ராயல் என்ஃபீல்டு பைக்கை விட நேற்று அறிமுகமான புதிய பிஎம்டபிள்யூ பைக் எப்படி இருக்கு? எடை ரொம்ப கம்மி...

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து புதியதாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஹிமாலயன் 450 (Himalayan 450) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் எஸ் (KTM 390 Adventure S) உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில், புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் எந்த அளவிற்கு சிறந்தது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பரிமாண அளவுகள் & எடை: 178 கிலோ எடையில் பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ஆனது இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் மற்ற இரு அட்வென்ச்சர் பைக்குகளை காட்டிலும் எடை குறைவானதாக உள்ளது. அதேபோல், இந்த பைக்கில் ரைடர் இருக்கையும் தரையில் இருந்து நன்கு உயரமாக 845மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. ஆனால், பெட்ரோல் டேங்க் கொள்ளளவு மற்ற இரண்டை விட எஃப் 450 ஜிஎஸ் பைக்கில் சற்று சிறியது ஆகும்.

Dimension / Weight BMW F 450 GS RE Himalayan 450 KTM 390 Adventure S
Kerb Weight 178 kg 196 kg 182 kg
Seat Height 845 mm 825-845 mm 830 mm
Ground Clearance NA 230 mm 230 mm
Fuel Tank 14 Litres 17 Litres 14.5 Litres
Wheelbase 1465 mm 1510 mm 1470 mm
bmw f 450 gs vs royal enfield himalayan 450 vs ktm 390 adventure s

என்ஜின்: எஃப் 450 ஜிஎஸ் என பெயர் சூட்டப்பட்டாலும், இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருப்பது 420சிசி, லிக்யுடு-கூல்டு, 2-சிலிண்டர் என்ஜின் ஆகும். ஹிமாலயன் 450 மற்றும் 390 அட்வென்ச்சர் எஸ் என இரண்டிலும் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படுகிறது. இதனாலேயே, ஹிமாலயன் 450 பைக்கில் 452சிசி என்ஜின் வழங்கப்பட்டாலும், இந்த மூன்று பைக்குகளில் அதிக என்ஜின் ஆற்றலை பெறும் பைக்காக புதிய எஃப் 450 ஜிஎஸ் விளங்குகிறது.

Specification BMW F 450 GS RE Himalayan 450 KTM 390 Adventure S
Engine 420cc, liquid-cooled, parallel-twin 452cc, liquid-cooled, single-cylinder 398cc, liquid-cooled, single-cylinder
Power 48hp at 8,750rpm 40hp at 8,000rpm 46hp at 8,500rpm
Torque 43Nm at 6,750rpm 40Nm at 5,500rpm 39Nm at 6,500rpm
Transmission 6-speed 6-speed 6-speed

இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கில் அதிகப்பட்சமாக சுமார் 48 எச்பி மற்றும் 43 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. இந்த மூன்று பைக்குகளிலும் லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்படுவதை போன்று, மூன்றிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லை.

bmw f 450 gs vs royal enfield himalayan 450 vs ktm 390 adventure s

மெக்கானிக்கல் பாகங்கள்: இந்த மூன்று பைக்குகளிலும் ஒரே மாதிரியாக யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. ஆனால், சஸ்பென்ஷன் வீல் டிராவலின் நீளம் வேறுப்படுகிறது. அட்வென்ச்சர் பைக்குகளுக்கு அவசியமான இந்த வீல் டிராவலை எஃப் 450 ஜிஎஸ் சற்று சிறியதாக கொண்டுள்ளது. பிரேக் டிஸ்க்குகளின் அளவுகளிலும் பெரிய அளவிற்கு மாற்றமில்லை.

தொழிற்நுட்ப வசதிகள்: இந்தியாவில் எஃப் 450 ஜிஎஸ் பைக் பேசிக், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் ஜிஎஸ் டிராபி என மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் ஆஃப்-ரோடு பயணத்திற்கான ஃபுட்பெக்ஸ், க்னக்கிள் கார்ட்ஸ், என்ஜின் கார்ட் மற்றும் பிஎம்டபிள்யூவின் ஷிஃப்ட் அசிஸ்டண்ட் புரோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

bmw f 450 gs vs royal enfield himalayan 450 vs ktm 390 adventure s

அதுவே, ஜிஎஸ் டிராபி வேரியண்ட்டில் உயர் தரத்திலான சஸ்பென்ஷன் செட்-அப்பை பெறலாம். மறுப்பக்கம், கேடிஎம் 390 அட்வென்ச்சர் எஸ் பைக்கில் ட்யூப்லெஸ் ஸ்போக் சக்கரங்கள், ஐஎம்யு-சார்ந்த எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ், முழுவதுமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வழங்கப்படுகின்றன. ஹிமாலயன் 450 பைக்கில் எலெக்ட்ரானிக் பாகங்கள் பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், வட்ட வடிவிலான டிஎஃப்டி டிஸ்பிளே ஆனது ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் வழங்கப்படுகிறது.

விலை: பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.4.70 லட்சத்தில் இருந்து ரூ.5.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே, ஹிமாலயன் 450 ரூ.3.06 லட்சம்- ரூ.3.37 லட்சம் விலையிலும், 390 அட்வென்ச்சர் எஸ் ரூ.3.97 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வென்ச்சர் பைக்குகளை எளிதாக ஹேண்ட்லிங் செய்ய எடை குறைவாக இருப்பது முக்கியம். அத்துடன், இயக்க ஆற்றலும் சற்று அதிகமாக கிடைப்பதால் புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ஆனது இந்த வகையில் சிறந்ததாக விளங்குகிறது. மாடர்ன் பைக் என்பதால், தொழிற்நுட்ப அம்சங்களிலும் பெரியதாக குறை சொல்ல முடியாது. ஆனால், விலை தான் சுமார் ரூ.1 லட்சம் அளவிற்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Friday, April 24, 2026, 11:16 [IST]
English summary
Bmw f 450 gs vs royal enfield himalayan 450 vs ktm 390 adventure s bike comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X