நம்ம ஆளுங்க கிட்ட அவ்வளவு காசு இருக்கா!! ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் சுமார் 76,187 பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை காட்டிலும், ராயல் என்ஃபீல்டின் இந்த விற்பனை எண்ணிக்கை எந்த அளவிற்கு அதிகம் என்பதையும், இந்திய மார்க்கெட்டில் தற்சமயம் விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பற்றியும் இனி பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனங்களுள் ராயல் என்ஃபீல்டும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய டாப்-6 நிறுவனங்களுள் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு உள்ளது. இத்தனைக்கும், ஸ்கூட்டர்கள் எதையும் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்வதில்லை, பைக்குகள் மட்டுமே.

royal enfield bike sales report

குறிப்பாக, கடந்த சில வருடங்களில் ராயல் என்ஃபீல்டு அடைந்திருக்கும் வளர்ச்சி மிக பெரியது. இதற்கு முக்கிய காரணம், மார்க்கெட்டில் தனது பைக்குகளை எப்போதும் புத்துணர்ச்சியானதாக வைத்திருக்க வேண்டும் எனும் ராயல் என்ஃபீல்டின் யுக்தி ஆகும். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை களமிறக்குவது என்கிற கொள்கையுடன் சமீப ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, 2019 - 2020ஆம் காலக்கட்டத்தில் மாதத்திற்கு 50 ஆயிரம் பைக்குகளை விற்பனை செய்துவந்த ராயல் என்ஃபீல்டின் மாத விற்பனை எண்ணிக்கை தற்சமயம் 75 ஆயிரத்தை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. புதிய 2024ஆம் ஆண்டின் முதல் மாதமான கடந்த ஜனவரியில் சுமார் 76,187 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது.

royal enfield bike sales report

இதில் 70,556 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். மீதி, 5,631 பைக்குகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு கடந்த மாதத்தில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மொத்தமாக 74,746 பைக்குகளை மட்டுமே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.

2023 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு விற்பனை வழக்கம்போல் அதிகரித்து உள்ளது என்றாலும், வெளிநாட்டு ஏற்றுமதி 1,413 பைக்குகள் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜனவரியில் 7,044 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருந்தது. 350சிசி, 411சிசி, 450சிசி மற்றும் 650சிசி என்ஜின்களுடன் தற்சமயம் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

royal enfield bike sales report

இதில் 450சிசி-இல் சமீபத்தில்தான் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. 350சிசி பைக்குகள் தான் ராயல் என்ஃபீல்டின் நம்பிக்கைக்கு உரியவைகளாக உள்ளன. இதனால்தான், கிளாசிக் 350, ஹண்டர் 350, புல்லட் 350 என நிறைய 350சிசி பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்கிறது. குறிப்பாக, உள்நாட்டில் ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

இருப்பினும், கடந்த ஜனவரியில் ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகளின் விற்பனை ஆனது 2023 ஜனவரியை காட்டிலும் 1% குறைந்துள்ளது. அதாவது, 2023 ஜனவரியில் 68,183 ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜனவரியில் சற்று குறைவாக 67,620 350சிசி பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது. இருப்பினும், மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

royal enfield bike sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டின் மொத்த 76,187 பைக்குகள் விற்பனையில் கிட்டத்தட்ட 67,620 பைக்குகள் 350சிசி பைக்குகள் என்றால், ராயல் என்ஃபீல்டின் வணிகத்தில் அதன் 350சிசி பைக்குகள் எந்த அளவிற்கு முக்கியத்துவத்தை கொண்டுள்ளன என்பதை அறியலாம். குறிப்பாக, ஹண்டர் 350 பைக்கின் அறிமுகத்திற்கு பின் ராயல் என்ஃபீல்டு புதியதொரு உலகத்திற்குள் நுழைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2024, 0:28 [IST]
English summary
Royal enfield bike sales 2024 january check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X