பேரை கேட்டாலே அதிருதுல்ல... முதல்முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹிமாலயன் 750சிசி மாடல்!!

ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஹிமாலயன் 750சிசி மோட்டார்சைக்கிள் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. லடாக்கில் நடைபெற்ற ஹிமாலயன் பேஸ்கேம்ப் என்ற நிகழ்ச்சியில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு நாடுகளில் சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டுள்ள ஹிமாலயன் 750 குறித்து தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த மோட்டார்சைக்கிளில் அதிக பிரிமீயம் அம்சங்களுடன், தோற்றத்திலும் பிரம்மாண்டமான மாடலாக வர இருக்கிறது.

டிசைன் அம்சங்கள்

புதிய ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனையில் உள்ள ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை விட பெரியதாகவும் அதிக பிரீமியம் தோற்றத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட், உயரமான விண்ட்ஸ்கிரீன் மற்றும் பெரிய டேங்க் கவுல் அமைப்புடன் கூடிய பிரம்மாண்டமாக காட்சித் தருகிறது.

RE Himalayan 750

ஸ்பிளிட் சீட் அமைப்பு, உயர்த்தப்பட்ட பின் இருக்கை, பின்புறத்தில் சற்று மேல்நோக்கி அமைக்கப்பட்ட சைலென்சர் மற்றும் பின்புற லக்கேஜ் ரேக் ஆகியவை நீண்ட தூரப் பயணத்திற்கு ஏற்ற வகையில் உள்ளன. தவிரவும், பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான சேடில்பேக் மற்றும் டாப் பாக்ஸ் போன்ற நீண்ட தூர பயணங்களுக்கான டூரிங் ஆக்சஸரீஸ்களை பொருத்துவதற்கான அமைப்புகளும் உள்ளன.

Also Read

லடாக்கில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடலில் அலாய் வீல்கள் மற்றும் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு ஏற்ற வகையிலான விசேஷ டயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம் பிரேசிலில் காட்சிப்படுத்தப்பட்ட மற்றொரு புரோட்டோடைப் மாடலில் ஸ்போக் சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. இதன் மூலம் ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிள் பல்வேறு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது உறுதியாகி உள்ளது.

RE Himalayan 750

பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின்

புதிய ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிளில் முக்கிய சிறப்பம்சமாக, இதில் பேரலல் ட்வின் சிலிண்டர் கொண்ட 750சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படும் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ பவர் மற்றும் டார்க் விவரங்களை ராயல் என்ஃபீல்டு இதுவரை வெளியிடவில்லை. தற்போதைய தகவல்களின் அடிப்படையில், இந்த இன்ஜின் சுமார் 55 பிஎஸ் பவரையும் மற்றும் 60என்எம் டார்க்கையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

முன்புறத்தில் இன்வெர்டட் USD ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ப்ரீலோட் மற்றும் கம்ப்ரஷன் அட்ஜஸ்ட்மென்ட் வசதிகள் உள்ளன. பின்புறத்தில் ரிமோட் அட்ஜஸ்டபிள் ப்ரீலோட் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிளில் முன்புறம் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் உள்ளன.

RE Himalayan 750

இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் Vredestein Centauro XR டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 100 செக்ஷனும், பின்புறத்தில் 150 செக்ஷனும் உள்ள டயர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. முன்புறத்தில் டூயல் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ByBre காலிபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அட்ஜஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்களும் இடம்பெற்றுள்ளன.

அசத்தும் வசதிகள்

புதிய ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிளில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும், டயர்களில் காற்றின் அளவை காட்டும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் உள்ளன. டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் பல்வேறு ரைடிங் மோடுகள் மற்றும் ABS மோடுகளும் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஸ்விட்ச்கியரில் தனிப்பட்ட பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. தவிரவும், டிஎஃப்டி டிஸ்ப்ளேவும் இதன் முக்கிய அம்சமாக இருக்கும்.

தற்போது முதல்முறையாக இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிள் வரும் நவம்பர் மாதம் 27 முதல் 29 வரை கோவாவில் நடைபெற இருக்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் 2026 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.4.5 லட்சத்தில் இந்த பிரம்மாண்ட அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

Article Published On: Sunday, September 6, 2026, 9:35 [IST]
English summary
Royal enfield himalayan 750 showcased india first hand images cruise control tpms launch timeline
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X