ரூ.1.5 லட்சம் விலை குறைவு என்றாலும் ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒருத்தரும் வாங்க போறது இல்ல! BMW-இன் புதிய பைக்!

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து புதியதாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனையில் இந்த புதிய அட்வென்ச்சர் வகை பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஹிமாலயன் 450 (Himalayan 450) முக்கியமான போட்டியாக விளங்குகிறது. மார்க்கெட்டில் பிரபலமாக உள்ள ஹிமாலயன் 450 பைக்கை சமாளிக்கும் அளவிற்கு எஃப் 450 ஜிஎஸ் பைக்கில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தோற்றம் & ஸ்டைல்: இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் நிமிர்ந்த தோற்றம் கொண்ட ஓர் பக்கா அட்வென்ச்சர் பைக்குகள் ஆகும். இருப்பினும், இந்த இரு பைக்குகளில் பார்க்கும்போது, எஃப் 450 ஜிஎஸ் ஆனது சற்று அதிக பாலிஷ் செய்யப்பட்டது போன்று பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இதனை பார்க்கும்போது பிஎம்டபிள்யூ 1000சிசி அட்வென்ச்சர் பைக்குகளை பார்ப்பது போன்று உள்ளது.

new bmw f 450 gs vs royal enfield himalayan 450

மறுப்பக்கம், ஹிமாலயன் 450 (Himalayan 450) ஆனது நியோ-ரெட்ரோ டிசைனில் உருவாக்கப்படுகிறது. இதன் முன்பக்கத்தில் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், கூடுதல் நீளமான பின்பக்க இறுதிமுனை பகுதி, நீண்ட விண்ட்ஸ்கிரீன் மற்றும் முரட்டுத்தனமான தோற்றம் உள்ளிட்டவை இந்த பைக்கிற்கு மாடர்ன் மற்றும் பிரீமியம் லுக்கை தருகின்றன.

Specification BMW F 450 GS Royal Enfield Himalayan 450
Engine 420cc Twin Cylinder 452cc Single Cylinder
Power 48 hp @ 8750 rpm 40.02 PS @ 8000 rpm
Torque 43 Nm @ 6750 rpm 40 Nm @ 5500 rpm
Gearbox 6 Speed 6 Speed
Cooling System Liquid Cooled DOHC Liquid Cooled DOHC
Top Speed 165 Km/h -

என்ஜின்: என்ஜின் சிஸ்டத்தை பொறுத்தவரையில், இந்த இரு பைக்குகளுக்கு இடையேயான மிக முக்கிய வித்தியாசமாக, புதிய எஃப் 450 ஜிஎஸ் ஆனது இரு சிலிண்டர்களை கொண்ட என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவே, ஹிமாலயன் 450 ஆனது சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்ட பைக் ஆகும். இதற்கேற்ப என்ஜினில் இருந்து வெளிவரும் ஆற்றல் அளவுகளும் வேறுப்படுகின்றன.

new bmw f 450 gs vs royal enfield himalayan 450

புதிய எஃப் 450 ஜிஎஸ் ஆனது கூடுதல் என்ஜின் ஆற்றலினால் நெடுஞ்சாலை மற்றும் ஆஃப்-ரோடு என இரண்டிலும் சிறந்த கண்ட்ரோலை வழங்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், ஹிமாலயன் 450 பைக்கில் அதன் ஷெர்பா (Sherpa) என்ஜின் ஆனது அதன் அதிக நம்பகத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை நிரூபித்துள்ளது.

பரிமாண அளவுகள்: தோற்றத்தை பொறுத்தவரையில், ஹிமாலயன் 450 ஆனது நீளம் மற்றும் உயரமான பைக்காக விளக்குகிறது. மேலும், இந்த ராயல் என்ஃபீல்டு அட்வென்ச்சர் பைக்கில் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரமும் 1 செ.மீ அதிகமாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, எஃப் 450 ஜிஎஸ் பைக்கில் 14 லிட்டர்கள் கொள்ளளவில் மட்டுமே பெட்ரோல் டேங்க் வழங்கப்படும் நிலையில், ஹிமாலயன் 450 பைக்கில் 17 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படுகிறது. ஆனால், எஃப் 450 ஜிஎஸ் ஆனது எடை குறைவான அட்வென்ச்சர் பைக்காக விளங்குகிறது.

