கம்பெனி சிஇஓ-வே இப்படி தர லோக்கலா இறங்குவாருனு எதிர்பார்க்கல! பைக் உடன் கூட இருப்பவங்க யாருனு தெரியுதா?

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹிமாலயன் (Himalayan) பைக்கின் எலக்ட்ரிக் வெர்சன் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, அளவில் பெரியதான மற்றும் பவர்ஃபுல்லான 750சிசி என்ஜின் உடன் ஹிமாலயன் 750 பைக்கும் மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த இரு புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளையும் அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ பி கோவிந்தராஜன் ஓட்டியுள்ளார். அதுவும், இந்த பைக்குகளை அவர் எங்கு ஓட்டினார் என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம் ஆகும்.

நம்மில் எல்லாருக்கும் லடாக், காஷ்மீர் போன்ற தொலைத்தூர பயணங்களுக்கு பைக்கில் ஒரு லாங் ட்ரிப் சென்றுவர வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், அதிக விலையில் பவர்ஃபுல்லான பைக்குகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே இவ்வாறான தொலைத்தூர பயணங்களை மேற்கொள்கின்றனர். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ தற்போது எங்கு சென்றுள்ளார் என்பது இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

royal enfield ceo govindarajan riding

யார்கிட்டயும் இல்லாத புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் லடாக் வரையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி குழுவினர் சென்றுள்ளனர். இதனை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் படங்களுடன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ பி கோவிந்தராஜன் அவர்களும் இடம்பெற்றுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு சிஇஓ பி கோவிந்தராஜன் ஹிமாலயன் 750 பைக்கை ஓட்டும் காட்சிகளும், பைக்குடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த வடிவமைப்பு பிரிவு அதிகாரி மார்க் வெல்ஸ் அவர்களும் உடன் இருப்பதை காணலாம்.

royal enfield ceo govindarajan riding

லடாக்கில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் இவி எலக்ட்ரிக் பைக் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் சாலையில் காட்சி தருவதாக சமீபத்தில் படங்களுடன் செய்திகள் வெளியாகின. அதற்கு காரணம் என்ன என்பது இப்போது புரிந்துவிட்டது. அதாவது, ராயல் என்ஃபீல்டு குழுவினர் இன்னும் மார்க்கெட்டிற்கு வராத இந்த புதிய பைக்குகளில் லடாக்கிற்கு சென்ற போது அங்கிருந்த மக்களால் அந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஹிமாலயன் பைக்குகள் லடாக்கில் வைத்து சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன என முன்னதாக நினைத்தோம். ஆனால், இப்போதுதான் தெரிகிறது... இது பைக்கின் சோதனை ஓட்டம் மட்டுமல்ல, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளின் ஜாலியான லடாக் பைக் பயணமும் கூட.

royal enfield ceo govindarajan riding

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பைக்குகளை 'ஃபிளையிங் ஃபிளே' (Flying Flea) என்கிற பிராண்டின் கீழ் விற்பனை செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே அறிவித்து இருந்தது. ஆனால், புதிய ஹிமாலயன் இவி இந்த புதிய பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படாது என கூறப்படுகிறது. ஹிமாலயன் 750 பைக்கை காட்டிலும் ஹிமாலயன் இவி எலக்ட்ரிக் பைக்கிற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட HIM.E கான்செப்ட்டின் அடிப்படையில் ஹிமாலயன் இவி எலக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டு இருப்பது பார்த்தாலே தெரிகிறது. ஹிமாலயன் 750 பைக்கை பொறுத்தவரையில், இந்த பைக்கில் முற்றிலும் புதியதான 750சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. 650சிசி ஏர்/ஆயில்-கூல்டு என்ஜினை ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு உற்பத்தி செய்துவரும் போதிலும், ஹிமாலயன் பைக்கிற்காக 750சிசி என்ஜினை ராயல் என்ஃபீல்டு வடிவமைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என்கிற குறிக்கோள் உடன் ராயல் என்ஃபீல்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இந்த இரு புதிய ஹிமாலயன் பைக்குகள் தயாராகி வருகின்றன. இதில், ஹிமாலயன் இவி தான் முதல் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 12, 2025, 12:19 [IST]
English summary
Royal enfield ceo govindarajan rides himalayan ev electric bike in ladakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X