அடுத்து ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் ஆம்பியர்... டிவிஎஸ், ஏத்தரை ஒரு கை பார்க்க திட்டம்!!

டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிட்ஸா போன்ற குடும்ப பயன்பாட்டு அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனையடுத்து, ஏத்தர் நிறுவனம் கோனார்க் என்ற மாடலையும், சிம்பிள் நிறுவனம் வேவ் என்ற ஸ்கூட்டர்களையும் அடுத்தடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தன. இந்த நிலையில், நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றான க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது ஆம்பியர் பிராண்டில் புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இதுவரை ஸ்டைலான தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு வந்த க்ரீவ்ஸ் மொபிலிட்டி நிறுவனம் இந்த முறை குடும்ப பயன்பாட்டு அம்சங்களை கொண்ட பாரம்பரிய வடிவமைப்பு தத்துவத்தில் புதிய மாடலையும் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக க்ரீவ்ஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆட்டோகார் புரோஃபஷனல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Ampere Nexus

(Representational Purpose Image)

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ஐஸ்பிரேக்கர்' (Icebreaker) என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களை மின்சார ஸ்கூட்டருக்கு மாற்றுவதற்கான திட்டமாக இந்த புதிய ஸ்கூட்டரை கொண்டு வர இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். குறைந்த எரிபொருள் செலவுடன், நீடித்த உழைப்பு மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும், தனி நபர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி வணிக ரீதியான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்க ஆம்பியர் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக கடைசி மைல் டெலிவரி, உணவு டெலிவிரி உள்ளிட்ட பணியாளர்கள் பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாக க்ரீவ்ஸ் மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆம்பியர் மின்சார இருசக்கர வாகன பதிவுகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 114 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள அந்நிறுவனம், புதிய மாடல்களை வரிசை கட்டி அறிமுகம் செய்வதற்கான திட்டங்களையும் கையில் எடுத்துள்ளது.

விற்பனையை மேலும் அதிகரிக்க தற்போதுள்ள 600 டீலர்களின் எண்ணிக்கையை 1,000 என்ற அளவில் உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளிலும் தனது வாகனங்களை கொண்டு செல்லும் நோக்கில் CSC Grameen eStore நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு, பீகார், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Also Read

ஆம்பியர் பிராண்டில் ஏற்கனவே நெக்சஸ், மேக்னஸ் உள்ளிட்ட பெயர்களில் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற மாடல்களை க்ரீவ்ஸ் மொபிலிட்டி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், அதிக வாடிக்கையாளர்களை சென்ற அடைவதற்கு வழக்கமான டிசைன் மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் கொண்ட புதிய மாடல்கள் அவசியம் என்று அந்த நிறுவனம் கருதுகிறது. இதனால், புதிய மாடல்கள் மூலமாக கிராமப்புற சந்தைகளிலும் விற்பனையை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Source: Autocar Professional

Article Published On: Saturday, November 28, 2026, 12:26 [IST]
English summary
Ampere icebreaker electric scooter launch in three months
மேலும்... #ampere electric
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out