Dimension / Specification BMW F 450 GS Royal Enfield Himalayan 450
Length 2159 mm 2245 mm
Width 863 mm 852 mm
Height 1209 mm 1316 mm
Wheelbase 1465 mm 1510 mm
Ground Clearance 220 mm 230 mm
Seat Height 845 mm 825 mm
Kerb Weight 178 kg 196 kg
Fuel Tank Capacity 14 Litre 17 Litres

மெக்கானிக்கல் & பாதுகாப்பு அம்சங்கள்: இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளுமே இரும்பு குழாய் ஃபிரேமில் உருவாக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், முன்பக்க சஸ்பென்ஷன் செட்-அப்பில் கூட இரண்டிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், பின்பக்க சஸ்பென்ஷனில் இரண்டும் வேறுப்படுகின்றன. அதேபோல், பிரேக் செட்-அப்களும் இரண்டிலும் வேறுப்படுகின்றன. புதிய எஃப் 450 ஜிஎஸ் பைக்கில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் புரோ வழங்கப்படுகிறது.

Chassis & Hardware BMW F 450 GS Royal Enfield Himalayan 450
Chassis Steel Tube Frame Steel Tubular Frame
Front Suspension 43mm USD Forks 43mm USD Fork
Rear Suspension Adjustable Monoshock Linkage Type Monoshock
Braking (Front/Rear) 310mm / 240mm Brembo Disc 320mm / 270mm Ventilated Disc
Tyres 100/90-19 (F), 130/80-17 (R) 90/90-21 (F), 140/80-17 (R)
Wheels Aluminium Cross Spoke Aluminium Spokes
ABS Dual Channel ABS Pro Dual Channel Switchable

தொழிற்நுட்ப அம்சங்கள்: தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், எஃப் 450 ஜிஎஸ் முன்னிலை வகிக்கிறது. மாடர்ன் பிஎம்டபிள்யூ பைக் என்பதால், இதில் கியர் ஷிஃப்ட் அசிஸ்டண்ட் புரோ, ஈசி ரைடு க்ளட்ச் சிஸ்டம், 6.5 இன்ச்சில் டிஎஃப்டி டிஸ்பிளே, ஹீட்டட் க்ரிப்கள் உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Features & Technology BMW F 450 GS Royal Enfield Himalayan 450
Lighting LED Headlamp & LED Tail Lights Full LED Setup
Instrument Cluster 6.5-inch Coloured TFT Screen 4-inch Round TFT Display
Connectivity Bluetooth Connectivity with Multi-Controller Phone Connectivity, Media Controls, Google Maps Navigation
Riding Aids Ride By Wire, ABS Pro, DTC (Traction Control), MSR (Engine Brake Control) Ride By Wire, Ride Modes, Switchable ABS
Riding Modes Road, Rain, Enduro, Enduro Pro Performance, Eco (with/without ABS)
Clutch & Gearbox Anti Hopping Clutch, Gear Shift Assistant Pro Easy Ride Clutch (ERC)
Comfort & Utility Heated Grips, Adjustable Foot Brake Lever USB Type C Port, Adjustable Seats
Customisation Additional Accessories Available Additional Accessories Available

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக என்ஜின் ஆற்றல் மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களுக்கு ஏற்ப பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக்கின் விலை ஆனது அதிகமாக ரூ.4.70 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. அதுவே, ஹிமாலயன் 450 பைக்கின் விலைகள் வெறும் ரூ.3.05 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. ஆதலால், குறைந்த விலையில் ஓர் பக்காவான அட்வென்ச்சர் பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு ஹிமாலயன் 450 ஆனது எந்த விதத்திலும் குறையாக தெரியாது.

Article Published On: Tuesday, April 28, 2026, 6:45 [IST]
English summary
New bmw f 450 gs vs royal enfield himalayan 450 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+