சென்னை ரோட்டில் இந்த பைக்கை பார்த்ததும் எல்லாருக்கும் செம்ம ஷாக்! ஆலையை விட்டு எதுக்கு வெளியே வந்துச்சு!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. 3 மாதங்களுக்கு ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கவனம் சமீப காலமாக பெரிய அளவிலான என்ஜினை கொண்ட பவர்ஃபுல்லான பைக்குகள் மீது உள்ளது.
அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடுத்ததாக ஹிமாலயன் 750 (Himalayan 750) பைக்கை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மார்க்கெட்டில் ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், அதனை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பவர்ஃபுல்லான ஹிமாலயன் பைக்கை மார்கெட்டில் களமிறக்க ராயல் என்ஃபீல்டு தயாராகி வருகிறது.

வருகிற நவம்பர் மாதத்தில் இத்தாலி நாட்டில் நடைபெறவுள்ள EICMA 2025 கண்காட்சியின் மூலம் உலகளவில் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹிமாலயன் 750 பைக் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் 'பவர்டிரிஃப்ட்' (Powerdrift) என்கிற யூடியூப் (YouTube) சேனல் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளன.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 பைக் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக ஹிமாலயன் 750 பைக் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். வழக்கம்போல், ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை அமைந்துள்ள சென்னையில் தான் தற்போதைய சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஹிமாலயன் 750 பைக்கின் இதற்கு முந்தைய சோதனை ஓட்டங்களில் பைக்கில் ஸ்போக்டு சக்கரங்களை பார்க்க முடிந்தது. ஆனால், இந்த சோதனை ஓட்டத்தில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முன்பக்கத்தில் 19-இன்ச் அலாய் சக்கரத்திலும், பின்பக்கத்தில் 17-இன்ச் அலாய் சக்கரத்திலும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்கின் சேசிஸ் (Chassis) உடன் அட்ஜெஸ் செய்யக்கூடிய துணை ஃபிரேம் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் அட்ஜெஸ் செய்யக்கூடிய மோனோஷாக்கும் உள்ளன. இந்த பைக்கின் ஹேண்டில்பாரில் வட்ட வடிவில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திரை ஆனது தற்போதைய ஹிமாலயன் 450 பைக்கில் இருப்பது போல் உள்ளது. ஹிமாலயன் 750 பைக்கில் இந்த திரை ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடியதாகவும், கூகுள் வரைப்படத்தை ஏற்கக்கூடியதாகவும் உள்ளது. தற்போது சென்னையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த ஹிமாலயன் 750 பைக்கில் முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டு உள்ளது.

இவற்றுடன் டபுள்-சேனல் ஏபிஎஸ் (ABS) வசதியும் இந்த பைக்கில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைக்கிற்கு முன்பக்கத்தில் பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன், சம்ப் கார்ட் மற்றும் நிமிர்ந்து அமர்ந்து பைக்கை ஓட்டும்படியான ரைடிங் பொசிஷன் உள்ளிட்டவை ஹிமாலயன் 750 பைக்கின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.
ஹிமாலயன் 750 பைக்கில் முற்றிலும் புதிய 750சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. தற்போதைய 650சிசி என்ஜினை போல் ஆயில்/காற்று மூலமாக குளிர்விக்க கூடியதாக புதிய 750சிசி என்ஜின் இருக்கும். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து இதுவரையில் எந்தவொரு 750சிசி பைக்கும் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படவில்லை. இதனாலேயே ஹிமாலயன் 750 பைக் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த பைக்கை இந்திய மார்க்கெட்டை மட்டுமின்றி, வெளிநாட்டு மார்க்கெட்களையும் டார்க்கெட் செய்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கொண்டுவருகிறது.


Click it and Unblock the Notifications









