ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இப்படி மாறும்னு சொப்னத்திலும் கண்டது இல்ல... கம்பெனி மொத்தமா மாறி போச்சு!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் (Himalayan) பைக் அடுத்ததாக எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவரப்படுகிறது. புதிய ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்கை (Electric Bike) கடந்த சில மாதங்களாக அதிகளவில் சோதனை ஓட்டங்களின் போது நாம் பார்த்திருந்த நிலையில், தற்போது ஹிமாலயன் எலக்ட்ரிக் அட்வென்ச்சர் பைக் தொடர்பான புதிய படங்கள் வெளியாகி உள்ளன.

'எக்ஸ்ப்ளோர் எர்த்.சிம்லா' (Explorearth.shimla) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படங்களில் புதிய ஹிமாலயன் எலக்ட்ரிக் அட்வென்ச்சர் பைக்கின் தோற்றம் எந்தவொரு மறைப்பும் இன்றி நம் கண்களுக்கு காட்சியளிக்கிறது. ஆனால், இதற்கு முன்னர் லடாக்கிலும், மற்ற இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டங்களில் பைக் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளித்தது.

Royal Enfield HimalayanElectric Bike Spotted

சிம்லாவை சேர்ந்தவர்களால் இன்ஸ்டாகிராமில் இந்த படங்கள் வெளியிடப்பட்டு உள்ளதால், இந்த படங்கள் சிம்லாவில் எடுக்கப்பட்டவைகளாகவே இருக்கும். மிக முக்கியமாக, இந்த படங்களில் ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்குகள் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் காட்சியளிக்கின்றன. ஏனெனில், புதிய ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்குகளை வைத்து சிம்லாவில் சிறிய அட்வென்ச்சர் பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் இந்த பயணங்கள் மூலமாக, புதிய ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்கை சிம்லா போன்ற ஏற்ற, இறக்கமான பகுதிகளை அதிகம் கொண்ட மலைப்பிரதேச பகுதிகளில் சோதித்து பார்க்கின்றனர். இருப்பினும், இந்த சோதனை ஓட்டங்களில் பைக்கை முழுவதுமாக மறைத்து பயன்படுத்தாமல், பைக்கின் தோற்றத்தை எல்லாருக்கும் வெளிக்காட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Royal Enfield Himalayan Electric Bike Spotted

இதனால், இந்த அட்வென்ச்சர் பயணங்களின் போது எடுக்கப்படும் படங்களும், வீடியோக்களும் புதிய ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்கின் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால், சிம்லா போன்ற அழகான ஊரில் ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்குகளை வைத்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் போட்டோஷூட் கூட நடத்தலாம்.

சிம்லாவில் தங்கும் விடுதி ஒன்றின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது எடுக்கப்பட்ட இந்த படங்களில், இன்னும் அறிமுகம் செய்யப்படாத புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்கின் தோற்றத்தை தெளிவாக காண முடிகிறது. பைக்கிற்கு எவ்வாறான இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன என்பதை கூட நெருக்கமாக காண முடிகிறது.

Royal Enfield Himalayan Electric Bike Spotted

இந்த எலக்ட்ரிக் பைக்கில் முன்பக்கத்தில் ஹோலின்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முழுவதும் அட்ஜெஸ் செய்யக்கூடிய ஃபோர்க்குகள் கோல்டன் நிறத்தில் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம். மேலும், இந்த பைக்கில் நிசின் காலிபர்களும் பொருத்தப்பட்டுள்ள நிலையில், வயர்-ஸ்போக் சக்கரங்கள் மற்றும் க்னோபி டயர்களையும் காண முடிகிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த படங்களின் மூலம், முழுவதும் எல்இடி தரத்திலான விளக்குகள் புதிய ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட உள்ளதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும், ஹேண்டில்பாருக்கு மத்தியில் டிஜிட்டல் திரையையும் காண முடிகிறது. இந்த எலக்ட்ரிக் பைக்கை அலுமினியத்தால் ஆன ஃபிரேம் மற்றும் சப்-ஃபிரேமில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்கில் எங்களுக்கு தெரிந்தவரையில், 14kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம். ஒருவேளை இது வழங்கப்பட்டால், இந்தியாவிலேயே பைக்கில் பெரிய அளவிலான பேட்டரியாக இது இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்லா, லடாக் எல்லாமே அருகருகே இருக்கும் இடங்கள் ஆகும். குறிப்பாக, இந்த இடங்கள் யாவும் அதிக பனி பொழிவை கொண்ட பகுதிகள் என்பதால், புதிய ஹிமாலயன் எலக்ட்ரிக் பைக்கை அதிகமாக பனி பிரதேச பகுதிகளில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்ய ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரும்புவதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 11:36 [IST]
English summary
Royal enfield himalayan electric bike spotted in shimla check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X