வீலை கழட்ட வேண்டும், பின்னர் அதில் இருந்து டயரையும், ட்யூபையும் பிரித்தெடுத்து வேண்டும், அதற்கு பின்னர் ட்யூப்பில் பஞ்சர் எங்கு ஏற்பட்டு இருக்கின்றது என் பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, பஞ்சரை ஒட்டிவிட்டு மீண்டும் வீலை பைக்குடன் இணைப்பதற்குள் அரை மணி நேரம் வரை ஆகிவிடும்.

வேலையும் கெட்டுப் போகும். இந்த தலைவலி காரணமாகவே ட்யூப் லெஸ் டயருக்கு அநேகர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், இந்த அம்சத்தை நீண்ட காலமாக ஸ்போக் வீலில் தராமல் ராயல் என்பீல்டு இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்த நிலையிலேயே ஹிமாலயன் 450 பைக்கில் ஸ்போக் வீலில் ட்யூப்லெஸ் டயரை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்திருக்கின்றது.

இது அப்பைக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 இந்தியாவில் ரூ. 2.85 லட்சம் தொடங்கி ரூ. 2.98 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். பண்டிகைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை கூடுதல் சிறப்புமிக்கதாக மாற்றியிருப்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் ட்யூப்லெஸ் டயருடன் கூடிய அலாய் வீல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 19:20 [IST]
English summary
Finally royal enfield himalayan 450 bike got tubeless spoke wheel as a accessories
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+