ரூ.2.07 லட்சத்தில் புதிய கேடிஎம் 200 டியூக் அறிமுகம்: குயிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் வசதிகள்!

இளைஞர்கள் மத்தியில் முதல் விருப்ப தேர்வாக இருக்கும் கேடிஎம் 200 டியூக் (KTM 200 Duke) பைக்கில் முக்கியமான தொழில்நுட்ப அப்டேட்டுகள் செய்யப்பட்டு இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரைடு-பை-வயர், இருவழி குயிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடுகள் எனப் பல புதிய வசதிகள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், அதிக திறன் கொண்ட கேடிஎம் பைக்குகளில் காணப்படும் நவீன தொழில்நுட்பங்கள் தற்போது 200 டியூக் மாடலுக்கும் கிடைத்துள்ளது.

இந்த புதிய அப்டேட்டுகளுடன் கேடிஎம் 200 டியூக் பைக்கிற்கு ரூ.2,07,140 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருந்தாலும், முந்தைய மாடலை ஒப்பிடும்போது விலை வெறும் ரூ.1,552 மட்டுமே உயர்ந்துள்ளது. புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடுதலாக லிக்யுடு கார்பன், ஸ்லேட் கிரே என இரண்டு புதிய வண்ணங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தினசரி பயணத்துடன் ஸ்போர்ட்டியான ஓட்டுதல் அனுபவத்தையும் விரும்புபவர்களைக் கவரும் வகையில் இந்த அப்டேட் அமைந்துள்ளது.

KTM Duke 200

புதிய தொழில்நுட்ப வசதிகள்

புதிய கேடிஎம் 200 டியூக்கில் ரைடு-பை-வயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது த்ராட்டில் செயல்பாட்டை மின்னணு முறையில் கட்டுப்படுத்துகிறது. இருவழி குயிக் ஷிஃப்டர் மூலம் கிளட்சைப் பயன்படுத்தாமல் கியர்களை மேலே, கீழே மாற்ற முடியும். குறிப்பாக, வேகத்தை அதிகரிக்கும்போதும் குறைக்கும்போதும் கியர் மாற்றுவதை எளிதாக்கும் இந்த வசதி, ஸ்போர்ட்டியான ஓட்டுதலை விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ரூ.20 லட்சம் விலை... அறிமுகமான வேகத்தில் இந்தியாவில் விற்றுத் தீர்ந்த டுகாட்டி லிமிடெட் எடிஷன் பைக்!

ரைடிங் மோடுகள்

இந்த பைக்கில் ஸ்ட்ரீட் (Street), ரெயின் (Rain) என இரண்டு ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. சாலை மற்றும் மழை உள்ளிட்ட சூழலுக்கு ஏற்ப எஞ்சின் பவரின் செயல்பாட்டை மாற்றியமைக்க இவை உதவுகின்றன. டிராக்ஷன் கன்ட்ரோல் வசதி பின்சக்கரத்தின் பிடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. புதுப்பிக்கப்பட்ட டிஎஃப்டி (TFT) திரை வழியாக இந்த வசதிகளை கட்டுப்படுத்த முடியும். போக்குவரத்து நெரிசலில் வண்டியை அடிக்கடி நிறுத்தி நகர்த்தும்போது ஏற்படும் சிரமத்தைக் குறைக்க க்ரால் அசிஸ்ட் (Crawl Assist) வசதியும் இடம்பெற்றுள்ளது.

KTM Duke 200

எஞ்சின் அம்சங்கள்

கேடிஎம் 200 டியூக் அதிகபட்சமாக 24.6 எச்பி பவரை வெளிப்படுத்துகிறது. முன்பக்கத்தில் 43 மிமீ நீளமுடைய டபிள்யூபி யுஎஸ்டி (WP USD) ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 320 மிமீ முன்பக்க பிரேக் டிஸ்க் மற்றும் அகலமான 150 செக்ஷன் பின்பக்க டயர் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள் பைக்கின் தோற்றத்தை மேலும் ஆக்ரோஷமாக காட்டுவதுடன், அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Also Read

வண்ணத் தேர்வுகள்

புதிய மாடலில் லிக்விட் கார்பன் (Liquid Carbon), ஸ்லேட் கிரே (Slate Grey) என இரண்டு வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் லிக்யுடு கார்பன் நிறம் முழுமையான கருப்பு தோற்றத்தைக் கொண்டுள்ளது. கேடிஎம் 200 டியூக் மாடலில் இந்த முழுமையான கருப்பு வண்ணம் அறிமுகமாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்லேட் கிரே நிறம் வித்தியாசமான தோற்றத்தை விரும்புவோருக்கு மற்றொரு தேர்வாக இருக்கும்.

KTM Duke 200 Intrument Panel

டிரைவ்ஸ்பார்க் கருத்து

கேடிஎம் 200 டியூக்கில் புதிய தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்ட போதிலும் ரூ.1,552 மட்டுமே விலை உயர்த்தப்பட்டு இருப்பது அதிக மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். குறிப்பாக, குயிக் ஷிஃப்டர் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற வசதிகள் இந்த பைக்கின் மீதான ஆவலை அதிகரிக்கின்றன. புதிய ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த புதிய மாடல் நிச்சயமாக மதிப்பு வாய்ந்த தேர்வுகளில் ஒன்றாக கூறலாம்.

Article Published On: Wednesday, October 28, 2026, 16:12 [IST]
English summary
Ktm 200 duke 2026 model launched india with quickshifter traction control ride modes price features
மேலும்... #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X